பதிவு செய்த நாள் :
தற்கொலை?
அருணாச்சல் 'மாஜி' முதல்வர் கலிகோ புல்...:
பதவி பறிபோன விரக்தியால் விபரீத முடிவு?

இடாநகர்:வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்., அதிருப்தி தலைவருமான கலிகோ புல், 47, தன் வீட்டில் துாக்கில் தொங்கிய நிலையில், சடலமாக நேற்று மீட்கப்பட்டார்.

அருணாச்சல் 'மாஜி' முதல்வர் கலிகோ புல் தற்கொலை?: பதவி பறிபோன விரக்தியால் விபரீத முடிவு?


பதவி பறிபோன விரக்தியால், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என, தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள், மாநிலம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டதால், பதற்றம் நிலவுகிறது.

கடந்த பிப்ரவரியில், அருணாச்சலப் பிரதேசத்தில், காங்கிரசைச் சேர்ந்த, முதல்வர் நபாம் துகிக்கு எதிராக, அதிருப்தி எம்.எல்.ஏ.,க் களை திரட்டி, ஆட்சியை கவிழ்த்தவர் கலிகோ புல். பின், பா.ஜ., ஆதரவுடன், மாநில முதல்வராக இவர் பதவியேற்றார். பிப்., 19ம் தேதி முதல், கடந்த ஜூலை வரை, அப்பதவியில் கலிகோ புல் நீடித்தார்.

இதை எதிர்த்து காங்., தொடர்ந்த வழக்கில், கலிகோ புல்லை சுப்ரீம் கோர்ட் நீக்கியது. அதை தொடர்ந்து, நபாம் துகி சம்மதத்துடன், பெமா காண்டு முதல்வராக பதவியேற்றார்.

முதல்வர் பதவியிலிருந்து விலகிய போதும், இடாநகரில் உள்ள, அரசு இல்லத்திலிருந்து காலி செய்யாமல், கலிகோ புல் வசித்து வந்தார். மூன்று மனைவியர், நான்கு குழந்தைகள் இருந்த போதும், யாருடனும் சேராமல், கடந்த ஒரு வாரமாக, அரசு இல்லத்தில், கலிகோ புல் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை, மின்விசிறியில் துாக்கிட்ட நிலையில், கலிகோ புல் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து, அவரது

மூன்று மனைவியரில் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். நேற்று காலை, 7:00 மணி முதல், 7:30 மணிக்குள், அவர் இறந்திருக்கக் கூடும் என, மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கலிகோ புல் இறந்த செய்தியை அறிந்த அவரது ஆதரவாளர்கள், முதல்வர் பெமா காண்டுவின் பங்களா உள்ள பகுதியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'கலிகோ புல்லின் உடலை எடுக்க விடமாட்டோம்; அரசு இல்லம் உள்ள, இ.எஸ்.எஸ்., செக்டாரிலேயே உடலை புதைக்க வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தினர். முதல்வரும், அமைச்சர் களும், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவர்கள் கோஷமிட்டனர்.

கலிகோ புல்லின் உடலை வைப்பதற்காக எடுத்து வரப்பட்ட சவப்பெட்டி, பத்திரிகையாளர்கள் முன்னிலையில், ஆதரவாளர்களால் சேதப்படுத்தி எரிக்கப்பட்டது. ஒரு கும்பல், துணை முதல்வர் சவுனா மெயின் வீட்டை நோக்கி சென்றது. அந்த வீட்டின் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய அக்கும்பல், அங்கிருந்த, 10க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியது.

அப்பகுதியில், புதிதாக கட்டப்பட்டு வந்த சில கட்டடங்களை, வன்முறையாளர்கள் தீயிட்டு எரித்தனர். தொழில் துறை அமைச்சர் தபாங் தலோவின் வீடும் சேதப்படுத்தப்பட்டது. இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து, உயர்மட்டக் குழு கூட்டம் நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, கலிகோ புல் இறந்த வீடு அருகிலும், அமைச்சர்களின் இல்லங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும், போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கலிகோ புல்லின் உடல், அவர் தங்கியிருந்த இல்லத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக, அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

'பதவி பறிபோன விரக்தியில், கலிகோ புல் தற் கொலை செய்திருக்கலாம்' என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த மரணம் குறித்து விசாரிக்க, சிறப்பு குழுவை, அம்மாநில போலீசார் அமைத்துள்ளனர்.

