தர்பூசணி விளைச்சல் அதிகரிப்பு 1 கிலோ ரூ.10க்கு விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தர்பூசணி விளைச்சல் அதிகரிப்பு 1 கிலோ ரூ.10க்கு விற்பனை

Added : ஆக 10, 2016

தமிழகம் மற்றும் ஆந்திராவில் தர்பூசணி பழங்கள் விளைச்சல் அதிகரித்து உள்ளதால், அவற்றின் விலை குறைந்து வருகிறது.தமிழகத்தில் கோடை காலத்தில் மட்டுமே, தர்பூசணி பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது, அவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பழரசங்கள் மட்டுமின்றி, பழக் கலவையிலும், இது பயன்படுத்தப்படுகிறது. அதற்கேற்ப ஆண்டு முழுவதும் தர்பூசணி பழங்கள் கிடைக்கும் அளவிற்கு, சாகுபடி முறையை விவசாயிகள் மாற்றியுள்ளனர். முன், பச்சை நிறம் கொண்ட, பெரிய அளவிலான தர்பூசணி பழங்கள் மட்டுமே, உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது, அடர்பச்சை நிறத்தில், சிறிய அளவிலான தர்பூசணி பழங்களும், மஞ்சள் சதைப்பற்று கொண்ட தர்பூசணி பழங்களும் உற்பத்தியாகின்றன. தற்போது, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், தர்பூசணி பழங்கள் விளைச்சல் அதிகரித்து வருகிறது. இதனால், அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில், சில்லரை விலையில், 1 கிலோ தர்பூசணி, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளதும், விலை சரிந்துள்ளதும், பொதுமக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- -நமது நிருபர்- -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X