தொழில் திறன் வளர்ப்பை குலக்கல்வி என்பதா?

Added : ஆக 27, 2016 | கருத்துகள் (4) | |
Advertisement
மத்திய அரசால் கொண்டு வரப்பட உள்ள கல்விக் கொள்கை பற்றி கட்சிகள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றன. அவற்றில், சில கட்சிகளின் பதிவுகள், இன்னும் முந்தைய நுாற்றாண்டில் அவை இருப்பதையே காட்டுகிறது. 'மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, திறன் வளர்ப்பைக் கொண்டு வருவது போல், குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறது' என, ஒரு அரசியல் கட்சித் தலைவர் கூறி இருக்கிறார்.
தொழில் திறன் வளர்ப்பை குலக்கல்வி என்பதா?

மத்திய அரசால் கொண்டு வரப்பட உள்ள கல்விக் கொள்கை பற்றி கட்சிகள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றன. அவற்றில், சில கட்சிகளின் பதிவுகள், இன்னும் முந்தைய நுாற்றாண்டில் அவை இருப்பதையே காட்டுகிறது. 'மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, திறன் வளர்ப்பைக் கொண்டு வருவது போல், குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறது' என, ஒரு அரசியல் கட்சித் தலைவர் கூறி இருக்கிறார். திறன் வளர்ப்பு என்ற திட்டத்தை, குலக்கல்வி கொண்டு வருவது போல் உள்ளது என்ற விவாதம், இன்றைய சூழலில், கல்வி, உலக வளர்ச்சிப் போக்கை மேற்படியோர் புரிந்துகொள்ளவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

தொழில் திறன் வளர்ப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது; அதற்கு எவ்வளவு பொருள் ஈட்டும் வாய்ப்புள்ளது என்பதை வளர்ந்த நாடுகளுக்குச் சென்று பார்த்தால் தெரியும்.

இந்திய கல்வித் திட்டத்தில், தொழில் திறன் வளர்ப்பில் கவனம் செலுத்தத் தவறியது தான், நாம் செய்த மிகப்பெரிய தவறு என்பதை, இந்தியக் கல்வியாளர்களும், ஆட்சியாளர்களும் உணர்ந்ததன் விளைவு தான், திறன் வளர் கல்வி பற்றிய பார்வை தீவிரமாக்கப்பட்டுள்ளதற்கு காரணம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, குறிப்பாக தொழில் மற்றும் சேவைத்துறைக்கு, 50 கோடி திறன் வளர்க்கப்பட்ட ஆட்கள் தேவை என்ற இலக்கை நிர்ணயித்து, ஒரு இயக்கம் போல் செயல்படுகிறது மத்திய அரசு. இந்தியாவிலும் சரி, உலகத்திலும் சரி, உயர்நிலையில் வேலைவாய்ப்பு இல்லை. அதற்கு சற்று கீழான துறைகளில் தான் வேலைவாய்ப்பு உள்ளது. பொறியியல் பட்டதாரியை விட, அவருக்கு கீழ் வேலை செய்ய, தொழில் திறன் பெற்ற பணியாளர்கள் கிடையாது. ஒரு டாக்டருக்குக் கீழ் பணி செய்யத் தேவையான தொழில் திறன் பெற்ற பணியாட்கள் கிடையாது. மேம்பட்ட தொழில்நுட்பத்தை உள்வாங்கி கட்டடங்கள் கட்டத் தேவையான தொழில் திறன் மிக்க கொத்தனார் கிடைக்கவில்லை. இந்தப் பணிகளைச் செய்ய தொழில் திறன் பெற்ற, 'டிப்ளமோ' பெற்ற ஆண்களும், பெண்களும் லட்சக்கணக்கில் தேவை.

இன்று, எல்லாத் துறைகளிலும் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உள்வாங்கி பயிற்சி பெற்று வரவில்லை என்றால், எந்தத் தொழிலிலும் வெற்றி பெற இயலாது. அதற்குத் தேவையான தொழில் திறனை வளர்த்து கொண்டு விட்டால், எந்தத் தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். இன்று, தொழிலுக்கு புது மரியாதை வந்து விட்டது; ஏனென்றால் எல்லாத் தொழில்களிலும் தொழில்நுட்பம் புகுந்து விட்டது.

இதற்கு உதாரணம், புதிதாக உருவாகும் முடி திருத்தகம். அது, முடி வெட்டும் நிலையம் மட்டுமல்ல; அழகு அல்லது பொலிவூட்டும் தொழில்நுட்பம் நிறைந்த இடமாக மாறி விட்டது. ஆகையால், நாவிதப் பணி மட்டும் பயின்றவர் அதைச் செய்ய இயலாது. அது மட்டுமல்ல, இந்தத் தொழிலில் நிறைய தொழில்நுட்பக் கருவிகளையும், அழகு சாதனப் பொருட்களையும் பயன்

படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஆகையால் தான், முடி திருத்தும் நிலையங்களில் நாவிதர் குடும்பத்துப் பெண்களோ, ஆண்களோ வேலை செய்யவில்லை. பல சமூகங்களைச் சேர்ந்தவர்களும் வேலை செய்கின்றனர். ஏனென்றால், அங்கு வருமானமும் உயர்ந்து விட்டது. பயிற்சி இல்லாமல் இந்தப் பணியைச் செய்ய இயலாது; படிப்பு இல்லாமலும், இந்தப் பணியைச் செய்ய இயலாது. இந்தியாவில், 24 துறைகளில் அபரி மிதமான வேலைவாய்ப்பு இருக்கிறது. இந்தத் துறைகளில் மட்டும், 11 கோடி ஆட்கள் தேவை. ஆனால், இந்தியப் பணியாளர்களில், 2 சதவீதம் மட்டுமே முறையாகப் பயிற்சி பெற்றவர்கள். வரும், 2020-ல், உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா மாறப் போகிறது; அப்போது, பணி மேற்கொள்ளும் இந்திய இளைஞனின் சராசரி வயது, 29- ஆக இருக்கும். நம் இளைஞர்களை எப்படி தொழில் திறன் பெற்றவர்களாக மாற்ற வேண்டும், அப்படி செய்தால், இந்தியா பெறப்போகும் பயன்கள் என்னென்ன என்பதை, சமீபத்தில் ஜெர்மனியில் வெளியான, 'இந்தியா: வேலை உலகத்திற்கு பணியாட்கள் தயாரிப்பு' என்ற தலைப்பிலான புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு இருக்கும் வாய்ப்புக்களும், அவற்றை பயன்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் பட்டியல் போட்டு காட்டியுள்ளது, அந்தப் புத்தகம். அந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ள புள்ளி விபரங்களின் படி, மிகப்பெரிய வாய்ப்பு, நம் இளைஞர்களுக்குக் காத்திருக்கிறது. அதைச் சாத்தியப்படுத்த நம் மாநில அரசுகள் முனைந்து செயல்பட வேண்டும். அதுபோல, நம் கல்விச்சாலைகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அந்தப் புத்தகத்தில் தெளிவாக்கியுள்ளனர். மிகப்பெரிய போராட்ட இயக்கம் போல் நடந்தாலன்றி, இந்தியாவில் தொழில் திறன் வளர்ப்பு கனவே மாறும் என்றும் அதில் விளக்கப்பட்டுள்ளது.


