வேக கட்டுப்பாட்டு கருவி இன்று முதல் கட்டாயம்:22 லட்சம் கனரக வாகனங்களுக்கு சிக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேக கட்டுப்பாட்டு கருவி இன்று முதல் கட்டாயம்:22 லட்சம் கனரக வாகனங்களுக்கு சிக்கல்

Added : ஆக 01, 2016 | கருத்துகள் (1)
Share
சேலம்:தமிழகத்தில் இயக்கப்படும் கனரக வாகனங்களுக்கு, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது கட்டாயம் என்ற நடைமுறை, இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழக போக்குவரத்து துறை கணக்கின்படி, 2016 மார்ச், 31 வரை, 2.22 கோடி வாகனங்கள் இயக்கத்தில் உள்ளன. இதில், 1.96 கோடி போக்குவரத்து அல்லாத வாகனங்களும், 26 லட்சம் சரக்கு போக்குவரத்து வாகனங்களும் அடக்கம். இவற்றில், லாரிகள் மட்டும், 3.53 லட்சம் உள்ளன.10

சேலம்:தமிழகத்தில் இயக்கப்படும் கனரக வாகனங்களுக்கு, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது கட்டாயம் என்ற நடைமுறை, இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழக போக்குவரத்து துறை கணக்கின்படி, 2016 மார்ச், 31 வரை, 2.22 கோடி வாகனங்கள் இயக்கத்தில் உள்ளன. இதில், 1.96 கோடி போக்குவரத்து அல்லாத வாகனங்களும், 26 லட்சம் சரக்கு போக்குவரத்து வாகனங்களும் அடக்கம். இவற்றில், லாரிகள் மட்டும், 3.53 லட்சம் உள்ளன.
10 மாதங்களுக்குப்பின்விபத்துகளை குறைக்கும் வகையில், மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம், 2015 அக்., 1 முதல், கனரக வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என அறிவித்தது. தமிழகத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்த, போக்குவரத்து சங்கங்கள் கால அவகாசம் கேட்டு கொண்டதால், 10 மாதங்களுக்கு பின், இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதில், 2015 அக்., 1க்கு பின், தயாரிக்கப்பட்ட வாகனங்களில், நிறுவனங்களே, வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தி விட்டன. அதற்கு முந்தைய ஆண்டுகளில் இயக்கத்துக்கு கொண்டு வரப்பட்ட, 22 லட்சம் வாகனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலர் தன்ராஜ் கூறியதாவது: தமிழகத்தில், வாகனங்களுக்குவேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என்பதை, லாரி உரிமையாளர்கள் எதிர்க்கவில்லை. ஆனால், எந்தெந்த வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என்பதை, மத்திய, மாநில அரசுகள் விளக்க வேண்டும் என்று தான் கோரி வந்தோம். எங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
அவகாசம் தேவை:அதே நேரத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குறிப்பிட்ட நிறுவனத்தின் கருவியைத் தான் பொருத்த வேண்டும் என நிர்ப்பந்தம் செய்வதும், அதற்காக லஞ்சம் கேட்பதும் தொடர் கதையாக உள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தகுதி சான்றிதழ் (எப்.சி.,), புதுப்பிக்கும் பணிகள் பாதிக்கப்படுவதோடு, தினந்தோறும், 1,000 லாரிகள் தகுதி சான்றிதழ் பெற முடியாமல் நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.
எனவே, மத்திய, மாநில அரசுகள், லாரி தொழிலை காக்கும் வகையில், எந்தெந்த வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என்பதையும், எந்த நிறுவனத்தின் கருவியை பொருத்த வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி, கருவிகளை பொருத்த கால அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X