பொது செய்தி

இந்தியா

'செல்பி' ஆபத்து பகுதிகள் " மத்திய அரசு 'ஐடியா'

Added : ஆக 10, 2016 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி: 'செல்பி' எனப்படும், மொபைல் போனில் தன்னைத் தானே படமெடுத்து கொள்ளும் மோகம் அதிகரித்து வருவதுடன், இதனால் உயிரிழப்பதும் உயர்ந்து வருவதை தடுக்க, செல்பி ஆபத்து பகுதிகளை அறிவிக்கும்படி, மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.மத்திய சுற்றுலா துறை சார்பில், இது தொடர்பாக, அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த ஆண்டு, செல்பி எடுக்கும்போது, உலகெங்கும், 27 பேர் உயிரிழந்தனர். இதில், 15 பேர் இந்தியாவில் இறந்துள்ளனர். ஆபத்தான பகுதிகளில் இதுபோன்று செல்பி எடுப்பதை தடுக்கும் வகையில், முக்கிய சுற்றுலா தலங்கள், ஆபத்தான பகுதிகளில், 'செல்பி ஆபத்து பகுதி' என்ற அறிவிப்பை வைக்க வேண்டும்.வரும், 15ல், சுதந்திர தினம் வருவதால், அதை சிறப்பாக கொண்டாடும் வகையில், செல்பி உயிரிழப்பை தடுக்க, இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இதுபோன்ற ஆபத்தான பகுதிகளில், செல்பி எடுப்பதை மக்களும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mvsrinivasan srinivasan - chennai,இந்தியா
11-ஆக-201613:49:09 IST Report Abuse
mvsrinivasan srinivasan தமாஷாக இருக்கு
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
11-ஆக-201612:48:56 IST Report Abuse
Pasupathi Subbian இந்தியாவில் தினசரி பல்லாயிரம் கணக்கில் சாலை விபத்துகளில் மரணம் அடைவது பற்றி இவர்கள் எந்த ஆராச்சி செய்து, அதற்க்கு என்ன தீர்மானம், திட்டம் கொண்டுவந்துள்ளனர்.? அதை விடுத்து 15 பேர் சென்ற வருடம் உயிர் இழந்ததை பற்றி வெட்டி ஆராய்ச்சி செய்து நேரத்தை வீணடிக்கிறார்களே.?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X