பொது செய்தி

இந்தியா

'சான்ஸ்'க்கு சமரசம் : பாலிவுட் நடிகை 'பகீர்'

Added : ஆக 10, 2016 | கருத்துகள் (7)
Advertisement
'சான்ஸ்'க்கு சமரசம் : பாலிவுட் நடிகை 'பகீர்'

மும்பை: சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்காக, பிரபல இயக்குனருடன் சமரசம் செய்ய வேண்டுமென வற்புறுத்தப்பட்டதாக, பிரபல பாலிவுட் நடிகை, டிஸ்கா சோப்ரா, பகிரங்கரமாக தெரிவித்துள்ளார்.
தாரே ஜமீன் பர், தில் தோ பச்சா ஹை ஜி, மை அவுர் சார்லஸ் போன்ற ஹிந்தி படத்தில் நடித்தவர் டிஸ்கா சோப்ரா, 42. தன், வாழ்க்கையை கூறும் நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில், தற்போது வேகமாக பரவி வருகிறது. அதில், அவர் நகைச்சுவையுடன், தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறியுள்ளார். ஆனால், நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதற்கு, பலருடன் சமரசம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதை அவர் கூறியுள்ளார். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கடந்த ஆண்டு இதுபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். ஆண்களும், நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க, தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோருடன் சமரசம் செய்ய வேண்டியுள்ளதாக அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், டிக்ஸா சோப்ரா, ''எனக்கு படவாய்ப்புகள் கிடைக்காத போது, ஒரு பிரபல இயக்குனர் அழைத்தார். ''ஆனால், அவருடைய படத்தில் நடிப்பதற்கு, அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டுமென வற்புறுத்தப்பட்டது,'' என, பகீர் குற்றச்சாட்டை கூறிஉள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
fire agniputhran - jakarta,இந்தோனேசியா
11-ஆக-201619:09:58 IST Report Abuse
fire agniputhran நடிக்க போன பிறகு இப்படி தான் நடிப்பேன் என்று பேசினால், கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆகவேண்டும். கற்பை பற்றி பேசும் இடம் இல்லை, திரைப்பட உலகம். வாய்ப்புகள் கிடைக்காத போது தான் இத்தகைய குற்றசாட்டுகள் முன் வைக்க படும். முதன் முதலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்த போது, இவர் செய்து கொண்ட சமரசங்களை வெளியிட்டால் புத்தகம் பிய்த்து கொண்டு விற்கும்.....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
11-ஆக-201612:50:37 IST Report Abuse
Pasupathi Subbian ரோஜாவை பறிக்க வேண்டும் என்றால் முள் குத்தத்தானே செய்யும்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-ஆக-201611:27:36 IST Report Abuse
Nallavan Nallavan அதற்கு உடன்படாமல் வெளியே வந்து சொல்லியிருந்தால், அதற்கு மரியாதை இருந்திருக்கும் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X