பொது செய்தி

தமிழ்நாடு

முப்பதடிக்கு ஆக்கிரமிப்பு: முழுவதற்கும் நகராட்சியே பொறுப்பு!

Added : ஆக 10, 2016
Advertisement

குரோம்பேட்டையில் இருந்து, ஜமீன் ராயப்பேட்டைக்குச் செல்லும், ராதா நகர் பிரதான சாலை, ஆக்கிரமிப்பால் சுருங்கியுள்ளதால், காலை, மாலை நேரங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.பிரதான சாலைகுரோம்பேட்டை காவல் நிலையம் எதிரே உள்ள, ரயில்வே கேட் வழியாக, ஜமீன் ராயப்பேட்டை, நெமிலிச்சேரி, பல்லாவரம்- - துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஆகிய பகுதிகளை இணைக்கும், ராதா நகர் பிரதான சாலை செல்கிறது. இச்சாலையை ஒட்டி, ராதா நகர், மார்க்கெட் சாலை, சாந்தி நகர், லட்சுமிபுரம், பாரதிபுரம், கணபதிபுரம், புருஷோத்தமன் நகர், ஜமீன் ராயப்பேட்டை ஆகிய பகுதிகள் உள்ளன.இச்சாலையை ஒட்டி, வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ஐ.ஆர்.டி., பாலிடெக்னிக், தனியார் பள்ளிகள், கோவில்கள் உள்ளன. இதனால், ராதா நகர் பிரதான சாலை, எந்த நேரமும் போக்கு வரத்து நிறைந்து காணப்படும். தினமும், பல ஆயிரம் வாகனங்கள் பயணிக்கும் இச்சாலை, ரயில்வே கேட் பகுதியில் இருந்து, ஜமீன் ராயப்பேட்டை வரை, 40 அடிஅகலத்தில் உள்ளது.ஆனால், சாலையில் ஆங்காங்கே ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன; நடைபாதையை மறித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன; சாலை ஓரத்தில் கட்டட கழிவுகள் கொட்டப்படுகின்றன. மேலும், சாலையை ஆக்கிரமித்தும், மறித்தும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.இதனால், 40 அடி சாலை, பல இடங்களில், 25 அடியாக உள்ளது. ரயில்வே கேட்டில் இருந்து, பல மீட்டர் துாரத்திற்கு, சாலையின் அகலம், 10 அடிக்கும் குறைவாக உள்ளது. இதனால், போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில், கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து, பல்லாவரம் குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மைய தலைவர் சந்தானம் கூறுகையில், ''ராதா நகர் சாலையில், பல வகையான ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை முறைப்படுத்த, நகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ராஜேந்திர பிரசாத், சி.எல்.சி., ஸ்டேஷன் பார்டர் சாலைகளிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன,'' என்றார். நிரந்தர தடுப்பு?நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'ராதா நகர் பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அகற்றி வருகிறோம். அப்படியிருந்தும், மீண்டும் அங்கு ஆக்கிரமிப்புகள் துவங்கி விடுகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு வருவது தெரிந்தும், அதை நிரந்தரமாகத் தடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்காதது, நகராட்சியின் தவறு என்பதை, அதிகாரிகள்உணர்வதாகத் தெரியவில்லை.
- -நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X