பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'தூய்மை இந்தியா' திட்ட
தூதராகும் வீராங்கனைகள்

புதுடில்லி:மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டத்தை பிரபலப்படுத்தும் பிரசாரத்திற்கு, ரியோ ஒலிம்பிக்கில் சாதனை புரிந்த, பி.வி. சிந்து, சாக் ஷி மாலிக் உள்ளிட்ட மூவரை பயன் படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

 'தூய்மை இந்தியா' திட்ட தூதராகும் வீராங்கனைகள்

இந்தியாவில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 'துாய்மை இந்தியா' இயக்கத்தை, 2014ல், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நாடு முழுவதும், 4,000 நகரங்களில், தெருக்களை

சுத்தப்படுத்துவதும், சுகாதார கட்டமைப்பை மேம் படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

இதை மக்களிடம் பிரபலப்படுத்தும் விதமாக, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்,சச்சின் டெண்டுல் கர்,அனில் அம்பானி உள்ளிட்ட பல்துறை சார்ந்த, 27 பேர் துாதர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மின்டன் வீராங்
கனை, பி.வி.சிந்து, மல்யுத்தப் போட்டியில் வெண் கலப்பதக்கம் வென்ற, சாக்ஷி மாலிக் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்த, தீபா கர்மாகர் ஆகியோரையும், துாய்மை இந்தியா இயக்கபிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மத்திய சுகாதாரம் மற்றும் குடிநீர் துறை செயலர் பரமேஸ்வரன் கூறுகையில், ''ரியோ ஒலிம்பிக் போட்டியில் சாதனை புரிந்த இளம் வீரங்கனைகளை, துாய்மை இந்தியா

Advertisement

இயக்கத்தின் பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொள்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
இதுதொடர்பாக, மத்திய விளையாட்டுத் துறையை விரைவில் தொடர்பு கொள்ள முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.

இவர்கள் மூவருக்கும், சமீபத்தில், 'ராஜிவ் கேல் ரத்னா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghu - MUMBAI,இந்தியா
06-செப்-201613:57:23 IST Report Abuse

RaghuWhat can these girls do for swach in india. Can they bring discipline among our people. Already what was done by Amitab, Sachin and Ambani. The transformation for swach can come only by punishment because people and our police are habituated to in discipline for many years. The Swach India seems to be a political stunt and only peoples' cess money is collected- Nothing noteworthy on swach is seen. Many areas in fact have gone from bad to worse

Rate this:
s viswanathan - Hyderabad,இந்தியா
05-செப்-201621:56:35 IST Report Abuse

s viswanathanஅருமையான திட்டம். மூன்று மகளிர்கல் வெற்றி அடைய செய்வார்கள். வாழ்த்துக்கள்

Rate this:
Kannan - velur,இந்தியா
05-செப்-201621:21:57 IST Report Abuse

Kannanஆம் மக்கள் தங்கள் சுற்றுப்புறம் நாறி கிடக்கவே விரும்புகின்றனர். யாரும் ஒன்றும் செய்ய முடியாது....

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X