சென்னை:''தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, மின்சார துறையில் என்னென்ன தவறுகள் செய்ய முடியுமோ, எல்லாவற்றையும் செய்து, அந்தத் துறையையே குட்டிச் சுவராக்கினர்,'' என, முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
சட்டசபையில், நேற்று அவர் பேசியதாவது:
நான் சபைக்குள் வந்த போது, தி.மு.க., - எம்.எல்.ஏ., ரங்கநாதன் பேசிக் கொண்டிருந்தார். அவர், 'தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்றொரு மாயத் தோற்றத்தை, நீங்கள் ஏற்படுத்த பார்க்கிறீர்கள்' என்றார். நாங்கள், அந்த மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்க வில்லை.
மத்திய மின்சார குழுமம், தமிழ்நாடு, மின்சார உற்பத்தியில் உபரி மாநிலம் என, திட்ட வட்டமாக தெரிவித்திருக்கிறது.
இது, இந்தியாவில் உள்ள, அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது. கொள்கை விளக்கக் குறிப்பை படித்திருந்தால், தமிழ்நாடு, மின்மிகை மாநிலமா, இல்லையா என்ற குழப்பம், அவருக்கு
வந்திருக்காது. 2010ல், சராசரியாக ஒரு நாளைய மின் பயன்பாடு, 20 கோடி யூனிட்அளவாக இருந்தது. இந்த ஆண்டு, 30 கோடி யூனிட் அளவாக உயர்ந்துள்ளது.
ஏப்ரல், 29ல், உச்சகட்ட மின் தேவையான, 15 ஆயிரத்து, 343 மெகாவாட் அளவையும், உச்ச மின் பயனீட்டளவான, 34.16 கோடி யூனிட்டையும், மின் வாரியம் பூர்த்தி செய்தது.
இது தவிர, மத்திய மின்சார ஆணையம் வெளியிட்ட, மின் தேவை, மின் உற்பத்தி சமன்பாட்டு அறிக்கையில், '2016 - 17ல், தமிழகம், 1,165 கோடி யூனிட் அளவிற்கு, கூடுதலாக உற்பத்தி செய்து, மின் மிகை மாநிலமாக திகழும்' என்று திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சி இருந்த போது, மின்சாரத் துறையில் என்னென்ன தவறுகள் செய்ய முடியுமோ, எல்லாவற்றையும் செய்து, மின்சாரத் துறையையே குட்டிச்
சுவராக்கினர்.
அவர்கள் செய்தது எல்லாம் தவறு. நாங்கள் ஆட்சிக்கு வந்த
பிறகு, 2011 முதல், 2016 வரை, தி.மு.க., செய்த தவறுகளை எல்லாம் சரி
செய்தோம்.இருட்டில் மூழ்கியிருந்த தமிழகத்தை, நாங்கள் ஒளிபெறச் செய்தோம்; ஒளிமயமான மாநிலம் ஆக்கினோம். இன்றைய தினம், மின்சாரத் துறை சம்பந்தமாக, எதிர்க்கட்சியினர் என்ன குற்றச்சாட்டு சொல்ல நினைத்தாலும், என்ன பழி போட நினைத்தாலும், அது நடக்கவில்லை.
ஏனென்றால், தவறு முழுவதும் அவர்கள் பக்கம் உள்ளது. சரி செய்த சாதனைகள் எல்லாம், எங்கள் பக்கம் இருக்கிறது. அதனால், எல்லா வற்றுக்கும் மின்துறை அமைச்சர் சரியான பதிலடி கொடுப்பதால், அதற்கு மேல் இங்கே இருக்க மாட்டார்கள் என்று எதிர் பார்த்தேன். அதன்படி, அவர்கள் வெளிநடப்பு செய்து விட்டனர்.இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (45)
Reply
Reply
Reply