பெங்காலி ஸ்வீட் உபாஷனா ராய்| Dinamalar

பெங்காலி 'ஸ்வீட்' உபாஷனா ராய்

Added : செப் 04, 2016
Share
உன் விழிகள்... விண்மீன் விழுங்கிய மின்னலின் ஒளிகள். வண்ணம்... வெண்ணிற நுரைகளுடன் கரை சேரும் கடலின் அலைகள். சிரிப்பு ஜீராவில் ஊறிய ஜிலேபியின் இனிப்பு. தேகம்... அளவில்லா அழகு நிரம்பிய அலாவுதீன் விளக்கு, இதழ்... அந்தி வான சிவப்பை அள்ளி பூசிய மேகத் திரை... என கவிஞர்கள் பாடத் தகுதியான 'பெங்கால் பியூட்டி' நடிகை உபாஷனா ராய், மலராய் மலர்ந்து பேசிய பேட்டி...* உபாஷனா ராய்...பெயரே
பெங்காலி 'ஸ்வீட்' உபாஷனா ராய்

உன் விழிகள்... விண்மீன் விழுங்கிய மின்னலின் ஒளிகள். வண்ணம்... வெண்ணிற நுரைகளுடன் கரை சேரும் கடலின் அலைகள். சிரிப்பு ஜீராவில் ஊறிய ஜிலேபியின் இனிப்பு. தேகம்... அளவில்லா அழகு நிரம்பிய அலாவுதீன் விளக்கு, இதழ்... அந்தி வான சிவப்பை அள்ளி பூசிய மேகத் திரை... என கவிஞர்கள் பாடத் தகுதியான 'பெங்கால் பியூட்டி' நடிகை உபாஷனா ராய், மலராய் மலர்ந்து பேசிய பேட்டி...* உபாஷனா ராய்...பெயரே வித்தியாசமாக இருக்கிறதேநான் 'வெர்ஸ்ட் பெங்கால்' பொண்ணு... படிச்சதெல்லாம் பெங்களுரூ தான். நடிக்க வருவதற்கு முன் சாப்ட்வேர் இன்ஜினியரா இருந்தேன்.* முதல் படம்...கன்னடத்துல வெளியான 'கலர்ஸ் இன் பெங்களுரூ'. முதல் படமே கலர்புல் அனுபவங்களை கொடுத்தது. ஹேப்பியா நடிச்சேன்.* சினிமா தவிர...விளம்பரங்கள், மாடலிங், ரேம்ப் வாக், பிராண்ட் அம்பாசிடர், குறும்படங்கள் என பிசியா நடிச்சுகிட்டு இருக்கேன்.* நீங்கள் மிஸ் இந்தியாவாமே?வாவ்! இட்ஸ் அமேஸிங்... 'எலைட் மிஸ் இந்தியா ஏசியா 2015'ல 26 பேர் கலந்துகிட்டாங்க. அதுல நான் தான் டைட்டில் வின்னர். அப்புறம் என்ன, வெறும் ஹீரோயினா இருந்த நான், 'மிஸ் இந்தியா' ஹீரோயினா மாறிட்டேன்!* 'மிஸ் இந்தியா' ஆக நம்மூர் பெண்களுக்கு டிப்ஸ் தாங்களேன்!மிஸ் இந்தியாவுக்கு வெறும் அழகு மட்டும் இருந்தா போதாது. பெர்சனாலிட்டி, டயட், டான்ஸ், ஜெனரல் நாலேட்ஜ் எல்லாம் தெரிஞ்சுருந்தா தான் போட்டியில பங்கேற்க முடியும்.* தமிழுக்கு எப்போ வர்றீங்க?இதோ வந்துட்டேன்... 'இது தாண்டா போலீஸ்' டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன், மதன் இயக்கி, ஹீரோவா நடிக்குற '88' படத்துல அவருக்கு ஜோடியா நடிக்கிறேன்.* 88 கதையையும் சொன்னீங்கன்னா..?டெக்னாலஜி கிரைம், திரில்லர் கதை. ஒரு பக்கம் திரில், மறுபக்கம் காதல், காமெடி கலகலப்பாய் களைகட்டும். கதை சொல்ல மாட்டேன். படம் பாருங்கள்.* அதில் உங்கள் கேரக்டர் திரில்லர் கேர்ள் தானே?'சந்தோஷ் சுப்பிரமணியம்' படத்தில் வரும் ஜெனிலியா மாதிரி துருதுருப்பான 'பப்ளி' கேரக்டர்... ஜாலியான கிட்ஸ் ஸ்கூல் டீச்சரா நடிச்சிருக்கேன்.* கன்னடம் டூ தமிழ்...ரொம்ப வித்தியாசமா இருக்கு, நல்லா நடிக்கணும்ங்குற பொறுப்பு அதிகமா வந்திருக்கு. எனக்கு தமிழ் கொஞ்சம் தான் தெரியும்... ஆனால், பொறுமையா சொல்லிக் கொடுத்து நடிக்க வைக்குறாங்க.* ரசித்த தமிழ் படங்கள்...'நானும் ரவுடி தான்', 'கபாலி'.* அப்ப...பிடிச்ச நடிகர் ரஜினி தானா?பியூட்டி குயின் நயன்தாரா, ரிஸ்க் எடுத்து பல 'கெட்டப்' காட்டும் கமல், விக்ரம் ரொம்ப, ரொம்ப பிடிக்கும்.* மதுரைக்கு வந்த அனுபவம் எப்படி?ஹூம்ம், செம ஊரு... நிஜமாவே டெம்பிள் சிட்டின்னா மதுரை தான். ஷூட்டிங் வரும் போதெல்லாம் 'டெய்லி' இட்லி தான் சாப்பிடுவேன். 'யம்மி டேஸ்டி'!* அடுத்த படம்...இன்னும் முடிவு பண்ணல, சீக்கிரம் அறிவிப்பு வரும்...facebook.com/upasnarc

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X