ஆக்ஷன் கேரக்டரில் நடிக்க விருப்பம் - சொல்கிறார் நடிகை ஜெனுயா

Added : ஆக 08, 2016 | கருத்துகள் (1)
Advertisement
சின்னத்திரையில் தோன்றி ரசிகர்களின் மனதை கவர்ந்து தற்போது வெள்ளித் திரையில் தடம்பதித்து இளைஞர்களை சுண்டி இழுக்கும் பார்வையுடன் வலம் வருகிறார் நடிகை ஜெனுயா. தன்னைப்பற்றி மனம் திறக்கிறார் இங்கே...அவருடன் பேசியதிலிருந்து...* பிறந்தது, வளர்ந்தது, படித்ததுகாரைக்குடி அருகே திருப்புத்தூரில் பிறந்தேன். அழகப்பா பல்கலையில் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து, எம்.சி.ஏ.,
ஆக்ஷன் கேரக்டரில் நடிக்க விருப்பம் - சொல்கிறார் நடிகை ஜெனுயா

சின்னத்திரையில் தோன்றி ரசிகர்களின் மனதை கவர்ந்து தற்போது வெள்ளித் திரையில் தடம்பதித்து இளைஞர்களை சுண்டி இழுக்கும் பார்வையுடன் வலம் வருகிறார் நடிகை ஜெனுயா. தன்னைப்பற்றி மனம் திறக்கிறார் இங்கே...அவருடன் பேசியதிலிருந்து...* பிறந்தது, வளர்ந்தது, படித்ததுகாரைக்குடி அருகே திருப்புத்தூரில் பிறந்தேன். அழகப்பா பல்கலையில் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து, எம்.சி.ஏ., படித்துள்ளேன். வீட்டிற்கு மூத்த பெண். ஒரு தம்பி உள்ளார். * நடிப்பில் ஆர்வம் எப்படிசிறுவயதில் வீட்டில் 'டிவி' பார்த்து 'டான்ஸ்' கற்றுக்கொண்டேன். பள்ளி விழாக்களில் நடனத்தில் முதலிடம் பிடித்து பரிசு பெற்றுள்ளேன். மற்ற மாணவிகளுக்கும் டான்ஸ் கற்றுத்தருவேன். அப்போது இருந்தே எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. பெற்றோரிடம் விருப்பத்தை தெரிவித்தேன். முதலில் மறுத்தவர்கள் எனது ஆர்வத்தை பார்த்து சம்மதித்தனர்.* இத்துறையில் நுழைந்தது எப்போது மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்து தனியார் 'டிவி'யில் 'வீடியோ ஜாக்கி' யாக பணி செய்தேன். அதன் பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், குறும்படங்களிலும் நடித்தேன். 'டப்பிங் ஆர்டிஸ்ட்டாக' விளம்பர படங்களுக்கு 'வாய்ஸ்' கொடுத்தேன். படப்பிடிப்பின்போது கேமரா முன் நிற்க பதட்டம் இருக்காது. ஆனால், அதற்கு முன் நடக்கும் தகுதித்தேர்வு தான் பதட்டமாக இருக்கும். * நடித்த 'டிவி' தொடர் பற்றி...அழகி தொடரில் ஷாலினி கேரக்டரில் நடித்தேன். திருமாங்கல்யம், சிவசங்கரி, வாணி ராணி, பொன்னுாஞ்சல் தொடர்களில் நடித்தேன். இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன. சீரியல் இயக்குனர் ராம்பாலாவின் சிங்காரதெரு என்ற 'லைவ்' தொடரில் முதல் டேக்கிலே பாராட்டு பெற்றேன்.* முதல் சினிமா வாய்ப்பு நடிகர் ராஜ்பிரசாத் நடித்த 'சதுரன்' படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்தேன். தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் 'வாகா' படத்தில் 'ஹீரோ' விற்கு சகோதரியாக நடிக்கிறேன். * பிடித்தது சினிமாவா, சீரியலா...இரண்டையும் பிரித்து பார்ப்பது இல்லை. எந்த கேரக்டரையும் சாதாரணமாக எடுத்து கொள்ள மாட்டேன். அந்த கேரக்டராகவே மாறி நடிக்க வேண்டும் என கருதுவேன். பிச்சைக்காரி வேடம் கொடுத்தால் உண்மையான பிச்சைக்காரியாகவே நடிப்பேன். எனது நடிப்பின் மீதுள்ள நம்பிக்கையை எப்போதும் குறைத்தே மதிப்பிட மாட்டேன். * சினிமாவில் யாருடன் நடிக்க ஆசைநடிகர் விஜய் உடன் நடிக்க வேண்டும் என மிகுந்த ஆவலாக உள்ளேன். ஏற்கனவே, விஜயின் தந்தை சந்திரசேகர் இயக்கிய 'நையப்புடை' சினிமாவில் நடித்தேன். அதில் என் நடிப்பை பார்த்து அவர் பாராட்டினர். அப்போது அவர் விஜய் உடன் நடிக்க நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என கூறியதை பெரிய பாராட்டாக கருதுகிறேன். வெள்ளித்திரையிலும் தடம் பதிக்க உறுதி கொண்டுள்ளேன்.* ரோல் மாடல் யார் என் பெற்றோர்தான் எனக்கு ரோல் மாடல். ஏனென்றால் அவர்கள் தான் நல்லது, கெட்டது எது எனக்கூறி, நல்ல விஷயங்களை மட்டுமே செய்ய வலியுறுத்தினர். * 'டிவி' சீரியல்கள் சமூகத்தை நல்வழிப்படுத்துகிறதாசீரியல்கள் நம் வாழ்க்கை நடைமுறைகளை வெளிப்படுத்துகின்றன. இன்பம், துன்பம் சேர்ந்ததுதான் வாழ்க்கை. அதில் துன்பமான கேரக்டரின்போது 'அழுகாச்சி' யாக நடிப்பதை மக்கள் ரசிப்பார்கள்.எதையும் 'பாஸிட்டிவாக' எடுத்துக்கொள்ள வேண்டும்.* எப்படிப்பட்ட கேரக்டர் பிடிக்கும்சினிமா, 'டிவி'யில் ஆக் ஷன் கேரக்டர் நடிக்க பிடிக்கும். வைஜெந்தி ஐ.பி.எஸ். படம் போன்ற ஆக் ஷன் படத்தில் நடிக்க ஆசை. சூட்டிங் ஸ்பாட்டில் எப்படி படப்பிடிப்பு நேரத்திற்கு முன்னதாக சென்றுவிடுவேன். அங்குள்ள எல்லோரிடமும் சகஜமாக பேசுவேன். எனவே அவர்களும் என்னை வீட்டில் ஒருவராக நினைத்துப் பழகுவர்....தொடர்புக்கு...vj.jenuya@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
08-ஆக-201616:06:31 IST Report Abuse
Nallavan Nallavan ஐ.டி. கொஞ்சம் டவுனாத்தான் இருக்கு .... ஒத்துக்கிடுறேன் .... ஆனா எம்.சி.ஏ. படிச்சுப்புட்டு நடிகை ஆவுறது கரப்பான் பூச்சி -ய நசுக்கிப் போட எம்.பி.பி.எஸ். படிச்சா மாறி கீது வாத்தியாரே .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X