தொழில் திறன் வளர்ப்பு குலக்கல்வியாகுமா? : தொழில் கல்வியை நம் ஜாதி களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். அதைப் போக்க ஒரே வழி, தொழில் செய்வோருக்கு கிடைக்கும் வருமானத்தை கூட்டி விட்டால், எந்தச் ஜாதியைச் சார்ந்தவரும் எந்தப் பணிகளுக்கும் வந்துவிடுவர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடந்த கொண்டாட்டத்தின் போது, 'கல்பனா சாவ்லா விருது' பெற்ற ஜெயந்தி, தொழில் திறன் என்பது குலக்கல்வியாக இ ருக்க வேண்டியதில்லை என்பதற்கு உதாரணம். மனிதர்கள் அனைவரும் சமம் என, நமக்கு போதிக்கும் இடங்களுள் ஒன்று, சுடுகாடு; அவர் அங்கு தான் பணியாற்றுகிறார். அவர், பிராமணப் பெண்; எம்.ஏ., பொருளாதாரம் படித்தவர். நாமக்கல் நகராட்சி, சேந்தமங்கலம் மின் மயானத்தில், பூங்காவை பராமரிக்கும் வேலையில் ஆரம்பித்து, தகனப் பணியையும் செய்து வந்தார். 2013ல் இப்பணியில் சேர்ந்த இவர், 2,500க்கும் மேற்பட்டோரின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்துள்ளார்; தற்போது, மின் மயானத்தின் மேலாளராக இருக்கிறார். இரண்டாம் நிலை பணியாளர்கள்: தொழிற்சாலைகளில் பணிபுரிய பணியாட்கள் தேவை. அவர்களுக்குத் தேவை, பி.இ., படித்த பொறியியல் பட்டதாரிகள் அல்ல; ஐ.டி.ஐ., எனப்படும் தொழில்கல்வி படித்த அல்லது பாலிடெக்னிக் படித்த இளைஞர்கள். இன்றைக்கு அடுக்குமாடி கட்டுமானப் பணிகளுக்கு ஆட்கள் பெருமளவில் தேவை. அவர்கள் நவீன கட்டுமான கருவிகளைக் கையாளும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதே போல் உலகத்தில் பெரும் பற்றாக்குறை செவிலியர்களுக்கு உள்ளது. இந்தியாவில் படித்த செவிலியர்களுக்கு, மேற்கு ஐரோப்பிய நாடுகளில், 'விசா' வழங்க ஐரோப்பிய யூனியன் கதவைத் திறந்து விட்டுள்ளது. அங்கு ஒரு செவிலியர் சம்பாதிக்கும் பணத்தை, நம் ஊரில் ஒரு டாக்டர் கூட சம்பாதிக்க முடியாது. உலகில் வேலைவாய்ப்பு இன்று இடை நிலையில் தான் அதிகம் இருக்கிறது. இதற்காக தான் பல்வேறு பயிற்சி நிலையங்களை பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் உருவாக்குகின்றன. இது தான், இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். இதை தான் இந்திய அரசு செய்து கொண்டுள்ளது; இதை தான் கொள்கையில் கொண்டு வர முனைகிறது. இதைக் குலக்கல்வித் திட்டம் என, வர்ணிப்பது, புரிதலில் ஏற்பட்ட ஏதோ ஒரு கோளாறு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்.


- க.பழனித்துரை -


பேராசிரியர், காந்தி கிராம பல்கலைக்கழகம்


இ-மெயில்: gpalanithurai@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (4)

Raj Pu - mumbai,இந்தியா
24-செப்-201619:00:26 IST Report Abuse
Raj Pu மனிதர்கள் அனைவரும் சமம் என, நமக்கு போதிக்கும் இடங்களுள் ஒன்று சுடுகாடு. அவர் அங்கு தான் பணியாற்றுகிறார். அவர், பிராமணப் பெண் எம்.ஏ., பொருளாதாரம் படித்தவர். // இங்கு சமம் என்பது பல இடங்களில் இல்லை என்பது எதார்த்தம். இதை பலர் குலத்தொழிலாக செய்ய, ஒரு பிரமணப்பெண் இதை செய்வதால் இது பெரிதாக பேசப்படுகிறது என்பதே ஜாதி உயர்வை காட்டுகிறது அல்லவே. இந்த பெண்ணுக்கும் அவர் சார்ந்த சமூகம் உதவி செய்யாது கலப்பு திருமணம் செய்து பிறகு தான் வேறு வழியின்றி இத்தொழிலில் ஈடுபட்டுளளார்
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
01-செப்-201608:29:24 IST Report Abuse
Rajarajan எல்லாம் ஜாதி அரசியல் தான் காரணம். இதை பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்த சமுதாயத்தின் தலைவர்கள் மற்றும் கருணாநிதி போன்றோர் எல்லாம் தங்கள் வாரிசுகளை அகில உலக தரத்திற்கு உயரத்தை, தங்கள் பொருளாதாரத்தையும் உயர்த்திவிட்டனர். இவர்கள் பேச்சை கேட்டு, இவர்கள் பின்னால் செல்லும் இந்த பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்ட பிரிவினர் தான் மிகவும் பாவம். தங்களுக்கு திறமை மற்றும் பொருளாதார வசதி இருந்தும், தங்களை எப்போதும் தாழ்த்திக்கொண்டு, இடவொதுக்கீடு வேண்டும் என்று தங்களின் தகுதியை தாங்களே குறைத்து மதிப்பிட்டுக்கொள்வர். இவர்களை போட்டி மனப்பான்மையிலிருந்து பிரித்துவைத்து சூழ்ச்சி செய்து, ஜாதி ஏகடியம் பேசியே, இவர்களை எப்போதும் தங்களின் அடிமையாகவே வைத்திருப்பர். இதை பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் புரிந்துகொள்ள வேண்டும். அடிமை தளத்திலிருந்து வெளியே வந்தால்தான், இவர்களின் மதிப்பு உண்மையாகவே சமுதாயத்தில் வளரும். ஆனால், இவர்கள் பேச்சை எந்த பிராமண பிரிவை சேர்ந்தவராவது செவிசாய்த்திருக்கின்றனரா ?? ஆனால், இந்த சுயநல அரசியல்வாதிகளின் பருப்பு, அவர்களிடம் மட்டும் வேகவே வேகாது. எனவே தான் அவர்களுக்கு என்று ஒரு அந்தஸ்து இருப்பதாக இந்த சமூகம் கருதுகிறது. இந்த அந்தஸ்தை அனைத்து சமுதாயத்தினரும் பெற்று, அனைவரும் சமமாக வாழ, இவர்களின் ஜாதி தலைவர்கள் அனுமதித்தால் தான் உண்டு.
Rate this:
Cancel
fire agniputhran - jakarta,இந்தோனேசியா
29-ஆக-201619:44:45 IST Report Abuse
fire agniputhran இதனை எதிர்த்து முழக்கமிட்ட கம்யூனிஸ்ட் காட்சிகள் தான் முன் நிற்கும். இது போல் தமிழக தானை தலைவர் இதனை எதிர்த்து முழக்கமிடுவார்........மற்றவர்களை உசுப்பேற்றி விட்டு இவர் குடும்பத்தினர் மாறன்களை போல் கோடியில் கொள்ளை அடித்து உலக பணக்காரர்கள் வரிசையில் சேர்ந்து கொள்வர் ....இதனை பற்றி யாரேனும் கேட்டு விட்டால் இந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் முன்னேறுவதை மற்றவர்கள் பொறுத்து கொள்வதில்லையே .......ஏனிந்த வயிற்று எரிச்சல் ????என்று புலம்ப ஆரம்பித்து விடுவார்....இந்த கட்டு மரக்காரர்......
Rate this:
Raj Pu - mumbai,இந்தியா
24-செப்-201619:02:23 IST Report Abuse
Raj Puமுதன் முதலில் இந்தியாவில் ஊழல் முந்திரா ஊழல் தொகை 28 கோடி. அது ஒரு மாநிலத்தின் பட்ஜெட் தொகை. அதில் சம்பத்தப்பட்ட அமைச்சர் வெறும் ராஜினாமா மட்டுமே, அன்றைய கடுமையான தண்டனை கொண்டு வந்திருந்தால் இன்று இப்படி ஊழல் செய்ய யாரும் பயப்படுவார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X