அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்: கோர்ட்டில் அரசு தகவல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்:
கோர்ட்டில் அரசு தகவல்

சென்னை:'அரசியல் சட்டப்படி, வரும் அக்டோபரில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும்; தவிர்க்க முடியாத காரணங்களால், தற்போதுள்ள தொகுதி வரை யறையின்படியே தேர்தல் நடக்கும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்: கோர்ட்டில் அரசு தகவல்

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., - பா.ம.க., சார்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.கடந்த, 2011ல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதி வரை யறை செய்து, உரிய இடஒதுக்கீடு வழங்கி, தேர்தல் நடத்த வேண்டும்; மின்னணு இயந் திரங்களை பயன்படுத்த வேண்டும்; வெளி மாநில அதிகாரிகளை நியமித்து, தேர்தல்

நடத்த வேண்டும் என, மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

இவ்வழக்கு, நீதிபதிகள் ஜி.ரமேஷ், எம்.வி.முரளி தரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசார ணைக்கு வந்தது. அப்போது, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தாக்கல் செய்த பதில் மனு:

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட வர்களின் பதவிக்காலம், 2016, அக்., 24ல் முடிவடை கிறது. எனவே, சட்டப்படி, அக்டோபரில் தேர்தல் நடத்த வேண்டும். பஞ்சாயத்து வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2014ம் ஆண்டில் தான் கிடைத்தது.அனைத்து நடைமுறை களையும் பின் பற்றி, ஒரு லட்சத்துக்கும் மேலான வார்டு களில், மறுவரையறை செய்யும் பணியை, குறைவான நாட்களில் முடிக்க முடியாது. இடஒதுக்கீடு பிரிவி னருக்காகஒதுக்கப்பட்ட இடங்கள், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இருக்கும்.

ஏராளமான வார்டுகள் இருப்பதால், புதிய வரைய றையை, அக்டோபருக்குள் முடிக்க முடியாது. தற்போது இருக்கும் வார்டுகளின் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த, அரசு முடிவு செய்துள்ளது.எனவே, 2011 மக்கள் தொகை கணக்

Advertisement

கெடுப்பின் அடிப்படையில் தான், பஞ்சாயத் துகளில் இடஒதுக்கீடு இருக்கும்; 2001ம் ஆண்டு அடிப்படையில் இருக்காது.

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களுக்கு, தடை விதிக்க தேவையில்லை.ஏற்கனவே, முழு வீச்சில், தேர்தல் பணிகள் சென்று கொண்டிருக்கின் றன.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள் ளது.

மனு குறித்து, மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணை யை, செப்., 1க்கு, 'டிவிஷன் பெஞ்ச்' தள்ளி வைத்தது.


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
25-ஆக-201613:11:01 IST Report Abuse

Pasupathi Subbianஇந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் புதுப்புது கோடீஸ்வரர்களை உருவாக்க முயற்சி. அனைத்து கட்சிகளும் தற்போதுள்ள கோடீஸ்வரர்களும் மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கக்கூடாது. மேலும் பல பல கோடீஸ்வரர்களை உருவாக்க முயற்ச்சிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். அனைவரும் நலமாக இருக்கவேண்டும் என்பதே நமது பொது நோக்கம்.

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
25-ஆக-201608:02:16 IST Report Abuse

தங்கை ராஜாஎந்த கணக்கு போடடா ஜெயிக்க முடியும்ங்கறது மட்டும் தான் இப்போ முக்கியம். அது எந்த வருஷத்திய கணக்கெடுப்பா இருந்தா என்ன..........

Rate this:
Subbu - chennai,இந்தியா
25-ஆக-201614:24:10 IST Report Abuse

Subbuஇங்கு இந்த உள்ளாட்சி தேர்தல்கள் என்பதே ஒரு ஜனநாயக படுகொலை நடப்பது ஆகும், இப்போதெல்லாம் இந்த தேர்தல்களில் ஜாதி,பணம், இனம், வட்டார வெறிகள், தூண்டப்பட்டு ரௌடிகள், கொலைகாரர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள், ஜாதி தலைவர்கள் ஒழுக்கம் கேட்ட நபர்கள் மட்டுமே போட்டி இட்டு வெற்றி பெரும் நிலை உள்ளது. பணத்தை வாரி இறைத்து, சாராயம், பிரியாணி, ஒட்டு போட ஆயிரக்கணக்கில் பணம் தந்து வெற்றியை ஈட்டுகிறார்கள். ஓட்டுச்சாவடிகளில் பகிரங்கமாக கள்ள ஒட்டு போடப்படுகிறது. தேர்தல் நாளில் ரௌடிகள், சமூக விரோதிகள் பயங்கர ஆயுதங்களுடன் வாகனங்களில் சுற்றி திரிந்து மக்களை அடித்து, துரத்தி, வெளியேற்றி கள்ள ஓட்டுக்களை பதிவு செய்வதும் அதற்கு அதிகாரிகள், காவல்துறை ஒத்துழைப்பு அளிப்பதும், நிஜம். இப்படிப்பட்டவர்கள் வெற்றிபெற்று எல்லாவற்றிலும் பணம் பார்த்து கொள்ளை அடித்து சொத்து சேர்த்துக்கொண்டு உள்ளார்கள். இதனால்தான் இவற்றில் போட்டியிடுவதற்கு கடும்போட்டி நிலவி கொலைகளும் நடக்கிறது. இது ஒழுங்குபடுத்த 2011ல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதி வரையறை செய்து, வெளிமாநில காவல்துறை, அல்லது துணை ராணுவ பாதுகாப்புடன்,, தேர்தல் நடத்த வேண்டும் மின்னணு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் வெளி மாநில அதிகாரிகளை நியமித்து, தேர்தல் நடத்த வேண்டும் என, கோரப்பட வேண்டும். நீதித்துறையும் இதனை நன்கு ஆய்வு செய்து தீர்ப்புகள் வழங்கவேண்டும், வேண்டுமென்றால் தேர்தலையே 6 மாதங்கள் தள்ளி வைக்கலாம்....

Rate this:
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஆக-201602:15:12 IST Report Abuse

முக்கண் மைந்தன் ஒவ்வொரு கேசையும் அதோட உண்ம/நெஜ தன்மய பாத்து தீர்ப்பு சொல்லோணும். அத்த விட்டுட்டு இப்டி "பொத்தாம் பொதுவா" அட்வைஸ் என்ன வேண்டிகெடக்கு.... இதுக்கு நெத்தியடினு தலப்பு வேற.... "யாரோ"வ விட மலருக்குதேன் ரெம்ப சந்தோசம் போல....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X