தே.மு.தி.க.,வினர் இழுப்பு 'ஆப்பரேஷன்':களத்தில் அ.தி.மு.க., சுறுசுறுப்பு

Added : ஜூலை 31, 2016 | கருத்துகள் (1) | |
Advertisement
தே.மு.தி.க.,வில் எஞ்சிஉள்ள நிர்வாகிகளையும் இழுக்கும், 'ஆப்பரேஷனை' அ.தி.மு.க.,வினர் துவங்கி உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில், ஏற்பட்ட தோல்வியால், தே.மு.தி.க., கலகலத்து போய் உள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும், தி.மு.க., பக்கம் சென்று விட்டனர். 90 சதவீத பதவிகள்;தேர்தலுக்கு பின்னும், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி, கீழ்மட்ட

தே.மு.தி.க.,வில் எஞ்சிஉள்ள நிர்வாகிகளையும் இழுக்கும், 'ஆப்பரேஷனை' அ.தி.மு.க.,வினர் துவங்கி உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில், ஏற்பட்ட தோல்வியால், தே.மு.தி.க., கலகலத்து போய் உள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும், தி.மு.க., பக்கம் சென்று விட்டனர்.
90 சதவீத பதவிகள்;தேர்தலுக்கு பின்னும், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி, கீழ்மட்ட நிர்வாகிகளும், தி.மு.க.,விற்கு படையெடுத்தனர். இதனால், தே.மு.தி.க., வில், 90 சதவீத பதவிகள் காலியாக உள்ளன. அவ்வப்போது, தே.மு.தி.க., முக்கிய நிர்வாகிகளை மட்டும், அ.தி.மு.க., தங்கள் பக்கம் இழுத்து சென்றது. இந்நிலையில், வரும் அக்., மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, தே.மு.தி.க.,வில் எஞ்சியுள்ள, நிர்வாகிகளை இழுக்கும் வேலையை, அ.தி.மு.க., தலைமை துவங்கி உள்ளது.
தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:தே.மு.தி.க.,வினர், அக்கட்சியில் இருந்து வெளியேறி, தி.மு.க.,வில் சேருவது, அ.தி.மு.க., தலைமையை யோசிக்க வைத்தது. தலைமை உத்தரவு:அதைத் தொடர்ந்து, 'தே.மு.தி.க.,வின் எஞ்சி உள்ள மற்ற நிர்வாகிகளை, அ.தி.மு.க.,வில் சேர்க்க வேண்டும்' என, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு, தலைமை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தே.மு.தி.க., வினரை இழுக்கும் பேச்சுவார்த்தையை, அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க.,வினர் துவங்கியுள்ளனர்.
இப்படி வளைக்கப்படும் நிர்வாகிகளை, உள்ளாட்சி தேர்தல் வரை, தொடர்ச்சியாக முதல்வர் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும், 4ம் தேதி நடக்கும் பிரம்மாண்ட விழாவில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தே.மு.தி.க.,வினர், அ.தி.மு.க.,வில் இணைகின்றனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின. -- நமது சிறப்பு நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
01-ஆக-201606:26:53 IST Report Abuse
Panneerselvam Chinnasamy வாழ்க ஜனநாயகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X