பதிவு செய்த நாள் :
பதவி விலக முடியாது:சசிகலாபுஷ்பா

டில்லி விமான நிலையத்தில், தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவாவுடன் கைகலப்பில் ஈடுபட்ட அ.தி.மு.க., - எம்.பி., சசிகலா புஷ்பாவை, பதவி விலகும்படி, கட்சி தலைமை உத்தரவிட்டது.

பதவி விலக முடியாது:சசிகலாபுஷ்பா


ஆனால், 'பதவி விலக முடியாது' என, முரண்டு பிடிக்கும் சசிகலா புஷ்பா, அ.தி.மு.க., தலைமைக்கு எதிராக, ராஜ்யசபாவில் நேற்று பிரச்னையை கிளப்பினார். தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, பரபரப்பு புகார் தெரிவித்ததை அடுத்து, அவரை அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கி, முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.


துாத்துக்குடி மாவட் டம், முதலுார் அடுத்த அடையல் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகலா புஷ்பா.இவரது கணவர் லிங்கேஸ்வர திலகன். தற்போது சென்னையில் வசித்து வரும் சசிகலா புஷ்பா, கடந்த உள்ளாட்சித் தேர்தலில், துாத்துக்குடி மேயராக தேர்வு செய்யப்பட்டார்; 2014 ஏப்ரலில், ராஜ்யசபா எம்.பி.,யானார்.அடுத்து ராஜ்யசபா கொறடா, அ.தி.மு.க., மகளிர் அணி செயலர், தலைமை செயற்குழு உறுப்பினர் என, பதவிகள் தேடி வந்தன. அவரது திடீர் வளர்ச்சி, கட்சி நிர்வாகிகளை ஆச்சரியப் படுத்தியது. ஆனால், 2016ல் அவருக்கு சரிவு துவங்கியது. அவரிடம் இருந்து, மகளிர் அணி செயலர் உட்பட, அனைத்து கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டன.தி.மு.க., - எம்.பி.,யுடன் அவர் நட்பு பாராட்டியதே, பதவி பறிப்புக்கு காரணம் என, தகவல் வெளியானது. அப்போதே அவரது எம்.பி., பதவி பறிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. சட்டசபைத் தேர்தல் நெருங்கியதால், அ.தி.மு.க., தலைமை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இச்சூழ்நிலையில், தி.மு.க., - எம்.பி., சிவாவுடன், சசிகலா புஷ்பா நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள், சமூக வலைதளங்களில் பரவின. 'என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக, என் கணவருடன் இருக்கும் படங்களை, 'மார்பிங்' செய்து வெளியிட்டுள்ளனர்' என, அவர் மறுத்தார். இந்த சர்ச்சை முடிவதற்குள், குடிபோதை குறித்து, அவர் தன் ஆண் நண்பருடன் உரையாடும், 'ஆடியோ' வெளியாகி, அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், டில்லி விமான நிலையத்தில், தி.மு.க., - எம்.பி., சிவாவுடன் திடீர் கைகலப்பில் ஈடுபட்டார். இந்த விஷயம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, நேற்று முன்தினம், அவர் சென்னை போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டார். அப்போது அவரை, முதல்வர் ஜெயலலிதா கடுமையாக கண்டித்ததாக, தகவல் வெளியானது.
இது பற்றி, நேற்று அவர் ராஜ்யசபாவில் பேசும் போது, 'என்னை பதவிவிலகும்படி, அ.தி.மு.க., தலைமை வற்புறுத்துகிறது. ஆனால், பதவி விலக மாட்டேன். என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது' என்று புகார் கூறினார். அவருக்கு ஆதரவாக, தி.மு.க., - காங்கிரஸ் எம்.பி.,க்களும் குரல் கொடுத்ததால், பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டது.
இது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாகவும், அவருடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது என்றும், முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


பதவி முடிவது எப்போது?சசிகலா புஷ்பா, 2014 ஏப்ரல் மாதம், அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவி காலம், 2020 ஏப்., 1ல் முடிகிறது.


'ஜெயலலிதா என்னை தாக்கினார்'ராஜ்யசபாவுக்கு வெளியே சசிகலா புஷ்பா அளித்த பேட்டி:டில்லி விமான நிலையத்தில், திருச்சி சிவாவுடன் நடந்த மோதல் சம்பவத்திற்கும், தற்போது என்னை ராஜினாமா செய்யச் சொல்லி, அ.தி.மு.க., தலைமை வற்புறுத்துவதற்கும், எந்த சம்பந்தமும் இல்லை.
சென்னை, போயஸ் தோட்டத்தில், என்னை ஜெயலலிதாவே தாக்கினார்; என் மொபைல் போனையும் பறித்துக் கொண்டனர். ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தி கடிதம் எழுதி வாங்கினர். வெளியில் வந்து, என் குடும்பத்தாரைக்கூட சந்திக்க விடவில்லை. கட்டாயப்படுத்தி, டில்லிக்கு அழைத்து வந்தனர்.
டில்லியில், என் வீட்டுக்கு செல்ல அனுமதிக்

Advertisement

காமல், தமிழ்நாடு இல்லத்தில் தங்கும்படி கட்டளையிட்டனர். நான் மறுத்து வீட்டுக்கு வந்தேன். இரவு முழுக்க யோசித்தேன். ராஜினாமா செய்வதில்லை என, முடிவெடுத்தேன்.
காலையில், ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி முன், என்னை அழைத்து போய் ராஜினாமா செய்ய வற்புறுத்தினர்; மறுத்து விட்டேன். என்னை அழைத்து, ராஜினாமா செய்யும்படி முறையாக கூறியிருந்தால், செய்து விட்டு போய் இருப்பேன். ஆனால், என்னை அநாவசியமாக அசிங்கப்படுத்தி அநாகரிகமாக நடத்தி விட்டனர். அதனால், ராஜினாமா செய்ய மாட்டேன்.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.

