மீன் அங்காடிக்கு எதிர்ப்பு ஆரம்பகட்ட பணி நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீன் அங்காடிக்கு எதிர்ப்பு ஆரம்பகட்ட பணி நிறுத்தம்

Added : ஆக 10, 2016

பல்லாவரம்:பல்லாவரத்தில், கன்டோன்மென்ட் இடத்தில், மீன் அங்காடி அமைக்க, பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், சுற்றுச்சுவர் அமைக்கும் ஆரம்பகட்ட பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.பல்லாவரத்தில், கன்டோன்மென்டுக்கு சொந்தமான, ஆட்டு தொட்டி மைதானம் உள்ளது. அங்கு, மீன் அங்காடி அமைக்க, ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இதையடுத்து, மைதானத்தை சுற்றி, சுற்றுச்சுவர் கட்ட, கன்டோன்மென்ட் சார்பில், பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி, நேற்று காலை துவங்கியது. இதையறிந்த, மைதானத்தை ஒட்டி வசிக்கும் மக்கள், 'தங்களுக்கு போதுமான அளவில் சாலை அமைக்க வழிவிட வேண்டும்' எனக்கூறி, மீன் அங்காடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.கன்டோன்மென்ட் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின், பள்ளம் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X