பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : செப் 05, 2016
Advertisement

பயன்படாத நிழற்கூடம்; வரிப்பணம் வீண்: பள்ளிபாளையம் அடுத்த, ஓடப்பள்ளி பிரிவு சாலையில், பயணிகள் வசதிக்காக, சில ஆண்டுகளுக்கு முன் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. இந்த நிழற்கூடம், சாலையில் இருந்து, சற்று தள்ளி உள்ளே இருப்பதால், பயணிகள் பயன்படுத்துவதில்லை. இதனால், காலப்போக்கில் அது சிதலமடைந்து விட்டது. மேற்கூரை உடைந்து விட்டது. தற்போது, எதற்கும் பயன்பாடத நிலையில் உள்ளது. மாற்று இடத்தில், நிழற்கூடம் அமைக்க வேண்டும்.
சாலையை சீரமைக்க பகுதியினர் கோரிக்கை: வெண்ணந்தூர் டவுன் பஞ்சாயத்து, 13வது வார்டு பகுதியில், சர்க்கார் தோப்பு செல்லும் சாலையை, தார் சாலையாக மாற்ற, பல மாதங்களுக்கு முன் வெட்டி, மண் கொட்டப்பட்டது. அதற்கு மேலே, ஜல்லி கற்களும் கொட்டப்பட்டு, சமன்படுத்திவிட்டனர். ஆனால், இது வரை தார்ச்சாலை அமைக்கவில்லை. மழைக் காலங்களில், பகுதிவாசிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, விரைவில் தார்ச்சாலை அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயன்பாட்டுக்கு வராத தொட்டி: ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து, 15வது வார்டு, கந்தநகர் சந்தைப்பகுதியில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, எட்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. ஆனால், ஐந்து ஆண்டுகள் ஆகியும், பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், அப்பகுதி மக்கள், குடிநீரின்றி தவித்து வருகின்றனர். மேலும், பயன்படுத்தப்படாமல் உள்ளதால், தொட்டியின் கீழே குப்பையை கொட்டுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

விண்ணப்பம் எழுத தடை செய்யணும்! குமாரபாளையம் தாலுகா அலுவலகம், நகராட்சி அண்ணா திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்துக்கு, எழுத, படிக்க தெரியாதவர்கள், பெருமளவில் மனு கொடுக்க வருவதால், ஏராளமானோர் மனு எழுதி தரும் பணியை, அலுவலகம் அருகே உள்ள நகராட்சி நடுநிலை பள்ளி எதிரில் எழுதித் தருகின்றனர். ஒரு சிலர், பள்ளி வகுப்பறை அருகிலேயே, கூட்டம் சேர்த்திக் கொண்டு மனு எழுதி தருகின்றனர். இது, பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையூறாக உள்ளது.

தெருவிளக்கை சரி செய்யணும்! நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில், கிழக்கு தெரு வழியாக, அண்ணா காலனி செல்லும் வழியில், ஒரே வீதியில், ஐந்து தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால், இப்பகுதி மக்கள், பெரிதும் அவதிப்படுகின்றனர். இரவு, 7 மணிக்கு மேல், இப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் நடமாட பயப்படுகின்றனர். எனவே, எரியாத விளக்குகளை சரி பார்த்து, எரிய விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை புகார் கொடுத்தும் பலனில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X