அ.தி.மு.க., பெண் எம்.பி.,க்கு கணவர் விவாகரத்து 'நோட்டீஸ்'| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பெண் எம்.பி.,க்கு கணவர் விவாகரத்து 'நோட்டீஸ்'

Added : ஆக 12, 2016 | கருத்துகள் (59)
Advertisement
அ.தி.மு.க., பெண் எம்.பி.,க்கு கணவர் விவாகரத்து 'நோட்டீஸ்'

கோபி: திருப்பூர், அ.தி.மு.க., பெண் எம்.பி., சத்தியபாமாவுக்கு, அவரது கணவர் விவாகரத்து, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.திருப்பூர் எம்.பி., சத்தியபாமா, 1990ல், கோபி அருகே எலந்தக்காடு பகுதியைச் சேர்ந்த வாசுவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சத்தியவசந்த், 24, என்ற மகன் உள்ளார். 2014 லோக்சபா தேர்தலில், சத்யபாமா அ.தி.மு.க., சார்பில், திருப்பூர் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் அவருக்கும், கணவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், வாசு சார்பில், அவரது வழக்கறிஞர் ஜாகீர் உசேன், சத்யபாமாவுக்கு அனுப்பியுள்ள விவாகரத்து நோட்டீஸ்:வாசுவுக்கும், உங்களுக்கும், 1990 மார்ச், 30ல் திருமணம் நடந்தது. வாசுவால், கோபி நகராட்சி தலைவர் ஆனதும், அவரை உதாசீனப்படுத்த ஆரம்பித்தீர்கள். வாசுவுக்கு தெரியாமல், பல இடங்களில் அவர் பெயரில் கடன் பெற்றுள்ளீர்கள். லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தபோது, பலரிடம் பணம் பெற்று தங்களுக்கு கொடுத்துள்ளார்.மேலும், அவரது விவசாய நிலங்களை அடமானம் வைத்து, இரண்டு கோடி ரூபாய் பெற்றுத்தர வற்புறுத்தி உள்ளீர்கள். அதன்பின், சிகிச்சை என்ற பெயரில் அவரை அடைத்து வைத்துள்ளீர்கள்.மனம் போன போக்கில், வாசுவை தவிர்த்து, இரு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறீர்கள். இனி உங்களுடன் சேர்ந்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், உங்களது செயல்கள், தன் நலனுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும் என, அவர் கருதுகிறார்.எனவே, 1990ல் இருவருக்கும் ஏற்பட்ட திருமணத்தை ரத்து செய்ய, மனு தாக்கல் செய்வதற்கு தாங்கள் முன்வர வேண்டும். தவறும் பட்சத்தில், என் கட்சிக்காரரான வாசு, தங்கள் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்வார்.அதனால் ஏற்படும் சகல செலவுகளுக்கும், நீங்களே முழு பொறுப்பேற்க நேரிடும்.இவ்வாறு நோட்டீசில் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாசு கூறுகையில், ''என்னை ஒரு கோடி ரூபாய்க்கு கடன்காரன் ஆக்கியுள்ளார்; தன்னிச்சையாக செயல்படுகிறார். இரண்டு மாதமாக அவரிடம் பேச முயற்சிக்கிறேன்; பிடி கொடுக்க மறுக்கிறார். என் வாழ்க்கையை, நான் தீர்மானிக்க தயாராகி விட்டேன். அதற்காகத்தான் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணிமேகலை - paris ,பிரான்ஸ்
13-ஆக-201618:46:48 IST Report Abuse
மணிமேகலை  தமிழ்நாட்டில் பெண்கள் அரசியலுக்கு வந்தால் இதுபோல்தான் நடக்கும் ,இது அரசியலுக்கு மட்டுமல்ல சினிமாவுக்கும் பொருந்தும் .
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-ஆக-201616:36:51 IST Report Abuse
இந்தியன் kumar 50% இட ஒதுக்கீடு கொடுத்தா இன்னும் அதிகமாக விவாகரத்து கேசு கோர்ட்டுக்கு வரும்.
Rate this:
Share this comment
சாமி - மதுரை,இந்தியா
14-ஆக-201602:26:34 IST Report Abuse
சாமிஉன்மைதான் தன்னோட நிலை உயரும் போது பெரிய இடத்து தொடர்புகள் அதிகரிக்கும். அந்த நேரம் புருசன் இடஞ்சலாக தெரியும். மொத்தத்தில் பென்கள் கெட்டுபோகதான் வாய்ப்பு. விட்டு கொடுத்து மிக்சர் சாப்பிடும் கனவன் மார்களுக்கு பிரச்சனை இல்லை...
Rate this:
Share this comment
சாமி - மதுரை,இந்தியா
14-ஆக-201602:37:48 IST Report Abuse
சாமி50% இட ஒதுக்கீடு மாவட்ட செய்லர்கள் காட்டில் மலைதான்...
Rate this:
Share this comment
Cancel
crimson - Tharhuna,லிபியா
13-ஆக-201616:22:23 IST Report Abuse
crimson சொல்லப்பட்டுள்ளது, சும்மா வெற்று காரணமாக இருக்கவே வாய்ப்புள்ளது. உண்மை காரணம், சில நாட்களிலேயே வெளி வரலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X