5,000 குழந்தைகளை கடத்திய கும்பல் கைது| Dinamalar

5,000 குழந்தைகளை கடத்திய கும்பல் கைது

Added : ஆக 30, 2016 | கருத்துகள் (24)
Advertisement
5,000 குழந்தைகளை கடத்திய கும்பல் கைது

புதுடில்லி: டில்லியை அதிர வைத்த குழந்தை கடத்தல் கும்பலை, போலீசார் கைது செய்தனர். டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீப காலமாகவே, அதிக அளவில் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்; இதை விசாரித்து வந்த போலீசார், அந்த கும்பலை நேற்று சுற்றி வளைத்தனர். தம்பதியான சாயிரா பேகம், 45, ஹுசைன், 50, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு உதவியாக செயல்பட்ட, மேலும் ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர்.
அதிர்ச்சி தகவல் : இவர்களில், தம்பதியின் தலைமையில் குழந்தை கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: இந்த கும்பல், அண்டை நாடான நேபாளத்தில் இருந்து, பெண் குழந்தைகளை கடத்தி வந்து விற்பனை செய்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் இருந்தும் குழந்தைகள் கடத்தப்பட்டு உள்ளனர்.
ரூ.100 கோடி : பல பகுதிகளில், குழந்தையை கடத்தி விற்பவர்களிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தைகளை வாங்கி, இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம், 100 கோடி ரூபாய் வரையில் இந்த கும்பல் சம்பாதித்துள்ளது. இதுவரை, 5,000 குழந்தைகளை கடத்திஉள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே கைதானவர்கள் : குழந்தை கடத்தலில் ஈடுபட்ட அந்த தம்பதி, 1990 மற்றும் 2001ம் ஆண்டுகளில் இரண்டு முறை கைதானவர்கள். போதிய ஆதாரம் இல்லாததால், இந்த வழக்குகளில் இருந்து விடுதலை ஆகிவிட்டனர். அதன் பின்னும், தொடர்ந்து குழந்தை கடத்தலில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.



வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
31-ஆக-201622:58:11 IST Report Abuse
வெகுளி பிடிபட்ட எட்டு பீடைகளையும் நீதிமன்றம் கொண்டு செல்லாமல் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றவர்களிடம் விட்டுவிட்டு போலீசார் வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும் ப்ளீஸ் ..... விசாரணை தானாய் நடக்கும்.... தீர்ப்பு சில மணித்துளிகளில் கிடைக்கும்...
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
31-ஆக-201620:58:11 IST Report Abuse
மதுரை விருமாண்டி // குழந்தை கடத்தலில் ஈடுபட்ட அந்த தம்பதி, 1990 மற்றும் 2001ம் ஆண்டுகளில் இரண்டு முறை கைதானவர்கள். போதிய ஆதாரம் இல்லாததால், இந்த வழக்குகளில் இருந்து விடுதலை ஆகிவிட்டனர். // - இப்பவும் அதே தானே செய்யப் போகிறீர்கள்.. லஞ்சம் வாங்கிட்டோ, இல்லை "பிள்ளைக் கறி" சாப்பிட்டோ விட்டு விட்டாய் போகிறார்கள். அதுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப்பு.. இந்தியாவில் சட்டம், காவல் துறை, நீட்டி எப்படி செயல்படுதுன்னு தெரியாதா? அது ஒழுங்கா இருந்திருந்தால் 5,000 குழந்தைகள் கடத்தப்படும் வரை அவை ம்ம்ம்ம் .. ரு பிடிங்கி கொண்டு இருந்திருக்குமா?
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
01-செப்-201604:12:39 IST Report Abuse
Anandan// டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீப காலமாகவே, அதிக அளவில் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர் // இது எந்த வகையான செய்தி தினமலர்? 1990 லிருந்து இவங்க பொழப்பு இதுதான். இதுல கெஜ்ரிவால் எங்க வந்தாரு. அட கண்ராவியே இதுதான் நடுநிலையான?...
Rate this:
Share this comment
Cancel
Ghazali Haniff - dammam,சவுதி அரேபியா
31-ஆக-201619:15:56 IST Report Abuse
Ghazali Haniff இவர்கள் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டதாக வேறு பத்திரிக்கை செய்தி. எது உண்மை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X