போலீஸ் பாதுகாப்புடில்லியில், எம்.பி.,க்களுக்கான குடியிருப்புகள் அமைந்துள்ள, 'நார்த் அவென்யூ' பகுதியின், 135ம் எண் வீட்டில், சசிகலா புஷ்பா வசித்து வருகிறார். அங்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சசிகலா புஷ்பா வீட்டில் தாக்குதல்
சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரனின் வீடு, நெல்லை மாவட்டம், கரைச்சுத்து உவரியில் உள்-ள-து.இதில், பாண்டி என்ற மெக்கானிக் வாடகைக்கு இருக்கிறார். நேற்று மாலை, லிங்கேஸ்வரன் வீட்டுக்கு சென்ற மர்ம நபர்கள், கல்வீசி தாக்கினர். இதனால், வீட்டு முகப்பு கதவின் கண்ணாடி சேதமடைந்-த-து. பின், அங்கு போலீ-ஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


பதில் சொல்லியாக வேண்டும்: ஸ்டாலின்


''சசிகலா புஷ்பா புகாருக்கு, முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார். அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா, 'பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. முதல்வர் என்னை கன்னத்தில் அறைந்தார்' என,
குற்றஞ்சாட்டி உள்ளார். இதை, முச்சந்தியில் நின்று சொல்லிவிட்டு போகவில்லை; ராஜ்யசபாவில் கூறி உள்ளார். இதற்கு, முதல்வர் ஜெயலலிதா பதில் சொல்லியாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (141)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Chennai,இந்தியா
03-ஆக-201612:42:18 IST Report Abuse

Ramமக்களவைக்கு தேர்தலில் நின்று வெற்றி பெற்று செல்ல முடியாதவர்கள் குறுக்கு வழியில் ராஜ்ய சபாவுக்கு செல்ல கட்சி மேலிடத்தில் நல்ல பெயர் வாங்கினால் போதும். எப்படிப்பட்டவர்களாயினும் ராஜ்ய சபா எம்பி ஆக முடியும் என்ற நிலை மாறவேண்டும். நன்கு படித்த பண்பாளர்கள் இல்லையா? ஏன் கட்சியினர் இதை பொறுப்புடன் செய்வதில்லை. ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் நாமினேஷன் முறையில் இவர்களை தேர்வுசெயும் முன் அவர்களை பற்றி ஊடகங்களிலோ அல்லது மறைமுகமாகவோ நன்கு அறிந்து தேர்வு செய்தல் வேண்டும். கேட்பார்களா

Rate this:
Ram - Chennai,இந்தியா
03-ஆக-201606:29:48 IST Report Abuse

Ramஇருவரும் தமிழகத்தை பொறுத்தவரை எதிர் கட்சி எம்பிக்கள். ஆனால் ராஜ்யசபை பொறுத்தமட்டில் பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதிகள். இவர்களுக்குள் எதோ பர்சனல் பூசல் இருந்துள்ளது. இது இவர்கள் கட்சி மேலிடத்துக்கு எவ்வாறு தெரியாமல் போயிற்று? இவர்கள் சண்டை பொது இடம் வரை வந்து பரஸ்பரம் மரியாதையை குறைந்து நடந்துள்ளனர். இதற்கு MP சிவா அறை வாங்கியதற்கு போலீஸ் complaint கொடுக்கலாம். அவர் மன்னித்து விட்டுவிட்டார். கட்சி மேலிடம் அவருக்கு என்ன சொல்லிற்று. எம்பி புஷ்பா நடந்து கொண்டது மிகக்கேவலம்.அவர் தண்டனைக்குரியவர். எனவே கட்சி மேலிடம் action எடுத்துள்ளது. மாறாக எம்பி சிவா கேட்கவேண்டிய பாதுகாப்பை எம்பி புஷ்பா ராஜ்யசபாவில் கேட்டது கேலிக்குரியது. மொத்தத்தில் தமிழக கலாச்சாரம் கேவலப்படுத்தப்பட்டுள்ளது. இருவரையும் கட்சி மேலிடங்கள் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். இதுபோல் மீண்டும் நடைபெற வண்ணம் நல்ல தண்டனை வழங்கவேண்டும். எம்பி நபர்களை தேர்வு செய்யும் போது கட்சி மேலிடம் கவனமாய் ஆராய்ந்து தேர்வு செய்திடவேண்டும். ion கோளாறு. மக்களவை உறுப்பினருக்கு தேர்வில் கொடுக்கும் அதே கவனம் மாநிலங்களவை உறுப்பினர் தேர்விலும் கடைபிடிக்க வேண்டும். மொத்தத்தில் கட்சி மேலிடங்கள் தங்கள் தலைகுனிவிற்கு தாங்களே காரணமாகி விட்டார்கள்.

Rate this:
Lakshmanavelu Chendurnathan - Tirunelveli,இந்தியா
02-ஆக-201621:37:41 IST Report Abuse

Lakshmanavelu Chendurnathan"சிவாவிற்கு அடி வீழ்ந்தாலும் பரவாயில்லை, புஷ்பாவின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் " அட, மானம் இல்லாத தளபதியே உமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி ஒரு கேடா ?

Rate this:
மேலும் 138 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X