அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
திருச்சி சிவாவை தாக்கியது ஏன்?:
சசிகலா புஷ்பாவிடம் ஜெ., விசாரணை

டில்லி விமான நிலையத்தில், தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவாவை, அ.தி.மு.க., - எம்.பி., சசிகலா அடித்ததன் பின்னணியில், பண விவகாரம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி சிவாவை தாக்கியது ஏன்?:சசிகலா புஷ்பாவிடம் ஜெ., விசாரணை

தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவா மற்றும் அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா இடையே, நெருக்கமான நட்பு இருக்கிறது என, சில மாதங்களுக்கு முன் பரபரப்பாக தகவல் வெளியானது. அதை உறுதி செய்வது போல, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும், 'வாட்ஸ் ஆப்'பில் வெளியாகின.

பின், 'அந்த படம் போலியானது; சசிகலா புஷ்பாவும், அவரது கணவர் லிங்கேஸ்வர திலகனும் இருக்கும் படத்தை, 'மார்பிங்' செய்து வெளியிட்டனர்' என, தகவல்கள் பரவின. சசிகலா புஷ்பாவும், அவரது கணவரும் இருக்கும் படங்களும் வாட்ஸ் ஆப்பில் வெளியானது; இதைத் தொடர்ந்து, அப்போதைய பரபரப்பு அடங்கியது.

இருந்தாலும் சசிகலா புஷ்பா, தன் ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக பேசியது போன்ற ஆடியோவும் அடுத்தடுத்து வாட்ஸ் ஆப்பில் வெளியாக, அ.தி.மு.க., தலைமை, சசிகலா புஷ்பா மீது அதிருப்தி அடைந்தது.

இப்படி தொடர் சர்ச்சைகளில் சிக்கியதை தொடர்ந்து, சசிகலா புஷ்பா வகித்து வந்த மகளிர் அணி செயலர், ராஜ்யசபா கொறடா என, அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்டன.இந்நிலையில் தான், திருச்சி சிவாவை, டில்லி விமான நிலையத்தில் வைத்து, சசிகலா புஷ்பா தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட விவகாரம், அ.தி.மு.க., தலைமையை கடும் எரிச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது.

இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்த தமிழக உளவுத்துறை போலீசார், இதன்

பின்னணியில், பெரிய பண விளையாட்டு உள்ளது என, அறிக்கை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து, உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

திருச்சி சிவா மற்றும் சசிகலா புஷ்பா ஆகியோர் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியான போதே, அது தொடர்பான விபரங் களை, ஆட்சி மேலிடத்துக்கு கொடுத்து விட் டோம்.அதன்பின்னும், அவர்கள் இருவருக்கும் இடையே கொடுக்கல் - வாங்கல் பிரச்னை இருந்துள்ளது.

பெரும் தொகை ஒன்றை, சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவிடம் கொடுத்திருந்தார்; சமீபகாலமாக அந்த பணத்தை திரும்ப கேட்டு, அவர் போன் செய்துள்ளார்.

போனை எடுக்காமல், திருச்சி சிவா தவிர்த்ததை தொடர்ந்தே, டில்லி விமான நிலையத்தில் வைத்து சிவாவை, சசிகலா புஷ்பா தாக்கியுள்ளார்.இந்த அறிக்கைக்கு பின் தான், சசிகலா புஷ்பாவை அழைத்து, முதல்வர் ஜெயலலிதா விசாரணை நடத்தியுள்ளார்.

அடுத்து, இந்த பிரச்னையில் என்ன நடக்கும் என்பது, முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கை க்குட்பட்டது.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

சசிகலா ராஜினாமா?:

திருச்சி சிவா எம்.பி.,யுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, கட்சித் தலைமைக்கு விளக்கம் அளிப்பதற்காக, நேற்று மாலை, ௩:௦௦ மணிக்கு, போயஸ் தோட்டம் சென்றார், அ.தி.மு.க., - எம்.பி., சசிகலா புஷ்பா.அப்போது, கட்சி மேல்மட்ட தலைவர்கள் சிலர், அவரிடம், டில்லி விமான நிலையத்தில் நடந்த மோதல் குறித்து கேட்டறிந்ததாகவும், பின் சசிகலா புஷ்பாவிடம் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கியதாகவும், அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

கருணாநிதியிடம்விளக்கம்:

சசிகலா புஷ்பாவால், தான் தாக்கப்பட்டது குறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து, நேற்று விளக்கம் அளித்தார் திருச்சி சிவா. அப்போது, 'உன்னையும், சசிகலா புஷ் பாவையும் இணைத்து புகைப்படங்கள் வெளியான போதே, அதன் மீதான நடவடிக்கைக்கு வலி யுறுத்தி இருந்தால், இந்த பிரச்னை, இத்தனை துாரத்துக்கு நீண்டிருக்காது. தி.மு.க.,

