நான் பேரழகி ... அறந்தாங்கி நிஷா| Dinamalar

நான் பேரழகி ... அறந்தாங்கி நிஷா

Added : ஆக 28, 2016 | கருத்துகள் (8)
நான் பேரழகி ... அறந்தாங்கி நிஷா

பேச்சில் நகைச்சுவை, சுவாரஸ்யம் இல்லை என்றால், கேட்பவர்கள் குறட்டை விடாத குறையாக, உடலை 360 டிகிரியில் அசைத்து, அசைத்து எதிர்ப்பை வெளிப்படுத்துவர். மேடை பேச்சின் போது நகைச்சுவை முக்கியம். இன்றைய கால கட்டத்தில் நகைச்சுவையாக பேசினால், எங்கே தன்னை சமூகம் தாழ்வாக எண்ணி விடுமோ, என கருதி கருத்துக்களோடு பேசும் பெண்களே அதிகம். ஆனால், நகைச்சுவையாக பேசி, பிறரை மகிழ்விக்கும் பெண்களின் வரிசையில் தற்போது முன்னணியில் இருக்கிறார் அறந்தாங்கி நிஷா. எட்டு ஆண்டுகளாக மேடை பேச்சாளராக வலம் வந்து, தற்போது சின்னத்திரை, அடுத்தது சினிமாத் திரை என தடம் பதித்து வருகிறார்.அவரிடம் ஒரு சில வார்த்தைகள்.* மேடை பேச்சாளரானது ?சிறு வயதில் இருந்து பேச்சு போட்டியில் பங்கேற்றேன். எதிலும் பரிசு வாங்கியது கிடையாது. பங்கேற்பேன். கல்லுாரி படிப்பின்போது பேச்சு போட்டிக்கு தயாராவதற்காக புத்தகங்களை வாங்கி படித்தேன். நகைச்சுவை உணர்வு இருந்ததால், அதன் பிறகு மேடை பேச்சாளராக எளிதில் வாய்ப்பு கிடைத்தது. எட்டு ஆண்டுகளாக இப்பயணம் தொடர்கிறது.* கல்லுாரி காலங்கள்?கல்லுாரியில் படிக்கும்போது, நாங்கள் ஒரு குழுவாக சுற்றுவோம். எல்லோரையும் கலாய்ப்பதால் எங்கள் டீமுக்கு 'ரவுடி டீம்' என்று பெயர்.* மேடை பேச்சு பயமா?எத்தனையோ மேடை ஏறி இருந்தாலும் ஒவ்வொரு மேடையும் பயமாக இருக்கும். செய்தியை எளிதாக கூறி விடலாம். சிரிக்க வைத்து பேசுவதால் பயம் வரும்.
* பேச்சுக்கலை ஆசான்?புத்தகங்கள்
* புகழ் எதிர்பார்த்ததா?எதுவும் எதிர்பார்த்து நடப்பது இல்லை. வருகின்ற வாய்ப்பை விடுவதில்லை.
* எது அழகு?யாருக்கும் துரோகம் செய்யாமல் இருப்பது உண்மையான அழகு. தற்போது நான் பேரழகியாக உணர்கிறேன்.* பெண் பேச்சாளருக்கு தடை உள்ளதா?பெண் பேச்சாளர்கள் இருந்தாலும், சமுதாயம், குடும்பம் வெளியே வர அனுமதிப்பது இல்லை. பெண்கள் வெளியே வருவதற்கு குடும்பத்தில் உள்ளவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க வேண்டும். தைரியம் இருந்தால் பெண்கள் 100 சதவீதம் சாதிக்கலாம்.* உங்களின் நம்பிக்கை?'கலக்க போவது யாரு' டைரக்டர் தாம்சன். அவர் தான் என்னை ஊக்கப் படுத்தி கடைசி வரை நம்பிக்கை கொடுத்தார். பெரிய திரையில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அவர் கொடுத்த நம்பிக்கை தான்.
* நீங்கள் சந்தித்த தோல்விகள், பிரச்னைகள்?தோல்வி ஒன்றும் இல்லை. பிரச்னை என்று பார்த்தால், மேடை பேச்சாளராக வலம் வந்த காலங்களில், பேசும்போது போலீஸ் அனுமதி இல்லை, என்று நிறுத்தி விடுவார்கள். நிறைய பட்டிமன்றங்களில் நான்தான் கடைசி பேச்சாளர். துாங்கியவர்கள் அனைவரையும் எழுப்பி பேச வைக்க வேண்டும். என்னை பொறுத்தவரை, பேசுவதற்கு முன்பு கைதட்டல் வராது. பேசி முடிந்த பிறகு தான் கைதட்டல் கிடைக்கும். இப்போது முதலில் பேச அனுமதிக்கின்றனர்.
* அடிக்கடி சொல்லும் வாசகம்?வாய்ப்பு இருந்தால் முயற்சித்து பார்க்க வேண்டும், தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
* ரோல்மாடல்?நடிகர் வடிவேல். அவரை ரசித்ததால் அவரது பாடி 'லாங்வேஜ்' எனக்கு வரும்.
* யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும் ?அம்மாவிடம் பேசினால் அனுபவம் கிடைக்கும். நிறைய கற்று கொடுப்பவர் அம்மா தான்.* பெண் பேச்சாளர்கள் வளர வழி?பேசும்போது நகைச்சுவையாக பேச கற்றுக் கொள்ள வேண்டும். * எதில் நகைச்சுவை அதிகம்? உண்மை சம்பவத்திலா? கற்பனையிலா?கற்பனையில் அதிகம். உண்மை சம்பவத்திலும் இருக்கிறது.* நச்சுன்னு ஒரு தத்துவம்?பிறக்கும் போது அழுது பிறக்கிறோம், இறக்கும் போது பிறரை அழ வைத்து இறக்கிறோம். இடைப்பட்ட காலங்களில் மற்றவரை மகிழ்ச்சியுடன் வாழ வைப்போம். வாழ்த்த aranthainisha@gmail.comWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X