"ஜப்தி செய்யும் பஸ்சுக்கு "கிஸ்தி திருப்பூரில் அதிகாரிகள் புது யுக்தி| Dinamalar

"ஜப்தி' செய்யும் பஸ்சுக்கு "கிஸ்தி' திருப்பூரில் அதிகாரிகள் புது யுக்தி

Added : ஆக 30, 2016
Share
""போராட்டம் முடிவுக்கு வந்ததில் வக்கீல்களை விட, திருப்பூர் போலீசார் சிலர், குஷியா இருக்காங்களாம்.'' என்ற படி, வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.""அடடே, வாங்கக்கா. வரும் போதே ஆவி பறக்க செய்தியை கொண்டு வர்றீங்க. சரி, போலீசார் ஏன் சந்தோஷப்படறாங்க,'' என்று கேட்டாள் மித்ரா.""வக்கீல்கள் சில பேரை கைக்குள் போட்டு, சில போலீஸ்காரங்க, வேலையை முடிக்கறாங்களாம். அது தான்
"ஜப்தி' செய்யும் பஸ்சுக்கு "கிஸ்தி' திருப்பூரில் அதிகாரிகள் புது யுக்தி

""போராட்டம் முடிவுக்கு வந்ததில் வக்கீல்களை விட, திருப்பூர் போலீசார் சிலர், குஷியா இருக்காங்களாம்.'' என்ற படி, வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.
""அடடே, வாங்கக்கா. வரும் போதே ஆவி பறக்க செய்தியை கொண்டு வர்றீங்க. சரி, போலீசார் ஏன் சந்தோஷப்படறாங்க,'' என்று கேட்டாள் மித்ரா.
""வக்கீல்கள் சில பேரை கைக்குள் போட்டு, சில போலீஸ்காரங்க, வேலையை முடிக்கறாங்களாம். அது தான் சந்தோஷத்துக்கு காரணம்,'' என்றாள் சித்ரா.
""புரியும்படி சொல்லுங்க,'' என்று மித்ரா கேட்க, ""சிட்டில, போலீஸ்காரங்க அதிக கேஸ் போடறதே,
டூ வீலர் கேஸ் மட்டுந்தான். அதில் தினமும் குறைந்தது, "டிரங்க் அன்ட் டிரைவ் கேஸ்' இவ்வளவு பிடிச்சாகணும்னு, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் இலக்கு இருக்காம். இந்த வழக்கு எல்லாம், குறிப்பிட்ட சில வக்கீல்களிடம் மட்டும் தான் போகணும்னு, வாய்மொழி உத்தரவு. இதற்கு ஒரு தொகை, போலீசுக்கு வக்கீல் மூலம் போகுதாம். முறையாக மாமூல் தராத ஒருவரோட "லைசென்ஸ்' வேறொருத்தருக்கு மாறியிருக்கு. இதிலே வேடிக்கை என்னன்னு கேட்டீன்னா, அந்த வக்கீல் மீது போலீசாரே பொய்ப்புகார் வழக்கு பதிவு செய்திருக்கறது தான்,'' என்று சித்ரா விவரித்தாள்.
""வேறென்ன விசேஷம் இருக்கு,'' என, ஆவலாக வினவினாள் மித்ரா.
""ஆயுதப்படை பெண் போலீஸ் ஒருத்தர், "பெரேடுக்கு" பயிற்சிக்கு வரலைன்னு ஒரு அதிகாரியால் கண்டிக்கப்பட்டாரு. அந்த அதிகாரியை பிடிக்காத மற்றொரு அதிகாரி, அப்பெண் போலீசிடம், தற்கொலை நாடக ஐடியா கொடுத்திருக்கார். ஆனா, இது நாடகம்னு தெரிய வந்ததும், மேலதிகாரிங்க கண்டிச்சிருக்காங்க. தற்கொலை நாடகத்தை உறுதிப்படுத்த, மறுநாளே மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட, மேலதிகாரிகள், இவர்களின் நடவடிக்கையை நேரடியாக கண்காணிக்க ஆரம்பிச்சிருக்காங்க, '' என்றபடி, மித்ரா கொண்டு வந்த காபியை உறிஞ்சினாள் சித்ரா.
""போலீஸ் "கண்டுகொள்ளும்' பிரச்னையை மட்டுமே சொல்லறீங்க; கண்டுகொள்ளாத ஒரு பிரச்னையும் இருக்கு,'' என்று, மித்ரா பொடி வைத்தாள்.
""அட, அது என்ன மேட்டர்,'' என்று சித்ரா ஆர்வத்தோடு கேட்டாள்.
""மாநகராட்சி பெண்கள் பள்ளி, 8ம் வகுப்பு மாணவி ஒருத்தி, வகுப்புக்கு ரெண்டு நாள் வரலை. பிறகு தான், வெளியே சுற்றித் திரிஞ்சது தெரிய வந்தது. இதை, பெற்றோர் முன், மாணவியை ஆசிரியை கண்டிச்சிருக்கார். இதனால் வருத்தமடைஞ்ச மாணவி, கடையில் சாணிப்பவுடர் வாங்கி குடிச்சிருக்கார். நல்லவேளை, காப்பாத்திட்டாங்க. திருப்பூர்ல, இன்னும் பல கடைகளில் சாணிப்பவுடர், தாராளமா கிடைக்குது. இதை, போலீசும் கண்டுக்கறதில்ல,'' என்று, வேதனையோடு மித்ரா சொன்னாள்.
""விபத்து வழக்குகளில் பஸ் ஜப்தி நடவடிக்கையில், பலரும் பல விதமாக பணம் பார்க்கறாங்க,'' என்று சித்ரா கூறினாள்.
