'முண்டாசுபட்டி' படத்தில் கதாநாயகியின் முறைமாமன் சண்முகமாக, தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஆதேஷ், அதற்குமுன்பாக 40 படங்கள் வரை நடித்துள்ளார்.சாமியில் துவங்கிய அரிதார பயணம் தொடர்ந்து கோவில், மண்ணின் மைந்தன், மலைக்கோட்டை, அறிந்தும் அறியாமலும், மம்பட்டியான், இங்கிலீஷ்காரன், இந்திரலோகத்தில் நா. அழகப்பன், குருவி, வஜ்ரம், விந்தை, ஜன்னலோரம் வரை நீண்டு கொண்டே செல்கிறது.தற்போது, மிஷ்கினின் சவரக்கத்தியில் முக்கிய கதாபாத்திரத்திலும் சீமானின் சீமாட்டி மரகத நாணயன், சாயம் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் ஆதேஷ் பாலா, தனதுபயணங்களை பகிர்ந்துகொண்டார்.சென்னை பிரசிடென்சி கல்லுாரியில் பி.ஏ., கார்ப்பரேட் செக்ரட்டரி ஷிப் படித்தேன். என் அப்பா சிவராமன், துாறல் நின்னு போச்சு, நானே ராஜா நானே மந்திரி, செந்துாரப்பூவே, காதல்பரிசு, மல்லுவேட்டி மைனர் உட்பட 300படங்களில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.அம்மா சுப்புலட்சுமி, ஆரம்ப காலத்தில் விசுவின் பெண்மணி அவள் கண்மணி, வேடிக்கை எனக்கு வாடிக்கை. சகலகலா சம்பந்தி படங்களிலும், பாக்யராஜ், டி.ராஜேந்தர் படங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். இதுவரை 400 படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார். சீரியல்களிலும் தற்போது தெய்வமகள் உட்பட மெகா சீரியல்களுக்கு டப்பிங் குரல் கொடுத்து வருகிறார்.அம்மா, அப்பா இருவருமே திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பதால் நானும் மேடை நாடகங்கள் வழியாக என் பயணத்தை துவங்கினேன். பட்ஜெட் லோகநாதனின் எமலோகம் ஹவுஸ்புல், இயக்குனர் அகஸ்டினின் மேடை நாடகங்களில் நடித்தேன்.டைரக்டர் பாக்யராஜின் கதையின் கதை சீரியலில் அறிமுகமானேன்.பொன்னியின் செல்வன் சீரியலில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்திற்கு தேர்வானதை, பெருமையாக நினைக்கிறேன். தற்போது பொண்டாட்டி குறும்படத்தில் கதையின் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறேன். பெண்களை பெருமைப்படுத்தும் விஷயமாக, குடும்ப கட்டமைப்பை வலியுறுத்தும் விதத்தில், இக்குறும்படம் இருக்கும்.பெரிய கலைஞனாக, கதாநாயகனாக, எந்த கதாபாத்திரத்திற்கும் பொருந்துபவனாக இருக்க வேண்டும். இந்த கதாபாத்திரத்திற்குதான் சரியானவன் என்ற ஒரு கட்டத்திற்குள், அடங்குவதில் எனக்கு விருப்பமில்லை. முண்டாசுபட்டி முறைமாமன் சண்முகமாக நடித்த போது, அந்த படம் பெயர் வாங்கித் தந்தது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE