சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிகள் பலாத்காரம் : காமக்கொடூரன் சிக்கினான்

Added : ஆக 19, 2016 | கருத்துகள் (11)
Advertisement
சிறுமிகள் பலாத்காரம் : காமக்கொடூரன் சிக்கினான்

திருப்பூர்: திருப்பூரில், பள்ளி சிறுமியை கடத்தி, பலாத்காரம் செய்தவனை, போலீசார் கைது செய்தனர் திருப்பூரைச் சேர்ந்த, 11 வயது சிறுமியை, ஒருவன், 13ம் தேதி கடத்தி, பலாத்காரம் செய்தான். அடுத்த நாள் காலை, சிறுமியை, பல்லடத்திலிருந்து பஸ் ஏற்றி, திருப்பூருக்கு அனுப்பினான். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் படி, தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மதுரை, செல்லுாரைச் சேர்ந்த முருகன், 38, சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. மதுரை சுற்றுவட்டாரத்தில், இதுபோல், ஆறு சிறுமியரை கடத்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வழக்கும், இவன் மீது உள்ளது. மதுரை சிறையில் அடைக்கப்பட்ட இவன் மீது, 2005 மற்றும், 2014ம் ஆண்டுகளில், குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.இவன் படத்தை வெளியிட்டு, போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பூரில் பதுங்கியிருந்தது தெரிந்தது. நேற்று அதிகாலை, போலீசார் இவனை கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின், கோவை, மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-ஆக-201620:07:36 IST Report Abuse
Pasupathi Subbian என்ன கண்றாவி இது. சிறு குழந்தைகளை கூட விடாமல். சே சே மனது வலிக்கிறது. இதை இவன் ஒரு வழக்கமாகவே வைத்துள்ளான் என்றால் அவனை மனோ தத்துவ நிபுணரிடம் கொண்டு சிகிச்சை செய்யவேண்டும். காசுக்கு கிடைக்கு விலைமாதர்கள் இருக்கும் இடத்தில் தனது உடல் பசியை நீக்க வடிகாலா கிடைக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel
சாமி - மதுரை,இந்தியா
20-ஆக-201618:37:05 IST Report Abuse
சாமி மதுரை சுற்றுவட்டாரத்தில், இதுபோல், ஆறு சிறுமியரை கடத்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வழக்கும், இவன் மீது உள்ளது. மதுரை சிறையில் அடைக்கப்பட்ட இவன் மீது, 2005 மற்றும், 2014ம் ஆண்டுகளில், குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது./// இவனெல்லாம் இருந்து நாட்டுக்கு என்ன பயன் ? சுட்டு தள்ளனும்
Rate this:
Share this comment
Cancel
Shanu - Mumbai,இந்தியா
20-ஆக-201617:10:09 IST Report Abuse
Shanu கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இனி "அந்த" உணர்ச்சி வராமல் இருக்க ஊசி போட வேண்டும். அது தான் இவனுக்கு பெரிய தண்டனை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X