ஹிந்து மதத்தை காப்பாற்றுபவர்கள் என்று கூறிக் கொள்பவர்களால் தலித் மக்கள் தாக்கப்படுவதாக, பா.ஜ., - எம்.பி., உதித் ராஜ் கூறியுள்ளார். பா.ஜ., குண்டர்களால், தலித் மக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, தம் எதிர்ப்பை தெரிவிக்க, உதித் ராஜ் உள்ளிட்ட பா.ஜ., தலித் எம்.பி.,க்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வர் - ஆம் ஆத்மி
வாரிசு அரசியல் இல்லை!
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோலவே பல்வேறு கட்சிகளும் உள்ளன. ஆனால், பா.ஜ.,வில் எனக்கு பிறகு யார் தலைவராக வருவார் என்பது யாருக்குமே தெரியாது. பா.ஜ.,வில், 600க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு குடும்பமே கிடையாது; அவர்களுடைய இறுதிச் சடங்கை கூட யார் செய்வார்கள் என்பது தெரியாது. பா.ஜ.,வில் மட்டுமே, வாரிசு அரசியல் இல்லை.அமித் ஷாதலைவர், பா.ஜ.,
சிறந்த சமுதாயம் உருவாகணும்!சிறந்த பண்பாட்டையும், நெறிமுறைகளையும் தொழில்நுட்பத்துடன் கலந்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அப்போது தான், உயர்ந்த லட்சியங்களை அவர்களால் எட்ட முடியும். கல்வித்துறையில், அதிகளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அறிவியல் ஞானத்தின் அடிப்படையில், சிறந்த சமுதாயத்தை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.தேவேந்திர பட்னவிஸ்மஹாராஷ்டிர முதல்வர் - பா.ஜ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE