விடுதலை புலிகள் இயக்கத்தில் ரா உளவாளி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விடுதலை புலிகள் இயக்கத்தில் ரா உளவாளி

Added : ஆக 16, 2016 | கருத்துகள் (38)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
விடுதலை புலிகள் இயக்கத்தில் ரா உளவாளி

புதுடில்லி: விடுதலை புலிகள் இயக்கத்தின் துணைத்தலைவராக பணியாற்றி வந்த மாத்தையா இந்திய உளவு அமைப்பான ரா உளவாளி என புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
ராஜிவ் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவரிடம் பேட்டியெடுத்த நீனா கோபால் என்பவர் எழுதியுள்ள புத்தகத்தில், கோபால்சுவாமி மகேந்திரராஜா என்ற மத்தையா என்பவர் ரா உளவாளியாக செயல்பட்டு வந்தார். பிரபாகரனுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்த அவரை நன்கு பயிற்றுவித்தது ரா அமைப்பு தான். அவர் விடுதலை புலிகளின் மிகவும் அசைக்க முடியாதவராக மாறி, கலகம் மூலம், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து பிரபாகரன் நீக்கப்பட்டு, அந்த பதவியை ஏற்க மாத்தையாவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த விடுதலை புலிகள் அமைப்பு, மாத்தையாவை கொன்று விட்டதாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் குழந்தை பருவ நண்பரான கிட்டு பயணித்த கப்பல் விபத்தில் சாக மாத்தையா தான் காரணம் எனவும், அவர் ரா அமைப்புக்கு ரகசிய தகவல் அளித்ததாகவும் அந்த அமைப்பு சந்தேகப்பட்டது.
மேலும் அந்த புத்தகத்தில், ரா உளவாளி என கண்டுபிடிக்கப்பட்ட மாத்தையா தனி சிறையில் அடைக்கப்பட்டு, பல வாரங்கள் சித்ரவதை செய்யப்பட்டு, கடைசியில் 1994ம் வருடம் டிசம்பர் மாதம் கொல்லப்பட்டார். அவரது ஆதரவாளர்களாக இருந்த 257 பேரும் கொல்லப்பட்டு தீயில் போடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ராஜிவை விடுதலை புலிகள் கொன்ற பிறகு, தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த ரா அமைப்பு, வி டுதலை புலிகள் அமைப்பின் தலைமையை மாற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டது. ஈழப்போரின் கடைசி கட்டத்தில் பிரபாகரன் சரணடைவார் என ரா வட்டாரங்கள் எதிர்பார்த்தன. அப்போது தான் இலங்கை அரசின் விருப்பப்படி இல்லாமல் சர்வதேச அமைப்பிடம் ஒப்படைக்கப்படுவோம் என பிரபாகரன் எதிர்பார்த்தார் என ரா கருதியதாகவும் அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் இந்திய ராணுவம் செயல்படுவது, விடுதலை புலிகள் ராஜிவுக்கு எதிராக திரும்பும் என்பதை ரா அமைப்பு கணிக்க தவறி விட்டது என கூறியுள்ள நீனா கோபால், இந்த விவகாரத்தில் நம்மீதுதவறு உள்ளது. கணிப்பதில் நாம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம். பிரபாகரனை தவறாக கணித்து விட்டோம்,. நமக்கு எதிராக இவ்வாறு அவர் திரும்புவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. நாம் ராஜிவை பாதுகாக்க தவறிவிட்டோம் என ரா அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Radhakrishnan - Karur,இந்தியா
17-ஆக-201610:18:29 IST Report Abuse
Radhakrishnan இந்திய வெளிநாட்டு கொள்கை என்பது நேரு, இந்திரா மற்றும் ராஜிவ் என்று தனி மனிதர்களால் மாற்றி எழுதப்பட்ட காலத்தில் இருந்து விடுபட்டு வாஜ்பாயி காலத்தில் இருந்து அரசியல் தலையீடு இல்லாமல் இருக்கிறது. இருப்பினும் இது மேலும் மேம்பட்டு அண்டை நாடுகளிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் அதுவும் குறிப்பாக இலங்கை தமிழர்கள் விவகாரத்தை கொடிய பாதையில் பயணிக்க விட்ட சிலர் புலிகளின் மீது பழியை போட்டு தப்பிக்க பார்ப்பது மடமையிலும் மடமை. ராஜிவ் பிரதமராக இருந்த போது ஒரு முறை இலங்கை அரசுக்கு ஆயுதம் ஏற்றி சென்ற இஸ்ரேல் விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறங்கவும் எரிபொருள் நிரப்பவும் அனுமதிக்கப்பட்டது. அதை வைகோ ராஜீவிடம் நாடாளுமன்றத்தில் விவாத நேரத்தில் கண்டித்தார். அப்போது ராஜீவ் குறும்புத்தனமான அந்த ஆயுதங்களில் எதிலும் தமிழர்களுக்கு எதிரானது என்று எழுதப்படவில்லை என்று கூறி சிரித்தார். அதற்கு வைகோ பதிலடியாக பின்வருமாறு கேட்டார். அப்படியென்றால் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு கொடுக்கும் ஆயுதங்களில் அவை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்று அச்சிடப்பட்டு உள்ளதால் தான் அதை இந்தியா எதிர்க்கிறதா? பிரதமர் தக்க பதில் தர வேண்டும். ராஜீவ் முகம் முற்றிலும் கோணல் ஆகிப்போனது. உடனடியாக வருத்தமும் தெரிவித்தார். இந்த நிகழ்வுக்கு பின்னர் இந்திய அரசு ஆயுதம் தாங்கிய விமானங்கள் எரிபொருள் நிரப்ப அனுமதிக்க மாட்டோம் என்று ஆணை வெளியிட்டது. இப்படி ராஜீவ் ஒரு நேரு குடும்ப வாரிசு என்பதைத்தவிர வேறு எந்த தகுதியும் இல்லாதவர். அவரின் இழப்பு பேரிழப்பே. மறுப்பதற்கு இல்லை. பாக்கிஸ்தான் நமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நாம் எப்படி விரும்புவதில்லையோ அதைப்போல நாமும் அடுத்த நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் இந்தியா மீது மதிப்பும் மரியாதையும் கூடும்.
Rate this:
Share this comment
Madhu - Trichy,இந்தியா
18-ஆக-201607:08:25 IST Report Abuse
 Madhu'காலி'யாக இருக்கும விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்கும், அது ஆயுதங்கள் தாங்கி/சுமந்து இருக்கும்போது எரிபொருள் நிரப்புவதற்கும் வேறுபாடு உண்டு. பின்னர் சொல்லப்பட்டதில் அதிக அபாயம் உள்ளது. இதனை உணர்ந்து கொண்டதால்தான் ராஜீவ் காந்தி அப்படி ஒரு அரசாணையை வெளியிடச் செய்திருக்கலாம். ஏனெனில் அவரே ஒரு 'பைலட்'டாகப் பணி புரிந்தவர். மேலும், எரி பொருள் தீர்ந்து போகும் நிலையில் உள்ள விமானம் அருகில் உள்ள விமான நிலையத்தின் உதவியைத்தான் நாடும். யோசிக்கையில் இதுதான் நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம். அதில் ஆயுதங்கள் இருந்த விஷயம் இப்போது வாசகர் கருத்துப்படி, இந்திய அரசாங்க/ராணுவ/உளவுத் துறையையும் தாண்டி வைகோ விற்கு உடனே தெரிந்திருக்கிறது எனில் என்ன பொருள்? இந்தப் பின்னடைவை வெளிக்காட்டிக் கொள்ளாமல்தான் ராஜீவ் காந்தி சிரித்து மழுப்பி அவையில் பதிலளித்திருக்கிறார். உடனே அவையில் பதிலளித்து திரு.வை.கோ. பேசியதாக வாசகர் குறிப்பிட்டிருப்பது யாருக்கு ஆதரவாக? நம் நாட்டுக்கு நிச்சயமாக இல்லை. ராஜீவின் முகம் கோணலாகிப் போனதில் வாசகருக்கு எவ்வளவு சந்தோஷம் பாருங்கள் இலங்கைக்கும், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் யார் யார் ஆய்தங்கள் தந்தார்கள் எனும் செய்தியெல்லாம் உடனுக்குடன் தெரிந்திருக்கிறது எனில் புலிகளுக்கு ஆயுதங்களை யார் யார் கொடுத்தார்கள், எப்படிக் கொண்டு சென்றார்கள் எனும் விவரங்களும் தெரிந்திருக்குமே. இந்தியா கூட கொடுத்திருக்கலாம். ஆரம்ப கட்டத்தில் புலிகள் தமிழகத்தில்தான் எம்.ஜி.ஆர்,/இந்திராவின் ஆதரவில் பயிற்சி பெற்றார்கள் எனப் புலிகளே ஒப்புக் கொண்டது. அதில் ஒன்றைக் கூட இந்திய ராணுவத்தின் மீதோ, இலங்கைத் தமிழர்கள் மீதோ புலிகள் பயன்படுத்தவில்லை என்று யார் உத்திரவாதம் கொடுப்பார்கள்? சொந்தக் காசிலும், பிறர் காசிலும் சூனிய்ம் வைத்துக் கொண்டவர்கள் புலிகளேதான். இன்று சூனியமாகிப் போனவர்களும் அவர்களே....
Rate this:
Share this comment
Cancel
swega - Dindigul,இந்தியா
17-ஆக-201610:16:37 IST Report Abuse
swega பாவத்தின் கூலி மரணம்
Rate this:
Share this comment
Cancel
udaya - chennai,இந்தியா
17-ஆக-201610:16:02 IST Report Abuse
udaya யாரும் உயிரோட இல்லை. என்ன சொன்னால் , எழுதினால் என்ன வர போகுது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X