எல்லாம் நன்மைக்கே!

Added : ஆக 31, 2016 | கருத்துகள் (6)
Advertisement
எல்லாம் நன்மைக்கே!

நம் ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டு உணர்ந்து அறிதலை இ.எஸ்.பி (எக்ஸ்ட்ரா சென்செரி பிரசப்ஷன்) என்று அழைக்கிறோம். இதை 'ஏழாம் அறிவு' என்று கூட சொல்லலாம்.இ.எஸ்.பியின் மூலம் ஒருவர் கடந்த, நிகழ், எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ளலாம். இதை 1870ல் பிரிட்டனைச் சேர்ந்த சர்.ரிச்சார்ட் பர்ட்டன், டாக்டர்.ஜே.பி.ரைன் கண்டறிந்தனர். 1892ல் டாக்டர்.பால் ஜாய்ன் இதை தன் ஆராய்ச்சியில் அதிகம் உபயோகித்தார். ஒவ்வொரு மனிதனும் இந்த இ.எஸ்.பி., யை வளர்த்துக் கொள்ள முடியும். நம் அன்றாட நடவடிக்கையில் இந்த இ.எஸ்.பி., எப்படி வேலை செய்கிறது, அதனால் நமக்குக் கிடைக்கும் நன்மை என்ன என்பதை நாம் உணருவதில்லை. உதாரணமாக நாம் வெகு நாட்களாக, ஆண்டுகளாக சந்திக்காத, தொடர்பு கொள்ளாத ஒருவரைப் பற்றி கனவு கண்டிருப்போம். அடுத்த சில நாட்களில் அவரிடமிருந்து இமெயில், போன், நேரில் தொடர்பு கிடைத்திருக்கும். இது எல்லோருக்கும் இ.எஸ்.பி., சக்தி இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.
ஆழ்மனது : சிலருக்கு பிறவியிலேயே இந்த சக்தி அதிகமாக இருக்கும். தனக்கு இத்தகைய சக்தி இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்தும் இருப்பார்கள். நாமும் உறுதியுடன் முயற்சித்தால் இ.எஸ்.பி., சக்தி பெறலாம். ஏனென்றால் அதற்குத் தேவையான தனித்திறமை நம்முள் இருக்கிறது. இ.எஸ்.பி., விஷயங்கள் நிகழ நம் ஆழ்மனதை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இ.எஸ்.பி., சக்தியால் வாழ்வில் என்னவெல்லாம் சாத்தியமாகிறது என்று பார்ப்போம்:
டெலிபதி : ஒரு மனதிலிருந்து, இன்னொரு மனதுடன் தொடர்பு கொள்வது டெலிபதி எனப்படுகிறது. இது ஒருவழி, இருவழித் தொடர்பாக இருக்கலாம். இதற்கு துாரமும், நேரமும் தேவையில்லை. முனிவர்கள், யோகிகள் தங்கள் குருவிடமிருந்து டெலிபதி மூலம் அறிவும், ஞானமும் பெற்றிருக்கிறார்கள். டெலிபதிக்கு ஒளியை விட வேகம் அதிகம். மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் டெலிபதியைப் பயன்படுத்துகின்றன. மனிதர்களுக்கும் இந்த சக்தி இருக்கிறது.
உள்ளுணர்வு : காரணமில்லாமல் ஒரு விஷயத்தை சரியானது என்று தெரிந்து கொள்வதை உள்ளுணர்வு என்று சொல்லலாம். தினமும் வாழ்க்கையில் இந்த உள்ளுணர்வு நமக்கு கார் ஓட்டும் போது, நடக்கும் போது, குளிக்கும் போது, பிரார்த்தனை, தியானம் செய்யும் போது கூட வரலாம். கிரேக்க மேதை ஆர்க்கிமெடிஸ் குளிக்கும் போது தோன்றிய புதிய விஷயத்தை உடனே அரசரிடம் போய் சொல்ல 'யுரேகா' என்று கூவியபடி ஓடியதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். நமக்கு சவாலான, கஷ்டமான நேரங்களில் பளிச்சென ஒரு எண்ணம் தோன்றி, நாம் நிலைமையை சமாளித்திருப்போம். இவை நம் உள்ளுணர்வின் வழிகாட்டல் தான்.
சூட்சும திருஷ்டி : நம் உடலில் இருக்கும் கண்களினால் பார்க்க முடியாத விஷயங்களைக் கூட பார்க்கக்கூடிய திறமையே சூட்சும திருஷ்டி. கண்ணுக்குத் தெரியாத இடங்கள், சூழ்நிலைகள், பொருட்கள், மனிதர்கள், அவர்களுடைய ஒளி உடல், மனநிலை ஆகியவற்றைப் பார்க்க முடியும். பல சூட்சும திருஷ்டியாளர்கள் விண்வெளியில் உள்ள பல கோள்களைப் பற்றி கூறிய விஷயங்கள் ஆராயப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேஜாவு : இந்த பிரென்ஞ் மொழி சொல்லிற்கு தமிழில் பொருள் இல்லை. நீங்கள் புதியதாக ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது, ஏற்கனவே அந்த இடத்தைப் பார்த்திருப்பதாகத் தோன்றினால், ஒருவருடன் பேசும் போது ஏற்கனவே இந்த பேச்சைக் கேட்டிருப்பது போல் தோன்றினாலோ, அது தான் தேஜாவு. நம்முடைய முந்தைய பல பிறவியில், ஏதோ ஒரு பிறவியில் இது போன்ற நிகழ்ச்சி நடந்திருந்தால், நம் ஆழ்மனது அதை ஞாபகப்படுத்தும்.
டெலிகைனசிஸ் : மனதின் சக்தியால் துாரத்திலிருக்கும் பொருட்களை அசைக்க, இயக்க முடியும். இது விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள, விளக்கம் தர முடியாத விஷயமாக இருக்கிறது. 1973ல் உரிஜெல்லர் என்பவர் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், மனதின் சக்தியால் துாரத்திலிருந்தே ஒரு சாவியை வளைத்துக் காட்டினார். ஒரு குறிப்பிட்ட மனநிலையில் எதிர்காலத்தில் வரப்போகும் விஷயங்களை முன்னரே உணர்தல் முன்னுணர்வாகும். சிலர் தங்கள் குடும்பத்தில் வரப்போகும் விபத்து, இறப்பை கனவில் கண்டிருப்பர். சிலருக்கு இந்த முன்னுணர்வு பிரார்த்தனை, தியானத்தின் போது கிடைக்கக் கூடும்.
இ.எஸ்.பி., திறமைகளை வளர்ப்பதற்கான வழிமுறைகள்: நம் ஆழ்மனதுடன் நாம் தொடர்பு கொள்ள, பல வழிகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது, ஆக்கப்பூர்வமாக தோற்றப்படுத்துதல்; ஒருவருடைய கற்பனை சக்தியை கொண்டு ஆக்கப்பூர்வமாக தோற்றப்படுத்தும் போது நாம் வெற்றிகளைக் கவர்ந்திழுப்பவர்கள் ஆகிறோம். நம் எண்ணங்களின் சக்தியையும், உணர்வுகளின் சக்தியையும், ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்தும் போது, அந்த சக்தி பிரபஞ்சத்தை எட்டி அங்கிருந்து அந்த எண்ணங்களுக்கு ஏற்ப விஷயங்களை நமக்குப் பெற்றுத்தரும்.
புதிய விஷயங்கள்: நம் அன்றாட வாழக்கையில் பழக்க வழக்கம் காரணமாக தினசரி செய்ததையே ஒவ்வொரு நாளும் அதேபோல் மீண்டும், மீண்டும் செய்கிறோம். இதை தவிர்த்து தினமும் புதுப்புது விஷயங்கள் கற்க, கேட்க, வேண்டும். நம் அன்றாட வேலைகளைக் கூட புது மாதிரி செய்ய வேண்டும். இதுவும் நம் ஆழ்மனதை அணுகுவதற்கு துணைபுரியும். நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே நினைக்கவோ, பேசவோ செய்வது என்று உறுதியாக இருக்க வேண்டும். எல்லாம் நன்மைக்கே என்று செயல்பட வேண்டும். உங்கள் நோக்கத்திற்கும், குறிக்கோளை அடைவதற்கும் உதவும் புத்தகங்களைத் தேந்தெடுத்து, அவற்றை இரவு துாங்கும் முன் வாசியுங்கள். துாங்கும் முன், நாம் பெறும் தகவல்கள் நம் ஆழ்மனம் செயல்படுவதற்குத் தேவையான செய்திகளை ஆழ்மனதிற்குக் கொடுக்கும்.
மெஸ்மெரிஸம் : மெஸ்மெரிஸம் என்பது பிரான்ஸ் அன்டன் மெஸ்மர் என்பவரால் கண்டறியப்பட்டது. அவர் மனிதர்களின் உடலுக்குள் காந்த சக்தி மிகுந்த திரவம் ஓடுவதாக நினைத்தார். அதன் ஓட்டம் தடைபடும் போது நோய்கள் உண்டாவதாகவும், இதனால் காந்த சக்தி கொண்டு சரிப்படுத்தினால், நோய்கள் சரியாகிவிடும் என்றும் நினைத்தார். பின், காந்த சக்தியை பயன்படுத்தாமல் மனதின் சக்தி கொண்டு குணப்படுத்த முடியும் என்று கண்டார்.ஹிப்னாடிஸத்தை மெஸ்மெரிசத்திலிருந்து வேறுபடுத்தி, பழக்கத்தில் கொண்டு வந்தவர் ஜேம்ஸ் பிரைய்டு. இதில் சிகிச்சை அளிப்பவர் நோயாளியிடம் பேசி சில கட்டளை, யோசனைகளைக் கூறி நோயாளியின் மனதில் குறிப்பிட்ட எண்ணங்களை துாண்டிவிட்டு, ஆழ்ந்த உறக்க நிலைக்கு கொண்டு செல்கிறார். பின் நோயாளியின் ஆழ்மனதிலிருக்கும் விஷயங்களை பல கேள்விகள் கேட்பதன் மூலம் வெளிக்கொண்டு வருகிறார். இது போன்ற சூழ்நிலைகளில் தான் பலர் தனக்கு தெரியாத மொழியிலும், தெரியாத நபர்கள் குறித்தும் பேசுகின்றனர்.நம் ஆழ்மனம் ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டு அறிவு, மனம் சார்ந்த தகவல்களைப் பெறுவதால், நம்முடைய இ.எஸ்.பி., சக்தி துாண்டி விடப்பட்டு செயல்பட ஆரம்பிக்கும்.ஆழ்மனதின் உதவியுடன் போட்டி, பொறாமை, வருத்தம், பயம், மன அழுத்தம் போன்ற எதிர்மறை விஷயங்களைக் களைந்து விட்டு, துாய்மையான மனதுடன் முயற்சியும், பயிற்சியும் செய்தால் இ.எஸ்.பி., திறமைகளை பெற்று சமூகத்திற்கு நன்மை செய்ய முடியும்.
- ஜெ. விக்னேஷ் சங்கர்மனநல ஆலோசகர், மதுரை.

99525 40909

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ilavarasan - Chennai,இந்தியா
31-ஆக-201615:59:39 IST Report Abuse
Ilavarasan மனோ பலம் எல்லை அற்றவை.மனதுக்கு எதையும் தாங்கும் சக்தி உண்டு .
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
31-ஆக-201614:07:55 IST Report Abuse
Ramaswamy Sundaram மனதை அழுக்கின்றி தூய்மையாக வைத்திருந்தால் இவை எல்லாம் சாத்தியமே.....எல்லோரும் எப்போதும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே ....என்ற நம் தமிழ் வாழ்த்துமொழியை நினைவு கூறுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
razik - bangkok,தாய்லாந்து
31-ஆக-201612:15:20 IST Report Abuse
razik சி.ஐ.டி. சங்கர் போல உங்களை E.S.P. சங்கருன்னு சொல்லலாம்.உங்கள் பதிவில் ஏற்புடையதும், ஏற்க முடியாததும் மேலும் சந்தேகமானதும் உள்ளது .இருப்பினும் உங்கள் ஆக்கதிட்கு நன்றி எல்லாம் நன்மைக்கே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X