""அதுதான் ஊர் பூராவும் தெரியுதே. சில ஆயிரம் ரூபாய்க்கு ஜப்தி செய்யும் பஸ்களை கூட விடுவிக்க, நடவடிக்கை எடுக்காத அதிகாரிங்க, பல லட்சம் ரூபாய் இழப்பீட்டை செலுத்தி, சில பஸ்களை மட்டும் விடுவிக்கறாங்க. அவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் "மேல் வருமானம்' தான் இதற்கு காரணமாம். அடிமட்டத்தில் இருந்து, "மேல்மட்டம்' வரை, பங்கு போகிறதாம்,'' என்று பதிலளித்தாள் மித்ரா.
""ஆமா, சரியா சொன்னே. அதுமட்டுமா, ஜப்தி செய்து டிப்போவில் நிற்கும் பஸ்களில் இருந்து, டயர் உள்ளிட்ட உதிரிபாகங்களை மாத்திடறாங்களாம். கீழ் மட்டத்தில் உள்ளோர் சிலர், இப்படி காசு பாக்குறாங்க. அதுமட்டுமில்ல, டிப்போவில் நிற்கும் பஸ்சில் இருந்து இரவு நேரத்தில், பம்ப் வைத்து, டீசல் உறிஞ்சிடறாங்களாம்,'' என்று, சித்ரா வேதனையோடு கூறினாள்.
""சரி, உள்ளாட்சி தேர்தல் பத்தி தகவல் உண்டா,'' மித்ரா கேட்டாள்.
""மாநில தேர்தல் கமிஷனர், மாவட்டம் வாரியா வந்துட்டு போனப்பத்தான், உள்ளாட்சி தேர்தல் நடக்கறது உறுதியாகியிருக்கு. கட்சிக்காரங்களும், தயாராகிட்டு வர்றாங்க,'' என்றாள் சித்ரா.
""அவிநாசி பெரிய கோவிலில், குரு பெயர்ச்சியை ஏன் மாத்தி வெச்சீங்கன்னு, செயல் அலுவலரை, பக்தர்கள் கேள்வியால துளைச்சு எடுத்துட்டாங்க. "டென்ஷன்' ஆன அவரு,"கொலை மிரட்டல் விடறாங்க'னு, போலீஸ்ல புகார் கொடுத்துட்டாரு. ஸ்டேஷன்ல சி.எஸ்.ஆர்., கொடுத்துட்டாங்க,'' என்றாள் மித்ரா.
""ஓ! அப்புறம் என்னாச்சு,'' என்று பரபரப்பாக கேட்டாள் சித்ரா.
""இந்த விஷயம், தொகுதி எம்.எல்.ஏ., வான, சபாநாயகர் கவனத்துக்கு போயிருக்கு. கடுப்பான அவர், உதவி கமிஷனர், கோவில் செயல் அலுவலரை கூப்பிட்டு, ""பக்தர்கள் கேட்டா, பதில் சொல்ல வேண்டியதுதானே? உடனே போலீஸ்ல "கேஸ்' கொடுப்பீங்களா? உடனே அதை "வாபஸ்' வாங்குங்கனு சத்தம் போட்டிருக்காரு. ஆனா, சபாநாயகர் சொல்லியும் புகாரை வாபஸ் வாங்காம, செயல் அலுவலர் "லீவு' போட்டு போயிட்டாராம். இதனால "டென்ஷன்' ஆன சபாநாயகர், புது செயல் அலுவலரை நியமிக்க ஏற்பாடு செஞ்சிட்டு இருக்காராம்,'' என்று, சூடாக தகவல் பரிமாறினாள் மித்ரா.
"" மாவட்ட அமைச்சர் ஆய்வு செஞ்சப்ப, பேரூராட்சி செயல் அலுவலர்களை வறுத்து எடுத்துட்டாராமே?'' என்று, சித்ரா கேட்டாள்.
""ஆமா, திட்ட பணி முன்னேற்றம் பற்றி ஆய்வு செஞ்சப்ப, பேரூராட்சிகளில் ஒதுக்கிய பசுமை வீடுகள் கட்டாம இருக்கறத பாத்து "டென்ஷன்' ஆயிட்டாராம்'' என, மித்ரா தெரிவித்தாள்.
""பல பேரூராட்சிகளில் செயல் அலுவலர் இல்லாததால், பலரும் கூடுதல் பொறுப்பை கவனிக்கறாங்க. மாவட்டத்துக்கு பேரூராட்சி உதவி இயக்குனரே இல்லை. உள்ளாட்சி தேர்தல் முடியட்டும், எல்லா இடத் துக்கும் "ஆள்' போட்டுடலாமுன்னு, கலெக்டர்கிட்ட, அமைச்சர் சொல்லிட்டாராம்,'' என, சித்ரா கூறினாள்.
""அமைச்சர் ஆய்விலே, மேயர் கலந்துக்கலையாமே?''
""ஆமா. கலெக்டர், எம்.பி., எல்லோரும் கலந்துட்டாங்களாம். ஆனா, மேயர் கலந்துக்கலை. மாநகராட்சி ஆபீசுல அமைச்சர் ஆய்வு செய்யும்போது கூட, மேயருக்கு வேறென்ன வேலை இருக்குன்னு, கவுன்சிலர்களே திட்டி தீர்த்திருக்காங்க,'' என்றாள் மித்ரா.
""அதிருக்கட்டும். மாஜி' அமைச்சர், மேயர் கனவோட சென்னையில முகாமிட்டிருக்காரு. கட்சியே அறிவிக்கணும்னு, சென்னையில தங்கி, வேலை பார்த்துட்டு இருக்காரு''. என்ற சித்ரா, ""மறந்தே போச்சு. விநாயகர் சதுர்த்திக்கு, விநாயகர் வாங்க, போகணும்,'' என்று சொல்லியவாறே வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X