ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் துவக்கம்: 650 பணியிடங்களுக்கு 21,609 பேர் விண்ணப்பம்

Added : ஆக 20, 2016 | |
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நேற்று துவங்கிய நிலையில், 650 பணியிடங்களுக்கு, 21 ஆயிரத்து, 609 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில், சென்னை ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனரம் மூலம், வரும், 31ம் தேதி வரை ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது. சோல்ஜர் பொதுப்பணி, டெக்கனிக்கல், நர்சிங் அசிஸ்டென்ட், டிரேட்ஸ் மேன், ஆகிய பணிகளுக்கு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நேற்று துவங்கிய நிலையில், 650 பணியிடங்களுக்கு, 21 ஆயிரத்து, 609 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில், சென்னை ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனரம் மூலம், வரும், 31ம் தேதி வரை ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது. சோல்ஜர் பொதுப்பணி, டெக்கனிக்கல், நர்சிங் அசிஸ்டென்ட், டிரேட்ஸ் மேன், ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, 21 ஆயிரத்து, 609 இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். விண்ணப்பித்த இளைஞர்கள், எந்த நாளில் முகாமில் பங்கேற்க வேண்டும் என்ற விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று துவங்கிய முகாமை, கலெக்டர் பழனி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் பகுதி ராணுவ ஆட்கள் தேர்வு தலைவர் பிரிகேடியர் தால்வி ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது, ராணுவ பிரிகேடியர் தால்வி நிருபர்களிடம் கூறியதாவது: ராணுவத்தின் பல்வேறு பணியிடங்களுக்காக, 21 ஆயிரத்து, 609 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 650 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதலில், உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டு, இதில் தேர்வு பெறுவோருக்கு மருத்துவ தேர்வு, எழுத்து தேர்வு இறுதியாக நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X