பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
வாடகை தாய் மோசடியை தடுக்க நடவடிக்கை:
மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல்

வாடகை தாய் என்ற பெயரில், பெண்களை ஏமாற்றி மோசடி செய்வதை தடுக்கும் விதமாக, கொண்டு வரப்பட்டுள்ள புதிய மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், சட்ட விரோத, வர்த்தக ரீதியிலான வாடகை தாய் முறை, முழுமையாக தடை செய்யப்படும்.

 வாடகை தாய் மோசடியை தடுக்க அதிரடி நடவடிக்கை: மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல்

குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத தம்பதிக்கு, வாடகை தாய் மூலம் குழந்தை பெற, நவீன மருத்துவத்தில் வாய்ப்புள்ளது. ஆனால், குழந்தை பெற உடல்ரீதியாக தகுதி இருந்தும், பிரசவ வேதனைக்கு பயந்து, சிலர் வாடகை தாயை நாடுகின்றனர். அது போலவே, குழந்தை பாக்கியம் இல்லாத வெளிநாட்டவர் கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.

பணம் தருவதாக கூறி, பெண்களை ஏமாற்றி மோசடி செய்யும் செயலும் நடக்கிறது. இதை தடுக்கும் விதமாக, வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் நடைமுறையை, வரன் முறைப் படுத்தும் புதிய மசோதா தயார் செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலை மையில், டில்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில், இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.


இதுகுறித்து, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: நியாயமான தம்பதி மட்டுமே, வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதிக்கப் படுவர். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெ டுக்க உதவும், 2,000 மருத்துவமனைகள் கண் காணிக்கப் படும். சட்ட விரோதமாக, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க உதவுபவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்க, இந்த சட்டம் வழி செய்கிறது.

நடிகர், நடிகையர் உள்ளிட்ட சில பிரபலங்கள், பிரசவ வலிக்கு பயந்து, வாடகை தாய் மூலம்
குழந்தை பெற்றெடுக்கின்றனர். இது போன்றவர்கள் மீதும், புதிய சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

முக்கிய அம்சங்கள்

* இந்தியாவில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல், குழந்தை இல்லாத, மருத்துவ ரீதியாக, நிரூபிக்கப் பட்ட தம்பதி மட்டுமே, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்
* ஓரினச் சேர்க்கையாளர்கள், மனைவி அல்லது கணவன் இன்றி தனித்து வாழ்பவர்கள், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் போன்றவர்கள், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்படும்
* வர்த்தக ரீதியாக, வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது
* வெளிநாட்டு இந்தியர் உட்பட, வெளிநாட்டினர் இந்தியாவில் வாடகை தாயை அமர்த்திக் கொள்ள இயலாது.

விதிமுறைகள் என்ன?

* வாடகை தாயாக இருப்பவர், குழந்தை தேவைப் படும் தம்பதியின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும்
* வாடகை தாயாக இருப்பவர், திருமணம் முடித்து, குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும்; ஒருமுறை மட்டுமே, வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுத்தர வேண்டும்
* அதற்கான உரிய ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்

Advertisement

* குழந்தை தேவைப்படும் தம்பதியில், பெண்ணுக்கு, 23 - 50 வயது வரை இருக்க வேண்டும்; ஆணுக்கு, 26 - 55 வரை வயது இருக்க வேண்டும்
* சொத்துகளிலும், வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் முழு உரிமை உண்டு.

டாக்டர்கள் சொல்வது என்ன?

நீண்ட காலம் குழந்தை இல்லாதோர், தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என, வாடகை தாயை தேடுகின்றனர்; இது, சட்ட ரீதியாக நடந்தாலும், இடைத்தரகர்களால் நெருக்கடி ஏற்படுகிறது.

எப்படியாவது குழந்தை வேண்டும் என தவிப்போருக்கும், வறுமை யால் வாடகை தாயாக வருவோருக்கும் சிக்கலாகி விடுகிறது. இதை முறைப்படுத்தும் மசோதா கொண்டு வருவது, கட்டாய தேவை.

- ஜோதி பிரின்ஸ் மகப்பேறு மருத்துவர், மதுரை

பல விதிமுறைகளுடன், வாடகை தாய் நடை முறையை முறைப்படுத்தும் மசோதா கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. 1970ல்,5 சதவீதமாக இருந்த மகப்பேறு இன்மை, தற்போது, 15 சதவீதமாக அதிகரித் துள்து. இதைகுறிவைத்து, செயற்கை கருத் தரிப்பு மையங்கள் பெருகி வருகின்றன; அவற்றுக்கும் கிடுக்கிப்பிடி போடும் வகையில், இந்த மசோதா அமைந்தால், மிகவும் பயனுள்ளதாக அமையும்.