தச்சராக வேலை செய்தவர்:

கலிகோ புல், அருணாச்சலப் பிரதேசத்தில், சீனாவை ஒட்டிய அஞ்சாவ் மாவட்டத்தில் பிறந்தவர்; துவக்கத்தில் தச்சராகவும், பின், காவலாளியாகவும்

Advertisement

பணியாற்றியவர். 1995ல், அரசியலில் நுழைந்து, குறுகிய காலத்தில் மாநில நிதியமைச்சராக உயர்ந்தார். கெகாங் அபாங், முகுத் மிதி, மறைந்த, தோர்ஜி காண்டு உள்ளிட்ட பல்வேறு முதல்வர்களின் கீழ், நிதியமைச்சராக நீண்ட காலம் பதவி வகித்தவர் கலிகோ புல்.

அருணாச்சலப் பிரதேச அரசியல் வரலாற்றில், மிகக்குறுகிய காலம் முதல்வர் பதவி வகித்தவர் இவர் மட்டுமே. கடந்த பிப்., 19ல் துவங்கி, வெறும் ஆறு மாதங்கள் கூட, முதல்வர் பதவி யில் கலிகோ புல் நீடிக்கவில்லை. கலிகோ புல் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

டைரியில் என்ன இருக்கு!:

கலிகோ புல், இறந்த பங்களாவில் இருந்து, அவரது டைரியை, போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், முக்கியமான சில தகவல் களை அவர்எழுதியுள்ளதாக கூறப்படு கிறது. இதுகுறித்து,தீவிரமாக விசாரிக்க உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் பெமா காண்டு கூறுகையில், ''கலிகோ புல் மரணத்தின் பின்னணி குறித்த விபரங்கள், விசாரணையில் தெரியவரும்,'' என்றார்.

கலிகோ புல்லின் சோக முடிவு, அதிர்ச்சிகர மானது. திடமான மனம், எடுத்த காரியத்தில் உறுதி, புதுமையான எண்ணங்கள் உடையவர், கலிகோ புல். அருணாச்சலப் பிரதேசம், தொலை நோக்குப் பார்வை உடைய ஒரு தலைவரை இழந்து தவிக்கிறது.

Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Muthu - chennai,இந்தியா
10-ஆக-201616:39:52 IST Report Abuse

Narayanan Muthuகொஞ்ச நாளாகவே பாஜக அருணாச்சல் மேல ஒரு கண்ணாத்தான் இருக்கு. முறையான விசாரணை நடந்தால் தான் தற்கொலையா அல்லது கொலையா என்று தெரியும்.

Rate this:
Subramanian Srinivasan - valrokaiya ,இந்தோனேசியா
10-ஆக-201612:12:44 IST Report Abuse

Subramanian Srinivasanதுரோகம் செய்து ஒரு ஆட்ச்சியை கவிழ்த்தால் தனக்கும் அதேபோல் ஏதாவது நேரும் என்ற தோலை நோக்கம் புல்லுக்கு இல்லாதது ஏன்?அதுதான் அவர் ஆசைக்கு ஒரு நாள் முதல்வராக இருந்து விட்டாரே .முதல்வர் ஆசையில் பாஜகவை நம்பி கடைசியில் உயிரையே பறி கொடுத்து விட்டார் .

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
10-ஆக-201611:18:33 IST Report Abuse

ganapati sbபொதுவாக அரசியல்வாதிகள் வெற்றி தோல்விகளுக்கு கலங்காமல் இருப்பார்கள். வெற்றி மற்றும் தோல்வி வாழ்வில் வருவதும் போவதும் இயல்பானது. அரசன் ஆனாலும் ஆண்டி ஆனாலும் தற்கொலை எதற்கும் தீர்வல்ல.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X