புதுடில்லி;டில்லியில் ஆம் ஆத்மி கட்சி பெண் தொண்டர் தற்கொலை தொடர்பாக, அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,வை போலீசார் கைது செய்துள்ளனர். டில்லியில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். வடமேற்கு டில்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பெண் தொண்டர், ரமேஷ் பரத்வாஜ் என்பவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக கூறி, போலீசில் புகார் அளித்திருந்தார்.
அப்புகாரில், ரமேஷ் பரத்வாஜுக்கு, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., சரத் சவுகான் உதவி வருவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அப்புகாரின் பேரில், ரமேஷ் பரத்வாஜ் கைது செய்யப்பட்டு பின், ஜாமினில் விடப்பட்டார். இந்நிலையில், கடந்த ஜூலை, 19ல், ஆம் ஆத்மி பெண் தொண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் தொடர்பாக, ரமேஷ் பரத்வாஜை, கடந்த, ஜூலை, 26ல், போலீசார் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக, சரத் சவுகான் உட்பட மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரிடமும், பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE