‛இனிமேல் ஜாக்கிரதை': அதிமுக, திமுகவுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

‛இனிமேல் ஜாக்கிரதை': அதிமுக, திமுகவுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

Updated : ஆக 31, 2016 | Added : ஆக 31, 2016 | கருத்துகள் (32)
Advertisement
‛இனிமேல் ஜாக்கிரதை': அதிமுக, திமுகவுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சென்னை : தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பதில் எதிர்காலத்தில் இன்னும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பது பற்றி அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தன. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 'பெண்கள் ஸ்கூட்டர் வாங்க 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும், 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.
இதேபோல் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. இதுபோன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து விளக்கம் அளிக்கும்படி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு தனித்தனியாக தலைமை தேர்தல் கமிஷன் மே 14-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இரு கட்சிகளும் விளக்கம் அளித்தன.
இந்நிலையில், தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் தேர்தல் கமிஷனின் உத்தரவு தற்போது வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதியிட்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள அந்த உத்தரவில், சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க. தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாகவும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்கள் பற்றி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளது.மேலும், எதிர்காலத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பதில் இன்னும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இதேபோல் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள தி.மு.க. தொடர்பான உத்தரவிலும், எதிர்காலத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பதில், குறிப்பாக தேர்தல் அறிக்கை விஷயத்தில் இன்னும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை இப்போது கூறியிருந்தபோதிலும், அதே வழிமுறைகள் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar M - chennai ,இந்தியா
31-ஆக-201618:37:17 IST Report Abuse
Shankar M தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையம் தனது கடமையிலிருந்து தவறிவிட்டது என்பதற்கு தேர்தல் ஆணையத்தின் இந்த எச்சரிக்கை கடிதம் ஒன்றே சாட்சி. அன்று வேடிக்கை பார்த்துவிட்டு இன்று எச்சரிப்பது எந்த ஒரு சமூக சிந்தனையுள்ள மனிதனாலும் ஜீரணிக்கமுடியாது.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
01-செப்-201603:35:01 IST Report Abuse
Anandan100% உண்மை...
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
31-ஆக-201618:06:51 IST Report Abuse
Balaji இனி இலவசங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும்..... அதாவது எந்த கட்சியும் தேர்தல் அறிக்கையில் இலவசமாக எதையும் அறிவிக்க கூடாது என்று கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.... அப்படி செய்தால் தான் இதுபோன்ற பொருப்பற்ற தன்மையில் தயாராகும் தேர்தல் அறிக்கைகளை கட்டுப்படுத்த முடியும்....... இல்லையென்றால் இதே போலத்தான் தொடர்ந்து எந்தவிதமான நிதியாதாரத்தை பற்றி கவலை கொல்லாமல் இலவசத்தை காட்டி மக்களை மயக்குவது தொடந்து கொண்டு தான் இருக்கும்..... வேண்டுமானால் ஆட்சிக்கு வந்த பிறகு இலவச திட்டங்களை அறிவித்து செயல்படுத்தலாம் என்றாவது நடைமுறையை மாற்றவேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.......
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
31-ஆக-201616:46:16 IST Report Abuse
arabuthamilan இந்தியாவில் நடைமுறையில் இருக்கிற சட்டங்கள், விதி முறைகள் எல்லாம் தமிழ்நாட்டில் ஓடுகிற பேரூந்து போல. எல்லாம் ஓட்ட உடைசல்கள். தூக்கி குப்பையில் போடவேண்டும் நம் சட்டங்களை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X