சென்னை:'யார் ஆட்சியில், அதிகளவில் பாலங்கள் கட்டப்பட்டன' என்பதில், அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் இடையே, சட்டசபையில் விவாதம் நடந்தது.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - மா.சுப்பிரமணியன்: தமிழக மக்கள் தொகையில், 48.45 சதவீதம் பேர், நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். இது, 2030ம் ஆண்டில், 67 சதவீதமாக உயரும் என, கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிராம மக்கள், நகரங்களை நோக்கி குடியேற துவங்கி உள்ளனர். எனவே, நகரங்களில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
தி.மு.க., ஆட்சியில், சென்னை மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டது. சென்னை மேயராக ஸ்டாலின் இருந்த போது, பல்வேறு விருதுகளை மாநகராட்சி பெற்றது.
அமைச்சர் வேலுமணி: கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும், முதல்வர் செய்து தருகிறார். அ.தி.மு.க., ஆட்சியில், 10க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளோம்.
முதல்வர் ஜெயலலிதா: நகர்ப்புறங்கள் வளர்ச்சி அடைகின்றன என்றால், கிராமங்களில் உள்ள மக்கள் எல்லாம், நகரங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர் என்று அர்த்தமல்ல. கிராமங்கள், ஊராட்சி கள், பேரூராட்சிகள்,
நகராட்சிகள் எல்லாம், மாநகராட்சி அந்தஸ்திற்கு படிப்படியாக உயர்ந்து வருகின்றன என்பது பொருள்.
மா.சுப்பிரமணியன்:
சென்னை யில், ஸ்டாலின் மேயராக இருந்தபோது, 10 மேம்பாலங்களை கட்ட
திட்டமிட்டு, ஒன்பது மேம்பாலங்களுக்கு, 94 கோடி ரூபாய் செலவிற்கு,
மதிப்பீடு தயாரிக்கப் பட்டது. ஆனால், அப்பாலங்களை, 61 கோடி ரூபாய் செலவில்
முடித்து, 33 கோடி ரூபாயை மிச்சப்படுத்தினார். உங்கள் ஆட்சியில்,
சென்னையில், ஒரு பாலத்திற்கு அடிக்கல்நாட்டி உள்ளீர்களா?
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி: வேளச்சேரி, மேடவாக்கம், கீழ்கட்டளை, கொளத்துார் உட்பட, பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டு உள்ளது. உங்கள் ஆட்சியில், போரூர் பாலம் கட்டுவதாக அறிவித்ததோடு சரி. அதற்கு நிதி ஒதுக்கி, நிலம்
கையகப்படுத்தி, பாலப் பணிகளை துவக்கியவர் முதல்வர். தமிழகம் முழுவதும், தி.மு.க., ஆட்சியில், 1,739 பாலங்கள் கட்டப்பட்டன. கடந்த ஐந்து ஆண்டு களில், அ.தி.மு.க., ஆட்சியில், 2,095 பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன. எனவே, சென்னையில் பாலம் எதுவும் கட்டவில்லை என, தவறான கருத்தை கூற வேண்டாம்.
முதல்வர் ஜெயலலிதா: சென்னை யில், ஐந்து ஆண்டுகளில், 115 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து மேம்பாலங்கள், 10 சிறு பாலங்கள், மூன்று சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு உள்ளன. இதில், 17 கோடி ரூபாய் மதிப்பில், கத்திவாக்கம் நெடுஞ்சாலை - காக்ரேன் பேசின் சாலையில், மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, பிப்., 28ம் தேதி திறக்கப்பட்டது.
அமைச்சர் வேலுமணி: முதல்வர் ஜெயலலிதா, தேவைப்படும்இடங்களில், பாலங்களை கட்டி வருகிறார். தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட
பாலங்களால், பொதுமக்களுக்கு பயனில்லை. ஒரு மணி நேரத்திற்கு, 966 வாகனங்கள்
செல்லும் இடங்களில், பாலம் கட்ட வேண்டும். ஆனால், ஒரு மணி நேரத்திற்கு, 630
வாகனங்கள்
செல்லும் இடங்களில், பாலம் கட்டி உள்ளீர்கள். தமிழகம் முழுவதும், உள்ளாட்சி கள் சார்பில், தி.மு.க., ஆட்சியில், 163 பாலங்கள் கட்டப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சியில், 539 பாலங்கள் கட்டப்பட்டன.
முதல்வர் ஜெயலலிதா: எதிர்க்கட்சி உறுப்பினர், இந்த விவாதத்தை எப்படி கொண்டு போகிறார்; இந்த விவாதம் போகும் திசையை பார்க்கும்போது, நாம் தமிழக சட்டசபையில் அமர்ந்திருக்கிறோமா; இல்லை, சென்னை மாநகராட்சி மன்றத்தில் அமர்ந்திருக்கிறோமா என்ற சந்தேகம் எனக்கே வந்துவிட்டது.
அமைச்சர் ஜெயக்குமார்: தி.மு.க., ஆட்சியில் பாலம் கட்டும் போது, தனியார் ஏஜன்சி மூலம் மதிப்பீடு தயார் செய்தனர். 100 கோடி ரூபாய் செலவாகும் என்றால், 200 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து, 110 கோடி ரூபாயில் பணியை முடித்தனர். அதில், 10 கோடி ரூபாய் யாருக்கு சென்றது என்பது தெரியவில்லை. மா.சுப்பிரமணியன்: அரசு பணிகளுக்கு, பொதுப்பணித் துறை தவிர, தனியார் நிறுவனங்களை கொண்டு மதிப்பீடு தயாரிக்க முடியாது.
முதல்வர் ஜெயலலிதா: இவர், துறை மானிய கோரிக்கை மீது பேசாமல், 'சென்னையில், 10 பாலங்களை கட்டினோம்; நிதியை மிச்சப்படுத்தினோம்' என, அதையே கூறி வருகிறார். எனவே, வேறு பொருளை பேசுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (30)
Reply
Reply
Reply