அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மத்திய அரசு முடிவால் தமிழகம் பாதிப்பு:
சட்டசபையில் நிதி அமைச்சர் பட்டியல்

சென்னை:''மத்திய நிதிக்குழு பரிந்துரையால், பல மாநிலங்கள் பயன் பெற்றாலும், தமிழகம் பாதிப்பை சந்தித்துள்ளது. தற்போதுள்ள நிதி பற்றாக்குறைக்கு, இதுவும் காரணம்,'' என, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

 மத்திய அரசு முடிவால் தமிழகம் பாதிப்பு:சட்டசபையில் நிதி அமைச்சர் பட்டியல்

சட்டசபையில், நேற்று அவர் பேசியதாவது: மத்திய அரசு, 14வது நிதிக்குழு பரிந்துரையை செயல்படுத்தியதால், தமிழகம் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை விளக்குகிறேன்.

கடந்த, 2015 - 16 முதல், மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. மாநிலங்களுக்கான நிதி பகிர்வின் அளவு, மத்திய அரசின் வரி வருவாயில், 32 சதவீதத்தில் இருந்து, 42 சதவீதமாக

உயர்த்தப்பட்டது. அதே வேளையில், எட்டு மத்திய அரசு திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்களுக்கான நிதி பகிர்வு முறையில், மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

உதாரணமாக, தேசிய வேளாண் திட்டத்தில், 100சதவீதம் மத்திய அரசு மானியம் என்று இருந்ததை, 60 சதவீதமாகக் குறைத்ததால், 40 சதவீதத்தை மாநில அரசே ஏற்க நேரிட்டது. ஊரக வீட்டு வசதி திட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின் பங்கு, 75 : 25 சதவீதமாக இருந்தது; இது, 60 : 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களால், மாநில அரசுக்கு, ஆண்டுக்கு கூடுதலாக, 2,600 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

மத்திய திட்டங்களான, தேசிய ஊரக குடிநீர் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம் ஆகியவற்றுக்கு நிதி குறைக்கப்பட்டுவிட்டது. இத்திட்டங்களை, மாநில அரசு தொடர்ந்து செயல்படுத்த, தன் நிதி ஆதாரங்களை செலவிட வேண்டியுள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான நிதி பகிர்வில், தமிழகத்திற்கான பங்கும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கூடுதலாக கிடைத்திருக்க வேண்டிய, 6,000 கோடி ரூபாய் போய் விட்டது. இதை, மத்திய

Advertisement

அரசு குறைத்து விட்டதாக குறை கூறவில்லை. ஆனால், நம் மாநிலம் சந்தித்து வரும் நிதி பற்றாக்குறைக்கு இதுவும் காரணம். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

'மத்திய அரசை குறை கூறவில்லை!':

நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், தன் பதிலுரையில், 'மத்திய திட்டங்களுக்கான நிதியை, மத்திய அரசு குறைத்துள்ளது' எனக் கூறியபோதும், 'அதற்காக, மத்திய அரசை குறை கூற விரும்பவில்லை' என்பதையும், இரு இடங்களில் பதிவு செய்தார்.

Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா
30-ஜூலை-201620:00:24 IST Report Abuse

புதுகை வானம்பாடி கடன் வாங்கிய பணம் contraineril போய் விட்டது ...... கன்டைனரை திருப்பி தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்தால் கடன் அடைந்துவிடும்

Rate this:
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
30-ஜூலை-201619:10:25 IST Report Abuse

Narayanஇலவச, மானிய, டாஸ்மாக் அரசு நடத்தும் தமிழகம் முதலில் அரசு எப்படி நடத்த வேண்டும் என்பதை கற்க வேண்டும், பிறகு அதிக நிதியை கேட்கலாம்

Rate this:
gurudevan - Ahmedabad,இந்தியா
30-ஜூலை-201617:41:23 IST Report Abuse

gurudevanமுதல்வர் ஜெயாவோட புகைப்படத்தை போடாம காசு சேர்த்தாலே அந்த 2600 கோடி ரூபாய் வந்துவிடும். இதை இழப்புன்னு சொல்லாதீங்க. கட் அவுட் வைக்காதீங்க. எங்க காசை இப்படி கொள்ளை அடிக்கவே சினிமாலேர்ந்து வந்தீங்க.

Rate this:
Bobgi Gee - ciombatore,இந்தியா
30-ஜூலை-201621:56:33 IST Report Abuse

Bobgi Geeமிக சரியாக சொன்னீர்கள். ...

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X