- எஸ்.இளங்கோ தமிழக தலைவர், இந்திய பொது சுகாதார சங்கம்


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
subhashini - chennai,இந்தியா
25-ஆக-201616:14:52 IST Report Abuse

subhashiniஇந்த சட்டம் வரவேற்கப்பட வேண்டியது.. ஏனெனில் பணத்துக்காக குடும்ப வறுமைக்காக தான் ஊர் பேர் தெரியாதவர்களின் குழந்தைகளை கஷ்டப்பட்டு சுமந்து பெற்று தர சில ஏழை பெண்கள் முன்வருகின்றனர்..ஆனால் அங்கும் பல ஊழல் நடக்கிறது என்று பல முறை மீடியா செய்திகளில் வந்துள்ளது ..அது யாதெனில் .... இந்த துறையில் உள்ள பல மருத்துவமனைகள் குழந்தை வேண்டி வருபவர்களை நன்கு உறிஞ்சி பணம் வசூலிக்கின்றனர் ..வாடகை தாய்களுடன் பல நிபந்தனைகளுடன் கான்ட்ராக்ட்டும் போடுகின்றனர்.. ..இதையெல்லாம் பற்றி ரொம்ப தெரியாத அப்பாவி வாடகை தாய்கள் பலர் தங்கள் குடும்பத்து நிதி நிலைமை கொஞ்சம் மேம்படும் என்று நம்பி கை எழுத்தும் இடுகின்றனர் ...ஆனால் குழந்தை பிறந்தவுடன் கதையே மாறி விடுகிறது ..குழந்தையை பெற்று கொண்டவர்கள் இவர்களை உடனேயே வெட்டி விடுகின்றனர்.. மருத்துவ மனையில் இருந்து இவர்களுக்கு சொற்ப தொகையே போய் சேருகிறது ..ஆனால் இவர்களை உறிஞ்சி மருத்துவ மனைகள் பணம் கொழிக்கின்றனர் ..மேலும் பல ஏழை வாடகை தாய்கள் ஒழுங்காக பணம் கொடுக்கப்படாமல் ஏமாற்ற படுவதாகவும்/ அவர்கள் வறுமை நிலையை தங்களுக்கு சாதகமாக்கி பேரம் பேசி அடி மாட்டு விலைக்கு வாடகை தாயாக்க படுவதாகவும்/ அவர்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் நல்ல விதத்தில் குழந்தை பிறந்தால் போதும் என்ற கோணத்தில் மட்டுமே சுயநலமாக அவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் / ..சிசேரியன் போன்ற ரிஸ்க் உள்ள சிகிசிச்சைகளுக்கு முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று வலுக்கட்டாயமாக உட்படுத்தப்படுவதாகவும் /மருத்துவமனைகள் வாடகை தாய் என்ற பெயரில் பல மடங்கு கட்டணம் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வசூலித்தாலும் இவர்களுக்கு மிக குறைவான தொகையே கொடுக்கப்படுவதாகவும் ..கணவன் முதலியோர் இதை குத்தி காட்டி பின்னாளில் பிரச்சினை செய்வதாகவும் இப்படி பற்பல வேதனை செய்திகள் வந்த வண்ணம் இருந்தன ..மேலும் தன் மனைவி மூலம் குழந்தை பெற இயலாத தம்பதியினருக்கு பயன் தரும் என்றாலும் கல்யாணமே ஆகாதவர்கள் / ஓரின சேர்க்கையாளர்கள்/ வெளிநாட்டில் கட்டணம் அதிகம் என்பதால் இங்கு வாடகை தாயை பயன் படுத்த முயலும் வெளிநாட்டினர் என்று ஆளாளுக்கு இப்படி செய்ய ஆரம்பித்து விட்டனர் .மொத்தத்தில் ஊழல் மிகவும் மலிந்து விட்டதாக தோன்றுகின்ற படியால் இந்த சட்டம் உண்மையில் வரவேற்க பட வேண்டியது தான் .

Rate this:
Balaji - Khaithan,குவைத்
25-ஆக-201614:58:19 IST Report Abuse

Balajiஇது வரவேற்கப்பட வேண்டிய மசோதா தான்...... ஆனாலும் இதில் சில குறைபாடுகள் இருப்பதாகவே தெரிகிறது..... உதாரணத்துக்கு வாடகை தாயாக அமர்த்தப்படும் நபர் வாடகை தாய் வேண்டும் தம்பதியினரின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என்பது நடைமுறையில் எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை........ இதுபோன்ற விஷயத்தையும் கவனத்தில் கொண்டு மசோதாவில் சில மாறுதல்களை செய்து நிறைவேற்ற வேண்டும்.........

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
25-ஆக-201610:47:48 IST Report Abuse

Chandramoulliஎங்கு பார்த்தாலும் இந்த மாதிரி கயவர்கள் உள்ளனர் . சட்டத்தில் தண்டனையை கடுமையாக்க வேண்டிய கட்டாயம் இது. கஷ்டப்படுவது ஒருவர் . நோகாமல் அதில் பணம் பார்க்கும் கூட்டம் அதிகம் உள்ளது . வெட்கி தலை குனிய வேண்டிய நிகழ்வு இது .

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X