புதுடில்லி:அனைத்து மாநிலங்களிலும் உள்ள, 609 மாநில அமைச்சர்களில், 34 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.
டில்லியைச் சேர்ந்த, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற அமைப்பு, தேர்தல் குறித்த ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது:
* நாடு முழுவதும் உள்ள, 29 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களின், 620 அமைச்சர்களில், 609 பேர் குறித்து ஆய்வு செய்யப்பட்டது
* இதில், 34 சதவீத அமைச்சர்கள், அதாவது, 210 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன
* இதில், 113 பேர் மீது கொலை, கொலை
முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான வழக்குகள் >உள்ளன
* கிரிமினல் அமைச்சர்களில், 18 பேருடன்,
மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. பீஹாரில், 11 பேர், தெலுங்கானாவில், 9
பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது
* கிரிமினல் வழக்கு உள்ளஅமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு, 9.52 கோடி ரூபாய். கிரிமினல் வழக்கு இல்லாதவர்களின் சராசரி சொத்து மதிப்பு, 8.10 கோடி ரூபாய்
* மொத்தமுள்ள, 609 அமைச்சர்களில், 76 சதவீதம் பேர், அதாவது, 462 பேர் கோடீஸ்வரர்கள். இவர்களுடைய சராசரி சொத்து மதிப்பு, 8.59 கோடி ரூபாய்
* ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியின் பொன் குரு நாராயணா, 496 கோடி ரூபாய் சொத்து களுடன், கோடீஸ்வர அமைச்சர்களில் முதலிடத் தில் உள்ளார். கர்நாடகாவின் காங்., அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு, 251 கோடி ரூபாய் சொத்து உள்ளது
* அதிக சொத்து மதிப்புள்ளகோடீஸ்வர அமைச்சர் கள் உள்ள மாநிலங்களில் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது.
இந்த மாநிலத்தில் உள்ள, 20 கோடீஸ்வர அமைச்சர்களின் சராசரி சொத்து, 45.49
கோடி ரூபாய். கர்நாடகாவின், 31 அமைச்சர்களின் சராசரி சொத்து, 36.96 கோடி
ரூபாய். அருணாச்சல
பிரதேசத்தின், 7 அமைச்சர்களின் சராசரி சொத்து, 32.62 கோடி ரூபாய்
* மிகவும் குறைந்த சொத்துள்ள அமைச்சர்கள், திரிபுராவில் உள்ளனர். இங்குள்ள, 12 அமைச்சர் களின் சராசரி சொத்து, 31.67 லட்சம் ரூபாய்
* அருணாச்சல பிரதேசம், பஞ்சாப், புதுச்சேரி யில் உள்ள அனைத்து அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள். கர்நாடகாவில், 97 சதவீத அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள்
* மொத்தமுள்ள அமைச்சர்களில், 51 பேர் பெண்கள். ம.பி.,யில் தான், அதிக பெண் அமைச்சர்கள் உள்ளனர். அதற்கடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (13)
Reply
Reply
Reply