அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆரணியில் பட்டு ஜவுளி பூங்கா: ஓ.எஸ்.மணியன் அறிவிப்பு

Added : ஆக 03, 2016
Share
Advertisement
சென்னை: ''திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில், பட்டு ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன,'' என, கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.திருவண்ணாமலை மாவட்டத்தில், துணிநுால் கல்லுாரி துவக்க வேண்டியதன் அவசியம் குறித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு கொடுத்த, கவன ஈர்ப்பு தீர்மானம், நேற்று சட்டசபையில் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் மீது நடந்த
ஆரணியில் பட்டு ஜவுளி பூங்கா: ஓ.எஸ்.மணியன் அறிவிப்பு

சென்னை: ''திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில், பட்டு ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன,'' என, கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.திருவண்ணாமலை மாவட்டத்தில், துணிநுால் கல்லுாரி துவக்க வேண்டியதன் அவசியம் குறித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு கொடுத்த, கவன ஈர்ப்பு தீர்மானம், நேற்று சட்டசபையில் எடுத்து கொள்ளப்பட்டது.
அதன் மீது நடந்த விவாதம்:
தி.மு.க., - வேலு: திருவண்ணாமலை மாவட்டத்தில், 1.50 லட்சம் பட்டு மற்றும் கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். நெசவாளர்களின் குழந்தைகள், நெசவுத் தொழிலில் புதிய தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை படிக்க விரும்புகின்றனர்.இம்மாவட்டத்தில் இருந்து, 6,000 மாணவ, மாணவியர், ஜவுளி தொடர்பான தொழிற்கல்வி படிக்க, சென்னை, கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே, இங்கு துணி நுால் கல்லுாரி துவக்க வேண்டும்.அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: இந்த மாவட்டத்தில், கைத்தறி பருத்தி துணி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 22; பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கம், ஐந்து என, மொத்தம், 27 சங்கங்கள் மட்டுமே உள்ளன. இதில், 9,800 நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இது தவிர, தனியார் நெசவாளர்கள், 9,000 பேர் உள்ளனர். திருவண்ணாமலையில், ஒரு நெசவாளர் கூட்டுறவு சங்கம் மட்டுமே உள்ளது. அண்ணாமலையார் கோவிலுக்கு, சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால், அங்குள்ள கோ - ஆப்டெக்ஸில், நான்கு கோடி ரூபாய்க்கு துணிகள் விற்பனையாகின்றன. ஜவுளி தொடர்பான படிப்புகள் நடத்தும் கல்லுாரிகள், தமிழகத்தில், 10 உள்ளன. தொழில்நுட்பக் கல்லுாரிகளும் உள்ளன. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில், துணிநுால் கல்லுாரி அமைக்கும் யோசனை இல்லை. ஆரணி பகுதியில், கைத்தறி பட்டு ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அப்பகுதி தொழில் முனைவோர் முன்வந்து, 37 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது; அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X