Advertisement

வழக்கறிஞர்களை ஆலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவும்' என, திருச்சி சிவாவுக்கு, கருணாநிதி ஆலோசனை வழங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

தரக்குறைவாக பேசினேனா?திருச்சி சிவா விளக்கம்:

''அ.தி.மு.க., அரசு பற்றி, தரக்குறைவாக எதுவும் பேசவில்லை,'' என, தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:

சென்னை வருவதற்காக, நேற்று முன்தினம் மதியம், டில்லி விமான நிலையம் வந்தேன்.
இந்த வாரம், என் மனைவியின் நினைவு தினம் வருவதால், சென்னைக்கு வர இருந்த பயணத்தை ரத்து செய்து விட்டு, டில்லியி லேயே தங்க முடிவு எடுத்தேன். அதற்காக, டில்லி விமான நிலையம் வரை வந்த நான், அங்கிருந்து திரும்பினேன்.

அப்போது, என் பின்னால் வந்த அ.தி.மு.க., - எம்.பி., சசிகலா புஷ்பா, என் சட்டையை பிடித்து இழுத்து அடித்தார்;

பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்தனர். பெண் என்பதால், அவருடன் நான் மல்லுக் கட்ட வில்லை.பாதுகாப்பு அதிகாரிகளுடன், அ.தி. மு.க., அரசு குறித்து நான் தரக்குறைவாக பேசிய தாலேயே, சசிகலா என்னை தாக்கியதாகக் கூறியுள்ளார்.

நான் அப்படியெல்லாம் பேசவில்லை. ஜன நாயக நாட்டில் பொது இடத்தில் கருத்து வேறுபாட்டுக்காக தாக்குவதை நியாயப்படுத்த முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
03-ஆக-201616:31:21 IST Report Abuse

kowsik Rishiதிருச்சி சிவா சசிகலா புஷ்பா விஷயம் பற்றி திருச்சி சிவா மூடி மழுப்புவது நன்றாக தெரிகிறது. அதை பற்றி பாண்டே இத்தியாதிகள் ஒரு ஷோ?? திருச்சி சிவா 4 அறை வாங்கி கொண்டும் பெருந்தன்மையாக 1 அரை தான் என்று சொல்கிறார் என்று ஊடகங்கள் சால்ஜாப்பு பேசுகிறன்றன. ஊடகங்கங்கள் டீவீ ஷோ????? திருச்சி சிவா வை சசிகலா புஷ்பா ஏன் பொதுமக்கள் முன்னிலையில் அடித்தார் அறைந்தார் உதைத்தார் கேள்ளுங்கள். இதில் கட்சி, தலைவி, அரசு எல்லாம் சும்மா பேச்சு நான் சொல்லிறேன் ஒரு பெண்ண தண்நிலை தாக்கப்படும்போது தான், தன் சுயம் சிதைக்கப்படும்போது தான் இதை எல்லாம் செய்வார் திருச்சி சிவா சசிகலா புஷ்பாவை என்ன பேசினார் என்று ??? இன்றைய சமுதாயத்தில் இந்த கிசு கிசு, சீண்டுதல், வக்கிரம் பேசுதல் எல்லாம் தான் வெளியே தெரியும் கைகலப்புகள், சண்டைகளுக்கு காரணம். என் தலைவியை, அரசை, பற்றி சொன்னதால் தான் அறைந்தேன் என்பதே ஒரு பொய்.

Rate this:
A shanmugam - VELLORE,இந்தியா
03-ஆக-201611:47:25 IST Report Abuse

A shanmugamதமிழ் நாட்டில் தலைக்கு மேல் மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகள் எவ்வளவோ உள்ளன. அதை எல்லாம் விட்டுவிட்டு தேவையில்லாமல் அடி தடி சம்பவங்களுக்கு முதல்வர் முக்கியத்துவம் தரக்கூடாது.

Rate this:
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
02-ஆக-201614:22:05 IST Report Abuse

Barathanபுஷ்பா சொல்வதிலிருந்து, ஜெ வும், புஷ்பாவை அறைந்திருக்கிறார் என்பது உண்மையா என்பதை அறிய நீதிபதி குமாரசாமியின் தலைமையில் தமிழக அரசு ஒரு விசாரணை கமிஷனை அமைத்தாலும் அமைக்கலாம்

Rate this:
மேலும் 86 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X