புதுடில்லி:'நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு மெத்தனமாக உள்ளது.
ஐகோர்ட்டுகளுக்கான, 75 நீதிபதிகள் நியமனம் மற்றும் பணி இடமாற்றம் தொடர்பாக அளித்த பட்டியலுக்கு ஒப்புதல் தராமல், எட்டு மாதங் களாக இழுத்தடிப்பு செய்வதை சகித்துக் கொள்ள முடியாது' என, சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பல்வேறு கோர்ட்டுகளில், அதிக அளவில் வழக்குகள் தேங்கியுள்ளதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள் ஏ.எம்.கன்வல்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிறப்பித்த உத்தரவு:
நாடு முழுவதும் உள்ள, 24 ஐகோர்ட்டுகளில், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, 43 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது ஐகோர்ட்டுகளில், 40 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே நேரத்தில், பல்வேறு ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதி
பணியிடங்களை நிரப்பவும், பணி இடமாற்றம் செய்யவும், 'கொலீஜியம்' என்ற, நீதிபதிகள் குழு அளித்த, 75 பேரின் பரிந்துரைகள் மீது, மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
நீதித்துறையின்
பணிக்கு இடைஞ்சல் ஏற்படுத் தும் வகையில், நீதிபதிகள் நியமனத்துக்கு
முட்டுக்கட்டை போடுவதை சகித்துக் கொள்ள முடியாது. கொலீஜியம் அளித்த
பரிந்துரை, எங்கு, யாருடைய ஒப்புதலுக்காக காத்திருக் கிறது என்பது குறித்து,
மத்தியஅரசு பதிலளிக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
எங்களை ஏன் நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள்? நீதிபதிகளை பணி இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்து, எட்டு மாதங்க ளாகியும் அவர்கள் பணி இடமாற்றம் செய்யப்படவில்லை; இதை ஏற்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து, அரசுடன் பேசி பதிலளிப்பதாக, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி தெரிவித்தார். 'நான்கு வாரங்களுக்குள் பதிளிக்க வேண்டும்' என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பிரச்னை என்ன?:
* சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் அமைப்பே, சுப்ரீம் கோர்ட் மற்றும், 24 ஐகோர்ட்டுகளுக்கான நீதிபதிகள் நியமனம், பணி இடமாற்றம் போன்றவற்றை பரிந்துரைக்கும்
* மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்ததும், கொலீஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை
எனக் கூறி, அதற்கு மாற்றாக, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் கொண்டு வந்தது
* இதற்கென கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. அதனால், கொலீஜியம் முறையே தொடர்கிறது
* நீதிபதிகள் நியமனம், பணி இடமாற்றம் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவதற்கான, வழிகாட்டு நெறி முறை களை வகுக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது
* இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த வழிகாட்டு நெறிமுறைகளில், சில திருத்தங் களை செய்யும்படியும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. இது, தற்போது நிலுவையில் உள்ளது
* கொலீஜியம் அளிக்கும் பரிந்துரை, தேச பாதுகாப்புக்கு எதிராக இருந்தால், அதை நிரா கரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு, சுப்ரீம் கோர்ட் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
478 நீதிபதி பணி இடங்கள் காலி:
ராஜ்யசபாவில் நேற்று, மத்திய சட்டத்துறை இணையமைச்சர்
பி.பி.சவுத்ரி, உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில்
கூறியுள்ளதாவது:
நாடு முழுவதும் உள்ள, 24 ஐகோர்ட்டுகளுக் கான, 1,079 நீதிபதி
பணியிடங்களில், 478 காலி யாக உள்ளன. 39 லட்சம் வழக்குகள் நிலுவை யில் உள்ளன.
சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி யை யும் சேர்த்து, 31 நீதிபதி
பணியிடங் களில், மூன்று காலியாக உள்ளன.
இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (22)
Reply
Reply
Reply