சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலன் ஏமாற்றி உல்லாசம்: பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவி புகார் * விசாரணையில் நாடகம் அம்பலம்

Added : ஆக 11, 2016 | கருத்துகள் (2)
Advertisement

தூத்துக்குடி,:தூத்துக்குடியில் காதலனுடன் சினிமா தியேட்டரில் உல்லாசம் அனுபவித்த கல்லூரி மாணவி., காரில் கடத்தி சென்று கற்பழித்ததாக புகார் செய்தார். போலீசார் விசாரணையில் காதலனுடன்
உல்லாசம் அனுபவித்தது தெரியவந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன்புதூர், பார்க் ரோட்டை சேர்ந்தவர் சார்லஸ் சிம்சன், இவரது
மகள் கேத்தரின் மார்க்ரெட் சிம்சன்,21, இவர் தூத்துக்குடியில் உள்ள ஹோம் சயின்ஸ் கல்லூரியில்
பி.எஸ்.சி.,புட் அன்ட் நியூட்டிரிசன் பிரிவில் , மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கும் நாகர்கோவில் ராஜாவூரை சேர்ந்த ஜோ என்பவருக்கும் இடையே பேஸ்புக்கில்
மூன்று மாதத்திற்கு முன்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ஜோ, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள வி.வி., இன்ஜி., கல்லூரியில்
டெக்னீஷயனாக பணியாற்றி வருகிறார். இந் நிலையில் விடுமுறைக்காக வீடு சென்ற
கேத்தரின் கடந்த 8 ம் தேதி தூத்துக்குடி கல்லூரிக்கு வருகை தந்தார். அப்போது அவருடன்
பஸ்சில் ஜோவும் பயணம் செய்துள்ளார். தூத்துக்குடிக்கு வந்த இவர்கள் அங்குள்ள ராஜ்
தியேட்டரில் பகல் ஷோ சினிமா பார்க்க சென்றனர். அங்கு பால்கனியில் வேறு யாரும்
இல்லாததால் கேத்தரினும், ஜோவும் எல்லை மீறி உல்லாசம் அனுபவித்தனர்.
இதில் கேத்திரினுக்கு ரத்த போக்கு ஏற்பட்டது.
காதலன் ஜோ அவரை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். ஆனால் வீட்டில் காரில்
வந்த மர்ம நபர்கள் இருவர் கடத்தி சென்று கற்பழித்ததாக பொய் சொல்லும்படி தெரிவித்தார்.
இதன் படியே கேத்ரினும் வீட்டில் பொய் சொல்லியுள்ளார். இந் நிலையில் அங்குள்ள தனியார்
மருத்துவமனையில் கேத்ரின் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து தூத்துக்குடி தெற்கு போலீசில் கேத்ரின் பெற்றோருடன் வந்து புகார் செய்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை செய்தபோது, கேத்தரின் காதலனுடன்
உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து காதலன் ஜோ மீது வழக்குப்பதிவு செய்து
போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
11-ஆக-201608:52:05 IST Report Abuse
Rajendra Bupathi உடல் நலம் மோசமா கெடுற அளவுக்கு போனா அப்புறம் என்ன பண்றது அனுபவிச்சிதான் ஆவணூம்.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
11-ஆக-201608:50:34 IST Report Abuse
Rajendra Bupathi ஊசி எடங்கொடுத்தா தானே நூலு போக முடியும் அப்புறம் இப்ப குத்துது கொடையுதுன்னா என்ன அர்த்தம்.இப்ப எல்லாம் பசங்க சும்மா இருந்தாலும் இந்த வெடைங்க தொல்லதான் அதிகமா இருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X