விநாயகர் வழிபாடும்.... தமிழக நாணயங்களும்

Updated : செப் 05, 2016 | Added : செப் 05, 2016 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: இந்திய நிலப்பரப்பு முழுவதும், முதன்மைக் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் வழிபாடு, தமிழகத்திற்கு வந்தது குறித்து, இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஒன்று, சங்க காலத்திலேயே, தமிழகத்தில் விநாயகர் வழிபாடு இருந்தது என்பது. மற்றொன்று, பல்லவர் காலத்திற்குப் பின்னர் தான், விநாயகர் வழிபாடு தமிழகத்திற்கு வந்தது என்பது. இந்த இருவேறு கருத்து நிலை குறித்து, நாணய வழி
விநாயகர் வழிபாடும்.... தமிழக நாணயங்களும்

சென்னை: இந்திய நிலப்பரப்பு முழுவதும், முதன்மைக் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் வழிபாடு, தமிழகத்திற்கு

வந்தது குறித்து, இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

ஒன்று, சங்க காலத்திலேயே, தமிழகத்தில் விநாயகர் வழிபாடு இருந்தது என்பது. மற்றொன்று, பல்லவர் காலத்திற்குப் பின்னர் தான், விநாயகர் வழிபாடு தமிழகத்திற்கு வந்தது என்பது. இந்த இருவேறு கருத்து நிலை குறித்து, நாணய வழி வரலாற்று ஆய்வாளர் ரா.மன்னர் மன்னன் பகிர்ந்து கொண்டது:

'நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்; புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை;

கடவுள் பேணேம் என்னா' என்னும், புறநானுாற்றுப் பாடலின், 106வது அடியைக் கொண்டு, எருக்கம் பூவைக்கொண்டு வணங்கும் கணபதி வழிபாடு, சங்க காலத்திலேயே தமிழகத்தில்

இருந்துள்ளது என, தமிழ் ஆய்வாளர்களில் ஒருசாரர் கூறுகின்றனர். ஆனால், அதை உறுதிபடுத்துவதற்கான துணைச் சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.

கி.பி., 5ம் நுாற்றாண்டு

கி.பி., 630 - 668 வரை தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னனான, முதலாம் நரசிம்மவர்மன், வாதாபியை வென்று, தமிழகத்திற்கு விநாயகரைக் கொண்டு வந்தான் எனவும், தமிழகத்தில் நிலவும் பிள்ளையார் வழிபாட்டுக்கு பல்லவர்களே காரணமானவர்கள் எனவும் கூறப்பட்டு வந்தது.

பின், பிள்ளையார் பட்டி விநாயகர்,

வாதாபி விநாயகருக்கும் முந்தையவர்

என்பதை நிறுவும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில், முந்து தமிழ்க் கல்வெட்டுடன், மூத்த கணபதியின் சிற்பம் ஒன்று, சமீபத்தில் விழுப்புரம்

மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஆல கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது, கி.பி., 5ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என, வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கொங்கு சேரர்கள்

ஒருபக்கம், விநாயகர் வழிபாட்டின் துவக்கம் பின்னோக்கி செல்வதைப் போலவே, விநாயகர்

வழிபாடு வலுப்பெற்ற காலமும், வரலாற்றில் பின்னோக்கியே செல்கிறது.

இப்படி விநாயகர் வழிபாடு குறித்த ஆய்வு, தமிழகத்தில் நிறைவு பெறாமல்

உள்ளது. இந்த நிலையில், கோவில்களையும்

கல்வெட்டுகளையும் மட்டுமே

அடிப்படையாகக் கொண்டு, ஆய்வு செய்யும் வரலாற்று ஆய்வாளர்கள்,

விநாயகர் உருவம் உள்ள நாணயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அப்போது தான், தென்னிந்தியாவில் விநாயகர் வழிபாட்டின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

வடஇந்தியாவில் இருந்து விநாயகர் வழிபாடு தென்னிந்தியாவிற்கு வந்ததாக கூறப்படும் நிலையில், வட இந்தியாவை விட, தென்னிந்தியாவிலேயே அதிகளவிலும், அதிக வகையிலும், விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன.

கி.பி., 15 - 16ம் நுாற்றாண்டுகளில், இன்றைய கோவைப் பகுதியைத்

தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த, கொங்கு சேரர்கள், இந்தியாவிலேயே, முதன்முதலில், விநாயகர் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டனர்.

அவர்களைத் தொடர்ந்து, தென்னிந்தியாவில் மிகப் பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசும், அதன்பின் தலையெடுத்த மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக்கர்களும், மராட்டியர்களும், ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதிகளும் விநாயகர் நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள், பலவித விநாயகர்

உருவங்களை பொறித்தனர். அது,

விநாயகர் வழிபாட்டிற்கு அவர்கள் அளித்த முக்கியத்துவத்தையும், மக்களிடம் கணபதி உருவத்திற்கு கிடைத்த வரவேற்பையும் காட்டுகிறது.

இஸ்லாமிய அரசும் ஆநிருத்த கணபதியும்

கி.பி., 1693 முதல் 1801 வரை, இஸ்லாமிய அரசர்களான ஆற்காடு நவாபுகளின் ஆட்சி, தமிழகத்தில் வலுவாக இருந்தது.

அவர்களும், தமிழக நாணயங்களில்

கணபதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அறிந்தனர். சமய நல்லிணக்கத்திற்காக, அவர்களின் நாணயங்களில் விநாயகர்

உருவங்களை பொறித்தனர்.

வழக்கமாக, கோவில்களிலும், நாணயங்

களிலும் அமர்ந்த நிலையில் இருந்த

விநாயகருக்குப் பதிலாக, நிற்கும்

விநாயகரான ஆநிருத்த கணபதி உருவத்தை முதன்முதலில் நாணயங்களில் பொறித்தவர்கள், ஆற்காடு நவாபுகள் தான். அதே

நாணயத்தின் பின்புறம், 'நவாபு' என,

தங்களின் பெயரையும் பொறித்தனர்.

இதுவரை, தமிழகத்தில், 50க்கும்

மேற்பட்ட வகைகள் கொண்ட, விநாயகர் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆனால், வட இந்தியாவிலோ ஒன்றிரண்டு

வகை விநாயகர் நாணயங்களே கிடைத்து உள்ளன. என்றாலும், அவை எந்த அரசால் வெளியிடப்பட்டவை என்பதை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது ஒரு மாபெரும் வரலாற்று முரணாக உள்ளது. இதனால், வட இந்திய நாணய சேகரிப்பாளர்களும், ஆய்வாளர்களும், தென்னிந்தியாவில் கிடைக்கும் விநாயகர் நாணயங்களை மிகவும் முக்கியத்துவம் அளித்து சேகரித்து வருகின்றனர்.

அதனால், தென்னிந்தியாவில்,

நாணயங்களின் வழியாகவும் விநாயகர் வரலாற்றை ஆராய்ந்தால், பல புதிய

உண்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
05-செப்-201611:32:35 IST Report Abuse
Rajendra Bupathi அது சரி விநாயகர் ஒரு சித்தருன்னு சொல்றாங்க உண்மையா ?தெரிஞ்சா யாராவது சொல்லுங்களேன்/
Rate this:
Cancel
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
05-செப்-201611:06:27 IST Report Abuse
Ajaykumar நல்ல தகவல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X