பொது செய்தி

தமிழ்நாடு

குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொது இடங்களில் பொருத்த கோரிக்கை

Added : ஆக 11, 2016
Advertisement


உடுமலை: உடுமலை நகரில், குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும், மக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்கும் வகையிலும், பொது இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை நகரில், கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் கீழ், 56 ஆயிரம் மக்கள் தொகை இருந்துள்ளது. நடப்பாண்டின் இது, 62 ஆயிரத்தை கடந்துள்ளது.இவ்வாறு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் தொகை அதிகரித்து வருவதற்கேற்ப, நகரின் பாதுகாப்பு வசதிகள் இல்லை. பஸ் ஸ்டாண்டு, வணிக வளாகங்கள், பேங்க், ரயில்வே ஸ்டேஷன் என்று மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் வருபவர்களை கண்காணிக்க கேமரா பொருத்தப்படவில்லை.நகர மக்கள் மட்டுமின்றி பல்வேறு வணிக தேவைகளுக்கும், பணிச்சூழலுக்காகவும் கிராமப்புற மக்களும் இங்கு வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நகரில் அடிப்படையான பாதுகாப்பு வசதிகள் என எதுவும் இல்லை. கடந்த மார்ச் மாதம், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வணிக வளாகம் முன்பு, பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் மாலையில் சங்கர் என்பவரை கூலிப்படையினர் கொலை செய்ததன் எதிரொலியாகவே, மக்களுக்கு கேமராவின் தேவை கட்டாயம் என கூறும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.கொலை செய்தவர்களை அடையாளம் காண முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்பட்டது, அங்கிருந்த வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா தான். இச்சம்பவம் நகர மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியதோடு, கேமராவின் அவசியம் குறித்தும் உணர்த்தியது.கொலை நடந்த இடம் பஸ் ஸ்டாண்ட் அருகில் என்பதால், தற்போதும் உடுமலை பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் பயணிகளை அச்சம் விடவில்லை. பஸ் ஸ்டாண்ட் மட்டுமின்றி, ரயில்வே ஸ்டேஷன், மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேங்க், கோவில், தாலுகா அலுவலக ரோடு, தபால் நிலையம் என எங்கும் கேமிராக்கள் இச்சம்பவத்துக்கு அடுத்தும் பொருத்தப்படவில்லை. மக்களின் பாதுகாப்புக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாத நிலையே தற்போது உள்ளது. கோவில், வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கேமரா பொருத்த, நகராட்சி நிர்வாகத்தினர், போலீஸ், வியாபாரிகள் சங்கத்தினருக்கான கூட்டம் கடந்தாண்டு நடந்தது. அதில், வணிக வளாகங்களிலும், சம்பந்தப்பட்ட இடத்தில் அவ்விடத்துக்குட்பட்டவர்கள் கேமரா பொருத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தினர். இதுவரை, அதற்கான நடவடிக்கைகள் இல்லை. முக்கிய இடங்களில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க கேமரா அவசியம் என்பதை வியாபாரிகள் உணர வேண்டும். பஸ் ஸ்டாண்டில் ஏற்படும் திருட்டு சம்பவங்களை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து பலமுறை கோரிக்கை விடப்பட்டுள்ளது.போலீசாரும் இதை கண்டுகொள்வதில்லை.

குடியிருப்புகளில் இரவு நேரங்களில் ஏற்படும் திருட்டுகளை கட்டுபடுத்த, மக்கள் முன்வந்து கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X