சென்னை: ''சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம், 11 ஆயிரத்தில் இருந்து, 12 ஆயிரம் ரூபாயாகவும்; அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும், குடும்ப ஓய்வூதியம், 5,500 லிருந்து, 6,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்,'' என, சுதந்திர தின விழாவில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
தமிழக அரசு சார்பில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், நேற்று சுதந்திர தின விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை, 9:12 மணிக்கு, கோட்டை கொத்தளம் முன் அமைக்கப்பட்டு இருந்த, அணிவகுப்பு ஏற்பு மேடைக்கு, முதல்வர் ஜெயலலிதா வந்தார்.பாதுகாப்பு படைத்தலைவர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் அறிமுகத்திற்குப் பின், முதல்வர் திறந்த ஜீப்பில் ஏறி, போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார்.
காலை, 9:30 மணிக்கு, கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:டில்லி செங்கோட்டையில், இந்திய தேசியக் கொடி பறப்பதற்கு, 35 ஆண்டுகளுக்கு முன், நம் ஊர், செங்கோட்டையில் தேசியக் கொடியை பறக்க
வைத்த பெருமை, தியாகி வாஞ்சிநாதனை சாரும்.தமிழகத்தில் சுதந்திர தீயை, மக்கள் மத்தியில் வளர்த்தவர்கள் என்று எடுத்துக் கொண்டால், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய பாரதி, சுப்ரமணிய சிவா,முத்துராமலிங்கத் தேவர், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை.மாவீரன் அழகுமுத்துக்கோன், புலித்தேவர், தியாகி விஸ்வநாத தாஸ், மருது சகோதரர்கள், தீரர் சத்தியமூர்த்தி, மார்ஷல் நேசமணி, வேலு நாச்சியார், அவரது படைத் தளபதி குயிலி, தில்லையாடி வள்ளியம்மை, காயிதேமில்லத் என சொல்லிக் கொண்டே போகலாம்.
சுதந்திரம் என்பது பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம், நம்மை நாமே ஆட்சி செய்யும் சுதந்திரம் என்பதோடு மட்டும் நின்று விடுவதல்ல. உண்மையான சுதந்திரம் என்பது, பொருளாதார சுதந்திரத்திலும், அனைவரும் சமம் என்ற நிலையிலும் தான் உள்ளது.சிறந்த கல்வியே, தனி மனித வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், அடித்தளமாக அமையும் என்பதால் தான், கல்வி வளர்ச்சிக்கு, என்அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.
விவசாயிகளின் வாழ்வு
பள்ளிகள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், காலத்தே ஆசிரியர்கள் நியமனம் செய்யவும், தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயர்கல்வியில், 44.8 சதவீதம் மாணவர் சேர்க்கையால், தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது.நல்ல உடல்
நலன் பெற்றவரே, பொருளாதார சுதந்திரத்தை முழுமையாக அடைய முடியும் என்பதால், உடல் நலன் பேணவும், பல புதிய திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்வு வளம் பெறவும், உணவு உற்பத்தி பெருகவும், தேவையான முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு, இதுவரை இல்லாத உயர் அளவாக, 1.30 கோடி டன் உணவு உற்பத்தி அளவை, தமிழகம் எட்டியுள்ளது.
ஏழை எவரும், தமிழகத்தில் இல்லை
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., வழியை பின்பற்றும் நான், என் உழைப்பையே நாட்டுக்கு அர்ப்பணித்து, அதன் மூலம் ஏழை என்று எவரும், தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்க சூளுரைக்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (67)
Reply
Reply
Reply