விருதுநகரில் ரூ.2 ஆயிரம் கோடியில் மின் துணை நிலையம்; ஜெயலலிதா - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விருதுநகரில் ரூ.2 ஆயிரம் கோடியில் மின் துணை நிலையம்; ஜெ.,

Added : ஆக 09, 2016 | கருத்துகள் (23)
Advertisement
விருதுநகரில் ரூ. 2 ஆயிரம் கோடியில் தொகுப்பு மின் துணை நிலையம்; ஜெ.,

சென்னை: ரூ. 2 ஆயிரம் கோடி செலவில் விருதுநகரில் தொகுப்பு மின் துணை நிலையம் அமைக்கப்படும் என தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெ., கூறினார். 110 விதியின் கீழ் சட்டசபையில் முதல்வர் ஜெ., மின் தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டார்.

அவர் சபையில் கூறியதாவது: மக்களுக்கு தடையற்ற மின்சாரம் அத்தியாவசியம் ஆகும். மின்சாரம் பயன்படுத்தும் அளவே ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை அளவிடும் கருவியாக உள்ளது.

2008 நவம்பர் முதல் உயர் அழுத்த தொழிற்சாலைகளிள் வணிக பயனீட்டாளர்கள் 40 சத மின் வெட்டு, 20 சதவீத மின் வெட்டு, வீட்டு உபயோகிப்பாளருக்கு பல மணி நேரம் மின்வெட்டு என இருந்து வந்தது. கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெறப்படுதல், மத்திய அரசிடம் இருந்து மின்சாரம் பெறுதல் என பல்வேறு நடவடிக்கை மூலம் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறோம். 2011 ஜூன் முதல் மின்வெட்டே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. தேர்தல் வாக்குறுதி படி அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வழங்கப்படுகிறது.

தற்போது மின்வெட்டு இல்லாத, மின் மிகை மாநிலம் என்ற பெருமை கிட்டியுள்ளது. மேலும் மின் உற்பத்தி அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.


* கடந்த 5 ஆண்டுகளில் 7,297 கோடி செலவில் 79 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன .


* சென்னையில் புறநகரில் 17,535 மின் மாற்றிகள் உள்ளன. மின் விநியோக தடை அகற்ற 1, 750 கோடியில் சென்னை புறநகர் பகுதியில் உள்ள மின் மாற்றிகள், மெயின் மாற்றியாக அமைக்கப்படும்.


* சென்னை மாநகரில் 38,844 மின் தூண் பெட்டிகள் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனை சீரமைக்க 270 கோடி செலவில் நவீனமாக்கப்படும்.


* கோதையாறு 1 புனல் மின் நிலையத்தில் 60 மெகாவாட் திறனுடன் செயல்பட்டு வருகிறது. 150 மில்லியன் யூனிட் என்ற இலக்கில் இருந்து 193 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இதன் ஆயுள் காலம் கருதி ரூ. 80 கோடி செலவில் நவீனப்படுத்தப்படும். 43 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும். இதன் மூலம் 225 மில்லியன் யூனிட்டாக மின் உற்பத்தி உயரும்.

* ராமநாதபுரம் உப்பூரில் 1600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு கொதிகலன் செயலாக்கம் கொண்டு வர இதர பாகங்கள் வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளன. இந்த அனல் மின் நிலையத்திலிருந்து மின்சாரம் மற்ற பகுதிகளுக்கு எடுத்து செல்ல ரூ. 2 ஆயிரம் கோடி செலவில் விருதுநகரில் தொகுப்பு மின் துணை நிலையம் அமைக்கப்படும். கயத்தாறு, கமுதி, தப்புக்குண்டு பகுதியில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை . சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்த இது விருதுநகர் துணை மின் நிலையத்துடன் இணைக்கப்படும்.


* ரூ. 270 கோடியில் 3,878 மின் தூண் பெட்டிகள் நவீனப்படுத்தப்படும்.


* சென்னை, விழுப்புரம், வேலூர், மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட தலைமை பொறியாளர் , மேற் பார்வை பொறியாளர் அலுவலகங்களில் 20 கிலோ வாட் சூரிய மின் மேற்கூரை ஏற்படுத்தப்படும். 2. 52 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் கிடைக்க வழி செய்யும். 26 கோடி செலவிடப்படும்.


4,126 கோடி செலவில் பல்வேறு மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மின் உற்பத்தி அதிகரிப்பதுடன் , சீரான மின் விநியோகம் கிடைக்கும். இது போன்ற நவீனப்படுத்துதல் மூலம் 225 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி கிடைக்கும். இவ்வாறு ஜெ., கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJ - chennai,இந்தியா
09-ஆக-201620:46:48 IST Report Abuse
RAJ Does it mean the Factories and Industries are not working properly in the state. Already automotive Industries have reduced the production and thereby Manpower too. At what cost the Electricity produced and at what cost it is being sold to public and Industries. If the cost of Electricity is high, better not to produce the surplus units. If surplus are there, why not the Government think to reduce the rates.
Rate this:
Share this comment
Cancel
rmr - chennai,இந்தியா
09-ஆக-201620:37:37 IST Report Abuse
rmr பொய் பொய் இது பெரிய மகா பொய் , இப்படி பொய் சொல்லுபவர்களுக்கு தண்டனை உண்டு என்று சொன்னால் இவர்கள் இப்படி சொல்வார்களா ? இப்படி மக்களை ஏமாத்துறதுக்கு ஏதாச்சும் உருப்படியா செய்யலாம் ,
Rate this:
Share this comment
Cancel
Raja - சென்னை,இந்தியா
09-ஆக-201619:03:35 IST Report Abuse
Raja மின் குறை மாவட்டமான எங்கள் திருவள்ளூர் மாவட்டத்தை மின்மிகை மாநிலமான தமிழகத்துடன் இணைத்துக்கொள்ள அம்மா அவர்கள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X