திருச்செங்கோடு: 'தமிழக மீனவர்கள் பிரச்னைகளை தீர்க்க, மத்திய அரசு நடவடிக்கைகளுக்கு, மீனவர்கள் ஒத்துழைக்க வேண்டும்' என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கூறினார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், அவர் அளித்த பேட்டி: தமிழக சட்டசபையில்,
புதிய கல்விக் கொள்கை குறித்து பேசும்போது, 'சமஸ்கிருதம், ஹிந்தியை திணிக்க, ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம்' என, பேசுகின்றனர். தமிழக அமைச்சர்களின் குழந்தைகள், தி.மு.க., முன்னணி தலைவர்களின் பிள்ளைகள்; பேரன்கள் எந்த பள்ளியில் படிக்கின்றனர் என, ஒரு, 'சர்வே' எடுத்து வெளியிட்டால், இவர்களது முகத்திரை கிழிந்து போகும். புதிய கல்விக் கொள்கை பற்றி விவாதம் நடத்த, பா.ஜ., தயாராக உள்ளது. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையில், மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சொன்னது போல, ஆழ்கடல் மீன் பிடித்தல் என்ற மாற்று ஏற்பாட்டை செய்து தர, மத்திய அரசு தயாராக உள்ளது; இதற்கு மீனவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.நம் மீனவர்களின் நிரந்தர தீர்வுக்காக, மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.