பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பு பணி 2 நாட்கள் குடிநீர் 'கட்'

Added : ஆக 10, 2016
Advertisement

சென்னை:மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், அவசர கால பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஏழு இடங்களில் குடிநீர் வினியோகம் இருக்காது.இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:சென்னை குடிநீர் வாரியம் மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், அவசர கால பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால், இன்று காலை, 10:00 மணி முதல், வரும், 13ம் தேதி காலை, 10:00 மணி வரை, கடல்நீர் சுத்திகரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட உள்ளன.இந்த இரண்டு தினங்களுக்கு, மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய ஏழு இடங்களுக்கு குடிநீர் வினியோகம் குறைவாக இருக்கும். இதனால், பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.மேலும், அவசர தேவைக்கு மட்டும் லாரிகள் மூலம் குடிநீரை பெற, 81449 30901, 81449 30902, 81449 30903, 81449 30400, 044 - 28454040, 45674567 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X