பொது செய்தி

தமிழ்நாடு

சமையல்காரராக இருந்து சித்தரான நாயனார்!

Added : ஆக 10, 2016
Advertisement

“உன்னுள் உத்தமனை காணும் வழி சாகாக்கல்வி” என்ற வாழ்க்கை போதனையை உலகுக்கு கூறிய, மகான் சாங்கு சித்த சிவலிங்க நாயனார்.நவகண்ட யோகம் பெற்று, தன் உடலை தனித்தனியாக பிரித்து தியானம் செய்யும் சக்தி படைத்துள்ளார் நாயனார்.பெற்றோர் வைத்த பெயர் சிவலிங்கம். பள்ளி பருவத்தில், சமய சார்புடைய பெரியவர்கள் தொடர்பில், மெய்ஞான நுால்களை கற்றவர். வள்ளலார் மூலம், ஞானநெறியில் ஈடுபட்டார். சமையல் வேலையில் சேர்ந்த நாயனார், பல நேரம் உலக நிலையில் இருந்து விடுபட்டு, யோக நிலையில் ஆழ்ந்து விடுவாராம்.அந்தரத்தில் தியானம்வரும் காலத்து நிகழ்வுகளை முன்கூட்டியே உணரும் அருளாற்றல் பெற்றிருந்தார். ஒரு முறை, இரண்டடி உயரத்தில் ஆழ்ந்த தியான நிலையில் இருந்ததை கண்டு, அவர் பணி புரிந்த வீட்டு உரிமையாளர் துரைமகனார் அதிசயித்துள்ளார். நாயனார் திருத்தொண்டு கள் புரிய, துரைமகனார், கிண்டி, சுப்பா காலனியில், இடம் கொடுத்து உதவி உள்ளார். தத்துவார்த்தம், பக்தி, சித்து, யோகம் முதலியவற்றை, பக்குவமடைந்த உள்ளங்களுக்கு போதித்து வந்தார், நாயனார். அவர், தம்மிடம் வரும் மாணவர்களை எளிதில் ஏற்பதில்லை. செம்புக்காசுகளை வாங்கி பொற்காசுகளாக மாற்றிக் கொடுப்பார். அதை, வாங்க மறுப்பவர்களை ஏற்றுக்கொண்டு, ஞான நெறிகளை உபதேசித்து வந்துள்ளார். அவர் சமாதியடையும் காலத்தை,முன்கூட்டியே கணித்துள்ளார்.அவர் அறிவித்தபடியே, 12--7--1900 (ஆனி திங்கள் 29ம் தேதி) நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதி வியாழக்கிழமை ஜீவசமாதியடைந்தார். அந்த சமாதி, தற்போது, மக்கள் வழிபடும் கோவிலாக மாறியுள்ளது. சமாதி மேல், சிவலிங்கம் வைத்து வழிபாடு செய்கின்றனர்.வேண்டுதல் நிறைவேறுகிறதுநாயனார் சமாதியை வழிபடுவதால், தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கை, இப்பகுதி மக்களிடையே ஆழமாக உள்ளது. இதற்கு உதாரணமாக, பல நிகழ்வுகளையும் சொல்கின்றனர். நாயனாரின் சிஷ்யர்களான, கொள்ளாபுரி சுவாமிகள், ஏழுமலை சுவாமிகள் ஆகியோரும், இங்கு தான் ஜீவ சமாதியடைந்துள்ளனர்.பாழடைந்து கிடந்த இந்த கோவிலில், சில ஆண்டுக்கு முன்பு வரை, கஞ்சா பிடித்து கொண்டு தியானம் செய்தவர்கள் அதிகம். அதனால், பெண்கள் இந்த கோவிலில் செல்ல அச்சப்பட்டனர். கொள்ளாபுரி சுவாமிகளின் கொள்ளுபேரன் மோகன்ராஜ், இந்த கோவிலை பராமரிக்கத் துவங்கிய பின், பெண்கள் வருகை அதிகரித்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.''சித்தர்கள் வாழ்ந்த இடத்தை தேடி சென்று வழிபடும் நம்பிக்கை இன்று அதிகரித்துள்ளதாக கருதுகிறேன். 'உன்னுள் உத்தமனை காணும்வழி சாகாக்கல்வி' என்ற வாழ்வுரையை ஏற்று, 'நினைத்தது நிறைவேறும்' என்ற நம்பிக்கை இருப்பதால், அதிகம் பேர் வருகின்றனர். பூ, பழம், பால் அபிஷேகம் நடைபெறும். இங்கு வரும், பக்தர்களுக்கு விபூதி வழங்குகிறோம்,'' என்கிறார் கோவில் நிர்வாகி மோகன்ராஜ். மன அமைதிக்காக தியானம் செய்ய, இங்கு நிறைய பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு வியாழக்கிழமையும், மாலை, 6:00 முதல் 9:00 மணி வரை நடைபெறும் வார வழிபாட்டில், யோகா, தியானம் கற்றுக் கொடுக்கின்றனர். வாழும் ஜீவன்களுக்கு அமைதிவரம் தரும் ஜீவசமாதி.
இந்த வாரம்: சித்தர் கோவில், சுப்பா காலனி, காந்தி மார்க்கெட் அருகில், கிண்டி.இந்த வாரம்: சித்தர் கோவில், சுப்பா காலனி, காந்தி மார்க்கெட் அருகில், கிண்டி.


நடை திறப்பு: தினமும் காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரைமாலை 6:00 மணி முதல்இரவு 7:00 மணி வரைமாதம் தோறும், பவுர்ணமிபவுர்ணமி: சிறப்பு வழிபாடு குருபூஜை: ஆனி மாதம்மூல நட்சத்திரம் தேதியில்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X