துணிவில்லாத அதிகாரிகளால் குவியும் வழக்குகள்!

Added : ஆக 20, 2016 | கருத்துகள் (3) | |
Advertisement
திறமையான பல அதிகாரிகளின் செயல்பாடுகளால் தான் அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது; அரசின் நலத்திட்டங்களின் பலன்கள் சாதாரண மக்களைச் சென்று அடைகின்றன. அந்த வகையில், தன் நம்பிக்கைக்கு பாத்திரமான அதிகாரிகளைத் தான் அரசு, முக்கிய பொறுப்பில் அமர்த்துகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எதிரணியில் இருப்பவர்கள் அதற்கு வேறு விதமாக காரணம் கற்பித்து கொண்டிருந்தாலும், ஆளும்
துணிவில்லாத அதிகாரிகளால் குவியும் வழக்குகள்!

திறமையான பல அதிகாரிகளின் செயல்பாடுகளால் தான் அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது; அரசின் நலத்திட்டங்களின் பலன்கள் சாதாரண மக்களைச் சென்று அடைகின்றன. அந்த வகையில், தன் நம்பிக்கைக்கு பாத்திரமான அதிகாரிகளைத் தான் அரசு, முக்கிய பொறுப்பில் அமர்த்துகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எதிரணியில் இருப்பவர்கள் அதற்கு வேறு விதமாக காரணம் கற்பித்து கொண்டிருந்தாலும், ஆளும் அரசுக்கு விசுவாசமாக இருப்பது தான்

அதிகாரிகளின் கடமை. அதிகாரிகள் அரசுக்கு காட்டும் விசுவாசம், அரசை தேர்ந்தெடுத்த மக்களுக்கு காட்டும் விசுவாசம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சில, திறமையற்ற, நேர்மையற்ற, அனுபவமற்ற அதிகாரிகள் தான் அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்துபவர்; இத்தகையவர்கள், விரைவாகவும், துணிந்தும் முடிவெடுக்கும் திறமையற்றவர்கள்.

இத்தகையவர்களுக்கு எந்த முடிவெடுப்பதற்கும், எந்தவொரு செயலைச் செய்வதற்கும் அச்சம். 'சிக்கலில் மாட்டிக் கொள்வோமோ' என்ற பயம். அதனால் தான், பிறர் செய்வதற்கெல்லாம் தலையை ஆட்டி, காலத்தைத் தள்ளிக் கொண்டிருப்பர். துறைமுகத்திலேயே கப்பல்

நங்கூரமிட்டிருப்பது அதன் பாதுகாப்புக்கு உகந்தது தான். ஆனால், அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் அதுவல்ல. ஆங்கிலத்தில், 'கரேஜ் ஆப் கன்விக் ஷன்' என்ற அருமையான வார்த்தை உண்டு. தாம் செய்யும் செயல் குறித்து மிகத் தெளிவாக இருக்கும் போது நமக்கு ஏற்படும் துணிவு தான், வலிமையான, தெளிவான நம்பிக்கையின் காரணமாக ஏற்படும் துணிவு அது. மனதில் அந்த துணிவு இருந்தால் செய்யும் செயலில் தயக்கம் ஏற்படாது.

இத்தகைய திறமை இல்லாத சிலர் முக்கிய பொறுப்பில் அமர்ந்து, கடமையில் துாங்கி, புகழை இழந்து கொண்டிருக்கின்றனர்; எதைச் செய்வதற்கும் இவர்களிடம் துணிவு இருப்பதில்லை.

சட்டத்தைக் காரணமாகக் காட்டி, தனி மனித சுதந்திரத்தைப் பறிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதைத் தான், ஒரு சில அதிகாரிகள் தெரிந்தே செய்கின்றனர். சுய லாபத்துக்காகவும், சொந்த விருப்பு, வெறுப்புக்காகவும் செய்கின்றனர். ஒரு சிலர் தங்கள் அறியாமையால் செய்

கின்றனர். இதனால் பல அப்பாவி அலுவலர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

அதிகமாக படித்து, அகில இந்திய அளவில் தேர்வு எழுதி, வெற்றி பெற்று அதிகாரிகளாக வந்தவர்களில் சிலர், பணியில் இருக்கும் போது, சாமானியர்கள் கொடுக்கும் மனுக்களைப் படிக்குமளவுக்கு கூட பொறுமையாக இருப்பதில்லை. உயரதிகாரிகளை அணுகும் ஒரு சாதாரண குடிமகனின் மனு, பரம பத விளையாட்டில் பாம்பிடம் கடிபட்ட காய் போல, அலட்சியம் காட்டிய அதிகாரியிடமே வந்து சேர்ந்து, மனு கொடுத்தவரை ஏளனமாகப் பார்க்கும் நிலை தான் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் நிலவுகிறது. அதற்காக, இந்த அதிகாரிகள் எல்லாருமே நேர்மையற்றவர்கள்; கையூட்டு பெற்று கீழ்மட்ட அலுவலர்களைக் கண்டுகொள்வதில்லை என, சொல்லி விட முடியாது. சமூகத்தில் தாதாக்கள் உருவாவது போல, இதுபோன்ற அதிகாரிகளின் தலைமையின் கீழ் சில தாதாக்கள் உருவாகி கோலோச்சி கொண்டிருப்பர்; அவர்களுக்கு பயந்து அப்பாவி ஊழியர்கள் அடிமைகள் போல் வேலை செய்து கொண்டிருப்பர்; பணிய மறுப்பவர்கள் பழிவாங்கப் படுவர். பழிவாங்கப்பட்டு, தண்டிக்கப்பட்டவர்கள், பதவி உயர்வு மறுக்கப்பட்டவர்கள், நீதிமன்றத்திற்கு ஓடிக் கொண்டிருப்பர். பொதுமக்கள் பலர் சின்னச் சின்ன பிரச்னைகளுக்கும், அரசு அலுவலர்கள் தங்கள் மீது அதிகாரிகளால் எடுக்கப்பட்ட தவறான நடவடிக்கைக்காகவும் நீதிமன்றத்துக்கு ஓடவேண்டிய கட்டாயத்தை உருவாக்குவது, இதுபோன்ற திறமையற்ற, பொறுப்பற்ற அதிகாரிகள் தான்.இப்போதெல்லாம் சில அதிகாரிகளே, 'கோர்ட்டுக்கு போய், உத்தரவு வாங்கி வாருங்கள்' என, தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதும், அப்படிப் போய் வாங்கி வந்தாலும், தங்கள் துறை சட்ட ஆலோசகரிடம் கருத்துரை பெற வேண்டும் என்ற சாக்கில், நாளை கடத்தி, எதிர் தரப்பினர் அதற்கு மாற்று உத்தரவு வாங்க ஆலோசனையும் வாய்ப்பும், வழங்குவதும் வாடிக்கையாக உள்ளது.இதனால், நீதிமன்றங்களில் வழக்குகள் நிரம்பி வழிகின்றன. 'வாய்தா' தேதி தெரிந்து கொள்ளவே நிறைய பேர் நீதிமன்றத்தில் கூட்டம் சேர்ந்து, அங்கு சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.போலி வழக்கறிஞர்கள் சிலர் நீதிமன்றத்தை விட்டு, அரசு அலுவலகங்களிலும், காவல் நிலையத்திலும் நேரடியாக வந்து மோத ஆரம்பித்து விட்டனர். இதில் பல நல்ல, மூத்த வழக்கறிஞர்களுக்கு உடன்பாடு இல்லை என்பது மட்டுமல்ல; வழக்கறிஞர்கள் சிலரின் போக்கு, மூத்த வழக்கறிஞர்களுக்கு மன வருத்தத்தையும் கொடுத்திருக்கிறது.

முன்பெல்லாம் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வெளியே வந்து கட்சிக்காரரை சந்திப்பதையும், அவர்களுக்காக காவல் நிலையம் மற்றும் பிற அரசு அலுவலகங்களுக்கு செல்வதையும் விரும்ப மாட்டார்கள்; தங்கள் தொழிலுக்கு இழுக்கு என்று நினைப்பர். ஆனால் இன்று, இளம் வழக்கறிஞர்கள் அரசு அதிகாரிகளை, அலுவலகங்களுக்கு சென்று சந்திக்கின்றனர்.

உண்மையில் வழக்கறிஞர்களும், அரசு அதிகாரிகளும் சுயநலம் இல்லாமல், சமூக பொறுப்போடு நடந்து கொண்டால், கோர்ட்டுக்கு போகாமலேயே பல பிரச்னைகளை சுமுகமாக முடிக்க முடியும்; ஏழை, எளியவர் களுக்கு வீண் செலவு இல்லாமல் நீதி கிடைக்கச் செய்ய முடியும்.

பல சிறிய பிரச்னைகள், திறமையற்ற அதிகாரிகளாலும், பொறுப்பற்ற, லாப நோக்கத்தோடு செயல்படும் போலி வழக்கறிஞர்களாலும் பெரிதாக்கப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.


இ - மெயில்: spkaruna@gmail.com


- மா.கருணாநிதி -


காவல் துறை கண்காணிப்பாளர் (ஓய்வு), சென்னை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (3)

Pasupathilingam - Chidambaram,இந்தியா
21-ஆக-201610:18:31 IST Report Abuse
Pasupathilingam மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள். அரசுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் / இருக்கக்கடமைப்பட்டவர்கள்தான் உண்மையான அரசு ஊழியர்கள். ஆளும் கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களும் தங்கள் விருப்பமான கட்சிக்கு விசுவாசமாக இருந்துகொண்டு அரசுக்கு எதிராக செயல் படுபவர்களுக்கும் அரசு ஊழியர்கள் என்ற தகுதி இல்லாதவர்கள்தான். துரதிருஷ்டவசமாக இப்போதெல்லாம் நேர்மையற்ற அதிகாரிகளின் கீழ் நேர்மையற்ற அலுவலர்கள் வேலை பார்க்கும் நிலைதான் உள்ளது. எல்லா குளறுபடிகளும் இதுவே காரணம். நான் பணி புரிந்த கடைசி ஐந்து ஆண்டுகளில் சீக்கிரம் பனி நிறைவு வராதா என்று எண்ணிக்கொண்டே வேலை பார்த்தேன். எல்லா அதிகாரிகளும் வேலை தெரியாமலும் கீழே உள்ளவனின் கஷ்ட நஷ்டங்கள் தெரியாமலும் இரண்டு கால்களையும் பிணைத்து விட்டு ஓடு ஓடு என்று சாட்டையால் விளாசத் தெரிந்தவர்களாகவும் மட்டுமே இருந்தனர். ஒரு சிறந்த ஊழியக்காரனால்தான் சிறந்த மேய்ப்பனாக இருக்க முடியும் என்ற வாக்கை அறியாதவர்கள் பாவம். போதாக்குறைக்கு ஒரு ஆட்டை ஒன்பது பேர் மேய்க்கும் நிலை நிர்வாகத்தை சீர் குலைத்துவிட்டது. கீழ் நிலை அலுவலர்கள் இதை எப்படி செய்வது என்று தடுமாறும்பொது மேல் நிலை அதிகாரிகள் வழிகாட்டும் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும். நிலைமை அப்படி இல்லை. நீதானே செய்யவேண்டியவன் நீயே செய்துமுடி. என்னை என் கேட்கிறாய். நான் செய்யவேண்டுமானால் நீ எதற்கு என்று கேட்கும் உயர் அதிகாரிகள்தான் முக்காலே மூன்று வீசம் உள்ளனர். பாவம் அவர்களை சொல்லி குற்றமில்லை அவர்களுக்கு அதிகாரி என்பதால் அதிகாரம் மட்டுமே தெரியும். வேலை துரிதமாகவும் மக்களுக்கு போய்ச் சேரும் வகையிலும் செய்யக்கூடிய தகுதியோ திறமையோ சற்றேனும் கிடையாது. ஒரே ஒரு உதாரணம் சொல்ல விழைகிறேன். சாதாரண வெள்ளத்தை பெரும் வெள்ளமாக படம் காட்டி பல மாவட்ட அதிகாரிகளையும் வரவழைத்து மாலை ஆறு மணி முதல் இரவு பதினோரு மணி வரை கூட்டம் நடத்திவிட்டு யோசித்து வையுங்கள் காலையில் பார்க்கிறேன் என்று கூட்டத்தை முடித்துவிட்டுப் போய்விட்டார் ஒரு மேதாவி அதிகாரி. கூட்டத்தின் விவாதப் பொருள் ஒன்றும் இந்திய பாக்கிஸ்தான் பேச்சு வார்த்தை அல்ல. வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அரிசி மண்ணை துணி வழங்குவதற்காக டோக்கன் எப்படி அச்சடிப்பது என்பது பற்றி மட்டும்தான். திறமையோ நேர்மையோ இல்லாத அதிகாரிகளால் கீழ் நிலை அதிகாரிகளும் அலுவலர்களும் கெட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு நாட்டுக்கு சீர்கேடு என்பதுதான் வேதனை அளிக்கும் நிலைமை.
Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-ஆக-201620:47:56 IST Report Abuse
Rajendra Bupathiமிக அருமையான கருத்து.அது மட்டுமல்ல இப்பொழுது எந்த அரசு உதவிகளையும் அதிகாரிகள் தகுதியான பயனாளிகளூக்கு வழங்க முடிவதில்லை. காரணம் அரசியல் தலையீடு. உதரணம் வேளாண்மை துறையில் எந்த நல்ல திட்டத்தையும் அதிமுக ஒன்றிய செயலாளரின் அனுமதி இல்லாமல் கொடுக்க முடிவதில்லை.அப்படியே அனுமதி கொடுத்தாலும் பணம் வாங்கி கொண்டுதான் செய்கிறார்கள். கடைசியில ஆடிட்டில் அதிகாரிகள்தான் மாட்டி தண்டம் கட்டுகிறார்கள். ஆக அரசு திட்டம் இப்படிதான் நாசமாக போகிறது....
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
21-ஆக-201609:30:28 IST Report Abuse
Rajarajan இதற்கெல்லாம் காரணம், ஜாதி கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் தான். அவர்கள் இருப்பதால் தான், பல அதிகாரிகள் துணிந்து தவறு செய்கின்றனர் அல்லது சோம்பேறிகளாக இருக்கின்றனர் அல்லது தம்மை யாரும் தட்டி கேட்க முடியாது என்ற மமதையில் இருக்கின்றனர். அரசு பதவி என்றால், எப்படியோ உள்ளே வந்துவிட்டால் போதும், பின்னர் யாரும் கடைசிவரை அசைக்க முடியாது என்ற நிலையான பதவி என்ற காரணம் தான், இவர்களுக்கு இந்த துணிவை தருகிறது. வேலை நிரந்தரம் மற்றும் ஜாதி / துறை வாரியான சங்கங்கள் இருந்தால், அந்த நிறுவனம் உருப்பட்டாற்போல் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த, ஊரறிந்த ரகசியம். இந்த அழகில், தனியார் துறையிலும் ஜாதி வாரியான மற்றும் நிரந்தர வேலை கொடுக்க சொல்லி, ஒரு கூட்டம் உசுப்பேற்றுகிறது. அப்படி நடந்தால் என்ன ஆகும் ?? இதுபோன்று பின் கதவு மூலம் நுழைபவர்கள், ஜாதி சங்கம் ஆரம்பிப்பர். வேலை செய்ய சொன்னால், என் ஜாதி பெயரை சொல்லி திட்டினார் என்று சொல்லி வழக்கு போடுவர். வழக்கிலிருந்து விடுவிக்க, இவ்வளவு தொகை என்று பேரம் பேச, இவர்கள் ஜாதி சங்கங்கள் போட்டி போடும். எப்போதும், ஏதாவது பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும். இவர்களுக்கு பயந்துகொண்டு, இவர்களை சும்மா உட்க்காரவைத்து தாண்ட சம்பளம் மற்றும் சலுகைகள் கொடுக்கவேண்டும். மேற்கொண்டு படிக்க மாட்டார்கள் / திறமையை வளர்க்க மாட்டார்கள். நிர்வாகத்தில் காலத்திற்கேற்ற மாற்றம் கொண்டுவரவே முடியாது. விளைவு ?? விரைவில் அந்த நிறுவனத்தை இழுத்து மூட வேண்டி வரும். அல்லது அதன் நிறுவனர் இவர்களுக்கு வேலை கொடுத்த பாவத்திற்காக, ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக சொல்லி, அவரை சிறை உள்ளே தள்ளி விடுவர். ஒரு நிறுவனித்திருக்கு இந்த நிலைமை ஏற்பட்டால் போதும், மற்ற நிறுவனங்கள் எல்லாம் பயந்து, வெளிநாட்டிற்கு ஓடி விடும். விளைவு ?? இந்தியா சோமாலியா போல் வறுமை நாடாக மாறிவிடும். எப்போது ஒருவர் தன் திறமையை மட்டுமே நம்பி வேலை பெறுகிறாரோ, அப்போது தான் அவர் திறமை மதிக்கப்படும், தொழில் முன்னேறும், நாடு வளம் பெறும். திறமை என்பது ஒருவரின் தன்னம்பிக்கை மற்றும் செயலில் தான் உள்ளது, ஜாதியில் இல்லை. இதை ஜாதி கட்சிகள் புரிந்துகொண்டு, அவரவர் ஜாதியின் இளைஜர்களின் கல்வி மற்றும் செயல்திறனை மேம்படுத்தி, அவர்களை உலகளாவிய போட்டிக்கு தயார்படுத்த வேண்டும். ஜாதி பெயரை சொன்னால், அது அவமானபடுத்தியதாக எவ்வாறு சட்டத்தின் மூலம் சிறை உள்ளே தள்ள முடியுமோ, அதே ஜாதிப்பெயரை சொல்லி வசதிப்படைத்தவர் சலுகைகேட்பது, அதைவிட அவமானமாக உணரவேண்டும். ஜாதி என்பது, ஒரு இனத்தின் அடையாளமே தவிர, திறமைக்கான அடையாளம் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சரி, இந்தியாவில் ஜாதி சான்றிதழ் முறையை ஒழித்து, வருமான சான்றிதழ் மட்டுமே செயல்படுத்தி, அவர்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே சலுகை என்று ஏன் கொண்டு வர கூடாது ?? இதனால், உங்கள் ஜாதியை குறிப்பிட்டு யாரும் உங்களை அவமானப்படுத்த முடியாதே ?? ஜாதி ஒழிந்தே போகுமே ஜாதி வோட்டு அரசியல் வேண்டும் என்றால், இந்த அவமானத்தை நீங்களே சுயநலத்திற்காக விரும்புகிறீர்கள் என்று தானே பொருள் ?? காலம் மாறிவிட்டது. ஜாதி தலைவர்களே கொஞ்சம் யோசிங்களேன். உங்கள் அடுத்த அடுத்த தலைமுறைகளை தொடர்ந்து, சுயமரியாதையுடன் வாழ வழி செய்யுங்களேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X