சரமாரியாக அவதூறு வழக்குகள் தொடரும் தமிழக அரசுக்கு நெத்தியடி!: விமர்சனங்களை சகிக்கும்படி ஜெ.,வுக்கு நீதிபதிகள் 'அட்வைஸ்' Dinamalar
பதிவு செய்த நாள் :
சரமாரியாக அவதூறு வழக்குகள் தொடரும் தமிழக அரசுக்கு... நெத்தியடி!: விமர்சனங்களை சகிக்கும்படி ஜெ.,வுக்கு நீதிபதிகள் 'அட்வைஸ்'

அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பத்திரிகைகள் உள்ளிட்ட மீடியாக்கள் மீது, சரமாரியாக அவதுாறு வழக்குகளை தொடர்ந்துள்ள தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் நெத்தியடி கொடுத்துள்ளது.

சரமாரியாக அவதூறு வழக்குகள் தொடரும் தமிழக அரசுக்கு... நெத்தியடி!: விமர்சனங்களை சகிக்கும்படி ஜெ.,வுக்கு நீதிபதிகள் 'அட்வைஸ்'

'பொது வாழ்க்கையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும்' என்றும், நீதிபதிகள் அறிவுரை கூறியுள்ளனர்.

தமிழக அரசு தொடர்ந்துள்ள பல்வேறு அவதுாறு வழக்குகளை எதிர்த்து, தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா ஆகியோர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிவுரை அளிக்கும் வகையில் நீதிபதிகள் கூறியதாவது:

ஆரோக்கியமான ஜனநாயகம் வேண்டும்; ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க முடியாது.

நீங்கள், பொது வாழ்க்கையில் இருப் பதால், சிலர் உங்களை விமர்சனம் செய்வர்; அந்த விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். கொள்கை விமர் சனங்கள் அவதுாறு பேச்சுக்கள் ஆகாது. ஆனால், நீங்கள் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி, அவதுாறு வழக்குகள் தொடர்ந்துள்ளீர்கள். தேவையெனில், நீங்கள் தனிப்ட்ட முறையில் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்.

அரசியல் விரோதத்தை தீர்க்க, அவதுாறு சட்டத்தைபயன்படுத்தி உள்ளீர்கள். நாட்டிலே யே தமிழகத்தில் மட்டுமே, இதுபோல் அவதுாறு வழக்கு சட்டம், துஷ்பிரயோகம் செய்யப் படுகிறது. மற்ற மாநிலங்களில் இருந்து, இது போன்ற வழக்குகள் இங்கு வரவில்லை.

உடல் நலம் குறித்து கருத்து தெரிவித்ததற்கு, ஓய்வு எடுப்பது குறித்து கூறியதற்கு, குடிநீர் பற்றாக்குறை மற்றும் தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை என்று கூறியதற்கு எல்லாம், அவதுாறு வழக்கு தொடரப்பட்டுள் ளது.அவதுாறு வழக்கு சட்டம், தவறாக பயன் படுத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும், அந்த சட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஜனநாயகம் ஆரோக்கிய மானதாக இருக்க வேண்டும்; இல்லையென்றால், மக்களின் கேலிக்கு ஆளாக நேரிடும்.

விமர்சனம், எதிர்ப்பு, சகிப்புத்தன்மை, எதிர்பார்ப்பு போன்ற அனைத்தும் அடங்கியதே

Advertisement

ஜனநாயகம். விமர்சனம் செய்ததற்காக, ஜனநாயகத்தின் இறக்கையைவெட்டி விடக் கூடாது. மக்களுக்காக, மக்களால், மக்களுக்கான அரசு என்பது தான் ஜனநாயகம்; அதை குலைக்க வேண்டாம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக, அடுத்த மாதம், 21க்குள் பதிலளிக்கும்படி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

213 அவதுாறு வழக்குகள்:

கடந்த, 2011 மே, 16 முதல், 2016, ஜூலை, 28 வரை, தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதுாறு வழக்குகள் பட்டியல், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 70 பக்கங்கள் அடங்கிய இந்த பட்டியலில், மொத்தம், 213 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் யாருக்கு எதிராக எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்பதன் விபரம்:

தி.மு.க.,வுக்கு எதிராக, 85 வழக்குகள்; பத்திரிகைகள், மீடியாக்கள் மீது, 55 வழக்குகள்; தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீதான, 28 வழக்குகள் உட்பட, தே.மு.தி.க. மீது, 48 வழக்குகள்; பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி மீது ஐந்து; காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஏழு வழக்குகள் உட்பட, மொத்தம், 213 அவதுாறு வழக்குகள் தமிழக அரசால் தொடரப்பட்டுள்ளன.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (143)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
29-ஆக-201602:31:28 IST Report Abuse

Muruganஅவர் கையில் மீண்டும் ஆட்சியை கொடுத்தால் அப்படிதான் ........

Rate this:
Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்
26-ஆக-201605:00:31 IST Report Abuse

Krishna Sreenivasanஆன் அல்லது பெண் எப்போதுமே நான் நான் என்று சொல்லினேனே இருக்காளா அவ்ளோதான்

Rate this:
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
25-ஆக-201623:00:54 IST Report Abuse

X. Rosario Rajkumarவிஜயகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களோடு இந்தப் பரிசும் உரித்தாகுக..

Rate this:
மேலும் 140 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X