சின்னத்திரையில் மின்னும் பைங்கிளி| Dinamalar

சின்னத்திரையில் மின்னும் பைங்கிளி

Added : ஆக 14, 2016
சின்னத்திரையில் மின்னும் பைங்கிளி

வில்லெடுத்த 'வில்லி'; மவுனம் காத்த 'மலர்'. அவர் நடிப்பில் நிலவு. அவள் விழி படபடப்பின் முன்னே அன்னமும் சிறகடிக்கும். 'டிவி' சீரியல் ரசிகைகளை கிறங்க வைக்கும் இன்பநாயகி கிருத்திகா, நம்முடன் அவர் பேசியதில் இருந்து...* பிறந்தது, வளர்ந்தது, படித்தது...?எல்லாமே சென்னையில் தான். எம்.பி.ஏ., முடித்து, ஆறு வருஷம் 'ஷிப்பிங்' கம்பெனியில் எச்.ஆர்., ஆக பணியாற்றினேன்.* பிறகு எப்படி நடிப்பில்...?சின்ன வயசுலயே அம்மா கனகவல்லியைப் பார்த்து கலைத் துறையில் ஆர்வம் வந்துச்சு. வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. உடனே நடிப்புக்கு ஓ.கே.,ன்னுட்டாங்க.* நடிக்க வாய்ப்பு எப்படி?'டிவி' சீரியலில் நடிக்க வர்றதுக்கு முன்னாடி, 'டிவி' சேனலில் தொகுப்பாளரா இருந்தேன். அதுவும் 'பார்ட் டைம்' தான். அப்புறம் இயக்குனர் திருமுருகன் சார், 'தேன் நிலவு' சீரியலில் என்னை அறிமுகப்படுத்தினார்.* பிறகு வந்த சீரியல்கள்...?பொன்னூஞ்சல், வாணி ராணி, கல்யாண பரிசு, ஆண்டாள் அழகர் என தொடர்ச்சியா நிறைய நடித்தேன்.* சீரியலில் ஓ.கே., நிஜத்தில் எப்படி...?நிஜத்தில்... குடும்ப பெண் கேரக்டர் தான். எப்பவுமே எதுக்கும் கவலைப்படாத, ஜாலியான ஆளு நான். என்ன சுத்தி இருக்கிறவங்கிட்ட கலகலன்னு பேசி சிரிச்சுட்டே இருப்பேன். * எதிர்பார்க்கும் கேரக்டர்?முழுசா ஒரு லவ் ஸ்டோரி படம் பண்ணனும்னு ஆசை. அந்த மாதிரி சீரியல் வாய்ப்புக்காக நடிக்க காத்திருக்கிறேன்.* பிடித்தது சீரியலா? சினிமாவா?ரெண்டுமே எனக்கு பிடிக்கும். வாய்ப்பு எங்கு கிடைத்தாலும் அதைப் பயன்படுத்திட்டு கலைத்துறையில் சாதிப்பேன்.* உங்களுக்கு ரோல்மாடல்?சரண்யா. அவங்க எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசத்துவாங்க.* நடித்ததில் உங்களுக்கு பிடித்த கேரக்டர்?குடும்ப பெண், வில்லி மக்கள் மத்தியில் * உங்களுக்கான ரெஸ்பான்ஸ்?என்னைக்காட்டிலும் நான் நடிச்ச கேரக்டருக்கு தான் நல்ல 'ரெஸ்பான்ஸ்' கிடைத்தது.* 'டிவி' சீரியலை அடுத்து சினிமாவா?'சென்னை 28' பார்ட்- 2, சிவகார்த்திகேயனோட 'ரெமோ' படத்திலும் நடிக்கிறேன்.* சினிமாவில் யாரோட நடிக்க ஆசை?உலக நாயகன் கமல், சூப்பர் ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன் என்று லிஸ்ட் பெருசா இருக்கு.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X