பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஜி.எஸ்.டி., வரி விதிப்பு அமலுக்கு வந்தால்
பழைய தங்க நகைகள் விற்போருக்கு இழப்பு

மும்பை: சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்தால், நகை கடைகளில் பழைய நகைகளை விற்போர், தேய்மானம், சேதாரம் உள்ளிட்டவற்றுக்கான பிடித்தத்துடன், வரிக்கு நிகரான தொகையை யும் இழக்க நேரிடும்.

ஜி.எஸ்.டி.,  வரி விதிப்பு அமலுக்கு வந்தால் பழைய தங்க நகைகள் விற்போருக்கு இழப்பு

மத்திய அரசு, பல்வேறு வரிகளை, ஜி.எஸ்.டி., என்ற ஒரே வரியின் கீழ் கொண்டு வர உள்ளது. இதனால், நாடு முழுவதும், பொருட்களின் விலை சீராக இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.சில சட்ட நடைமுறைகளுக்கு பின், அடுத்தாண்டு ஏப்ரல் முதல், இந்த சட்டம் அமலுக்கு வரும் என தெரிகிறது. அப்படி அமலுக்கு வந்தால், பெட்ரோல், மது உள்ளிட்ட சில பொருட்களை தவிர,

அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு, 18 சதவீத வரி விதிக்கப்படும்.

இதனால், நகை கடைகளில், பழைய நகைகளை விற்போருக்கு, ஜி.எஸ்.டி., வரிக்கு நிகரான பண இழப்பு ஏற்படும். தற்போது, நகை வியாபாரிகள், மூலப் பொருட்களுக்கு செலுத்தப்பட்ட வரியை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், சலுகை பெறுகின்றனர். இதன்படி, தங்க கட்டிகள் வாங்கும் போது செலுத்திய வரியை, நகை விற்பனை யின்போது, திரும்பப் பெறுகின்றனர்.

ஆனால், பழைய தங்க நகைகளை உருக்கி பெறப்படும் தங்கத்திற்கு, மூலப்பொருட் களுக் கான வரியை திரும்பப் பெறும் சலுகை கிடை யாது. அதனால், நகை வியாபாரிகள், ஜி.எஸ்.டி., வரியால் தங்களுக்கு ஏற்படும் இழப்பை, பழைய நகைகளை விற்போரின் தலையில் கட்டுவர். பழைய நகைகளின் மதிப்பில், வரிக்கு நிகரான தொகையை பிடித்தம் செய்து வழங்குவர்.
பழைய நகைகளை உருக்குவதன் மூலம், 5 - 10 சதவீத தங்கம், மறு பயன்பாட்டிற்கு வருகிறதுதங்கம் விலை உயர்ந்திருந்தால், பழைய நகைகள் அதிக அளவில் விற்பனைக்கு வரும் தங்கம் விலை குறைந்திருந்தால், பழைய நகைகள் விற்பனை குறையும்.ஜி.எஸ்.டி., அமலானால்,

Advertisement

பழைய நகைகளை விற்போர், 18 சதவீத வரிக்கு நிகரான தொகையை, நகையின் மதிப்பில் இழக்க நேரிடும்.
-சுரேந்திர மேத்தா, இந்திய தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்க செயலர்
சந்தையில் தங்கம் விலை நிலவரத்தை அறிந்து, பழைய நகைகளை விற்பனை செய்ய வேண்டும். இதை அறியாமல், பழைய நகை களை விற்பனை செய்தால், அதிக இழப்பை சந்திக்க நேரிடும்.
-பிரித்விராஜ் கோத்தாரி , நிர்வாக இயக்குனர், ரித்திசித்தி புல்லியன்ஸ்

Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
07-ஆக-201618:51:24 IST Report Abuse

தாமரை இதனால் பழைய நகைகளை கடையில் அடிமாட்டு விலைக்குப் போடுவது குறையும்.பழைய நகைகளை அழித்து மீண்டும் இவர்கள் விரும்பும் மாடலுக்குச் செய்து கொள்ளலாம்.இதனால் கிராமபி புறங்களில் உள்ள பொற்கொல்லர்களூக்கு மீண்டும் வாழ்வு கிட்டும். எதையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதைக் காட்டிலும் பிராக்கடிகளாக பாருங்கள்.

Rate this:
ezhumalaiyaan - Chennai,இந்தியா
06-ஆக-201600:51:09 IST Report Abuse

ezhumalaiyaanஇந்த செய்திக்கு ஆதாரம் உள்ளதா? அல்லது மீடியாக்கள் வியாபாரிகளுக்கு மக்களை எப்படி ஏமாற்றலாம் என்று சொல்லிக்கொடுக்கிறதா?

Rate this:
Ramesh Ramamoorthy - Chennai,இந்தியா
06-ஆக-201600:29:02 IST Report Abuse

Ramesh Ramamoorthyபழைய நகையை உருக்கி வரும் தங்கத்தில் மீண்டும் நகை செய்து தானே விற்க போகிறார்கள். அதெப்படி வரியை அவர்களால் திரும்ப பெற முடியாது?

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X