பாட்னா: பீஹாரில், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்துவதில் விடாப்பிடியாக இருந்த அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், திடீரென கள்ளுக்கு விலக்கு அளிக்க முடிவெடுத்துள்ளார்.
மதுவிலக்கு அமல்பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், ஐக்கிய ஜனதாதளம் - ராஷ்ட்ரீய ஜனதாதள கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு, மதுவிலக்கு அமலில் உள்ளது.
இதனை கடுமையாக்கும் பொருட்டு, மதுவிலக்கு அமல் சட்டத்தில் புதிய விதிமுறைகளை கொண்டு வரப்போவதாக, நேற்று முன்தினம், முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார்.
அதன்படி, வீட்டில் மது வைத்திருந்தாலோ, அருந்தினாலோ, அவரது வீட்டில் உள்ள, 18 வயது நிரம்பிய அனைவரையும் சிறையில் அடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட உள்ளது. இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளமும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்தின் நெருக்கடியை அடுத்து, கள் விற்பனைக்கு விலக்கு அளிக்கப்படும் என, பீஹார் அரசு நேற்று அறிவித்தது.
உடலுக்கு நலன்..
''கள், போதைப் பொருள் அல்ல; உடலுக்கு நலன் தரும் பானம் என்பதால் அதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது,'' என, அம்மாநில ஆயத்தீர்வை துறை அமைச்சர் அப்துல் ஜலில், நேற்று கூறினார். அதே அமைச்சர் ஜலில், 'கள் விற்பனையை அனுமதிக்க முடியாது' என, நேற்று முன்தினம் கடுமையாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE