ஸ்ரீதேவி போல் நடிக்க வேண்டும் : திருப்பதி லட்டு சுப்ரஜா ஆசை| Dinamalar

ஸ்ரீதேவி போல் நடிக்க வேண்டும் : திருப்பதி லட்டு சுப்ரஜா ஆசை

Added : ஆக 22, 2016 | கருத்துகள் (1) | |
என்ன அழகு.. எத்தனை அழகு... கோடி மலர்கள் கொட்டிய அழகு... என்று கொள்ளை அழகால் படக்குழுவினரையும், பார்வையாளர்களையும் கட்டிப் போட்டிருந்தார் திருப்பதி லட்டு சுப்ரஜா. கிராமத்து கட்டழகியாக பாவாடை, தாவணியில் 'பளீச்' என காட்சியளித்தார். ராமநாதபுரம் அருகே 'நாடோடி கனவு' படப்பிடிப்பில் இருந்தவர் நம்மோடு சில நிமிடங்கள் கண் சிமிட்டினார்.இனி கண்கள் பேசும்...ஆம் காந்தக்கண்களால்
ஸ்ரீதேவி போல் நடிக்க வேண்டும் : திருப்பதி லட்டு சுப்ரஜா ஆசை

என்ன அழகு.. எத்தனை அழகு... கோடி மலர்கள் கொட்டிய அழகு... என்று கொள்ளை அழகால் படக்குழுவினரையும், பார்வையாளர்களையும் கட்டிப் போட்டிருந்தார் திருப்பதி லட்டு சுப்ரஜா. கிராமத்து கட்டழகியாக பாவாடை, தாவணியில் 'பளீச்' என காட்சியளித்தார். ராமநாதபுரம் அருகே 'நாடோடி கனவு' படப்பிடிப்பில் இருந்தவர் நம்மோடு சில நிமிடங்கள் கண் சிமிட்டினார்.இனி கண்கள் பேசும்...ஆம் காந்தக்கண்களால் கட்டினார் சில நிமிடங்கள்...* பிறந்தது, வளர்ந்தது, படித்தது ?திருப்பதியில் பிறந்தேன். அப்பா, அம்மா இருவரும் ஆசிரியர். எம்.டெக்., படித்துள்ளேன். அக்கா, தம்பி உண்டு. பரத நாட்டியத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். எனது ஆசிரியர்கள், நீ சினிமாவில் சாதிக்கலாம், என்ற போது எனக்கும் ஆசை வந்தது. அப்பா, அம்மா முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பிறகு ஏற்றுக்கொண்டனர்.
* சினிமா வாய்ப்பு எப்படி?திருப்பதியில் நடந்த ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு ஜெயித்தேன். இதனை பார்த்த தெலுங்கு பட இயக்குனர் ஒருவர் சினிமாவில் நடிப்பதற்கு அழைத்தார். அங்கு முதன் முதலாக 'புஸ்தகம்லோ கொன்னி பகிலீ' என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். இதனை பார்த்து தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 'வெள்ளை' என்ற படத்தில் ரஞ்சித்கண்ணா இயக்கத்தில் நடிகர் உதய்யுடன் நடித்தேன். இப்போது, முழுமையான ஒரு கிராமத்து கதையில் 'பொன்னி' என்ற பெயரில் நடித்து வருகிறேன்.
* ரோல் மாடல் யார் ?மூன்றாம் பிறை ஸ்ரீதேவி. அவரையே நான் ரோல்மாடலாக வைத்துள்ளேன். எந்த கேரக்டர் என்றாலும் அவரால் அந்த கேரக்டராகவே நடிக்க முடியும்.
* சினிமா காதல், நிஜக் காதல் ஒப்பிடுங்கள் ?சினிமாக் காதல் படம் பார்க்கிற மாதிரி உடனே முடிஞ்சி போயிடும். நிஜக்காதல் அப்படியல்ல. உண்மையான காதல் வாழ்க்கை முழுவதும் இருக்கும். உயிர் போகும் வரை உடன் வரும்.
* நடிப்பில் ஆர்வம் எப்படி?சின்ன வயதில் இருந்தே டான்ஸ் பிடிக்கும். அதனால் நடிப்பிலும் ஆர்வம் ஏற்பட்டது. நடிகை பத்மினியின் நடனத்தை ரசித்து பார்ப்பதுண்டு.
* பிடித்த நடிகர், நடிகை?சூர்யா, அஜித், ஐஸ்வர்யாராய், ஸ்ரீதேவியை ரொம்ப பிடிக்கும். அவர்கள் நடித்த படங்களை அதிகமாக பார்ப்பேன்.
* யாருடன் நடிக்க ஆசை?அஜித், சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.
* எப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்க ஆசை?ஆக்டிங் ஸ்கோப் உள்ள கேரக்டரில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். எந்த கேரக்டர் செய்தாலும் பார்வையாளர்களை அப்படியே வசீகரம் செய்வதாக அமைய வேண்டும். அந்தளவுக்கு எனது நடிப்பு இருக்க வேண்டும்.
* உலகில் உயர்ந்தது எது?அம்மா பாசம் தான் உலகில் மிக உயர்ந்தது. அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை. அடுத்து, குழந்தையின் சிரிப்பு. அதுதான் உண்மையான சிரிப்பு. கள்ளம் கபடம் இல்லாதது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X