ரகுராம் ராஜன் தேவதூதரா? : சுப்ரமணியசாமி சாடல்| Dinamalar

ரகுராம் ராஜன் தேவதூதரா? : சுப்ரமணியசாமி சாடல்

Added : ஆக 08, 2016 | கருத்துகள் (35)
Advertisement
ரகுராம் ராஜன் தேவதூதரா? : சுப்ரமணியசாமி சாடல்

புதுடில்லி : ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மீது பா.ஜ., எம்.பி., சுப்ரமணியசாமி கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன், அவரை அவ்வப்போது விமர்சித்தும் வருகிறார். ரகுராம் ராஜனை ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கையும் விடுத்தார்.
ரகுராம் ராஜன் மீதான சுப்ரமணியசாமியின் குற்றச்சாட்டுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், தனது பதவியை நீட்டிக்க விருப்பமில்லை என்று ரகுராம் ராஜனே சொன்னதை தொடர்ந்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்த விவகாரத்தில் ரகுராம் ராஜனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ரகுராம் ராஜனை, சுப்ரமணியன் சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். ரகுராம் ராஜனை மக்களை காக்க வந்த தேவதூதர் போல் ஊடகங்கள் காட்டியதாக சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுப்ரமணியசாமி, ரகுராம் ராஜனுக்கு ஆதரவாக ஊடகங்கள் அனைத்தும் பேச வேண்டும் என நாட்டிற்கு வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. ரகுராம் ராஜனை ஒரு தேவ தூதன் போலவும், என்னை ஒரு அரக்கன் போலவும் ஊடங்கங்கள் சித்தரித்தன. ஆனால் உண்மையில், வட்டி விகிதங்களை உயர்த்தி ரகுராம் ராஜன் இந்திய பொருளாதாரத்திற்கு தீங்கு இழைத்துவிட்டார். குறுகிய மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் வங்கிகளிடம் இருந்து கடன் பெற முடியாத அளவிற்கு செய்துவிட்டார் என தெரிவித்தார். தற்போது இது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Ramamoorthy - Chennai,இந்தியா
08-ஆக-201622:54:02 IST Report Abuse
Ramesh Ramamoorthy Su Swamy is jealous of Mr.Rajan. That's it.
Rate this:
Share this comment
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
08-ஆக-201619:01:17 IST Report Abuse
பிரபு அவரு தீங்கு இழைத்தாருன்னு நீங்க மட்டும் தான் சொல்லுறீங்க. அவரை பற்றி எல்லோருமே நல்லாத்தான் சொல்லுறாங்க.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
08-ஆக-201618:48:48 IST Report Abuse
Pasupathi Subbian வங்கிகளின் தொழிலே சிறு, சிறு சேமிப்புகளை ஒருங்கிணைத்து , வட்டிக்கு கொடுத்து , அதில் லாபத்தை பார்ப்பது. அரசாங்கமோ அல்லது ரிசர்வ் வாங்கியோ ஒரு குறிப்பிட்ட கொள்கையை அறிமுகப்படுத்தி, அதன் படி நடக்க கட்டுப்பாடு செய்யும்போது, அவை வேறு வழி இன்றி அதன் படி நடப்பதும், அதனால் வரும் லாப நட்டங்களை தாங்களே தாங்கிக்கொள்வதும் நடைபெறுவது வழக்கமான ஒன்று. முன் காங்கிரஸ் காலத்தில் இதுபோன்ற பலருக்கு இந்தியன் வங்கி முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ்ணன் அவர்கள் , பல பல காங்கிரஸ் தலைவர்களுக்கு இவ்வாறு கடன்களை அள்ளி கொடுத்து , அவை வாராக்கடன் ஆகி , அவருக்கு அவப்பெயரை சம்பாதித்து தந்தது. அந்த கடன்களை வசூல் செய்ய அரசியல் ரீதியாக பல பல தடைகளை அந்த வங்கி சந்திக்க நேர்ந்தது. ஆக பெரும் பெரும் கடன்கள் கொடுக்கும்போது, அதற்க்கு தக்க பாதுகாப்புகள் , பொறுப்புகளுக்கு போதிய நடவடிக்கை எடுப்பதே இல்லை என்பதே இப்போது நடப்பு. சாதாரண மக்களுக்கு கடன் கொடுக்கும் பொழுது பார்க்கப்படும் நடவடிக்கைகள் , பெரும்பெரும் கடன்கள் கொடுக்கப்படும் பொழுது பார்ப்பதே இல்லை . அதற்காக வங்கிகள் யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது என்பதல்ல அர்த்தம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X